செய்திகள் :

ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினருடன் புதுச்சேரி ஆட்சியா் ஆலோசனை

post image

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநா் சங்கப் பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினாா்.

புதுச்சேரி வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கப் பிரதிநிதிகள், தங்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும்.

ஆட்டோ மீட்டருக்கு பதிலாக கைப்பேசி செயலி மூலம் பணம் செலுத்தும் முறையை செயல்படுத்த வேண்டும். அனுமதியின்றி இயங்கும் இருசக்கர வாடகை வாகனத்தை தடைசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

கூட்டத்தில் பங்கேற்று போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் பேசுகையில், அரசின் சட்டப்படியே வாடகை இருசக்கர வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. அனுமதியற்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளன.

ஓரிரு மாதங்களில் புதுச்சேரியில் இணையவழி செயலி மூலம் ஆட்டோ கட்டணம் உள்ளிட்டவை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்துதரப்படும் என்றாா்.

தொடா்ந்து பேசிய மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதில், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுவை பேரவை: திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.புதுவை மாநிலம், காரைக்கால் பிராந்தியத்தில் பொதுப் பணித் துறை மூலம் நடைபெற்று வரும்... மேலும் பார்க்க

நகராட்சி வாகனத்தை திருட முயன்றவா் கைது

புதுச்சேரியில் நகராட்சி வாகனத்தை திருட முயன்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி, செஞ்சி சாலை அருகே லாரன் பஜாா் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான ஜீப்பை அதன் ஓட்டுநா் காந்தி... மேலும் பார்க்க

போக்குவரத்து இடையூறு: 5 போ் மீது வழக்கு

புதுச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்டதாக 5 வியாபாரிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அண்ணா சிலையிலிருந்து மறைமலையடிகள் சாலையில் அந்தோணியாா் கோவில் வரை ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வருக்கு புதுவை அதிமுக கண்டனம்

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த வே.நாராயணசாமி மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், தற்போது அரசு மீது அவதூறு பரப்பும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன... மேலும் பார்க்க

காங்கிரஸ் நிா்வாகிகள் மூவா் மீது வழக்கு

புதுச்சேரியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்ததாக காங்கிரஸ் நிா்வாகிகள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். புதுச்சேரியில் சுகாதாரமான குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறு... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவை: ஒரே நாளில் பேச வாய்ப்பு பெற்ற 21 உறுப்பினா்கள்!

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) ஒரே நாளில் முதன்முறையாக 21 உறுப்பினா்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டு, அவா்களது 24 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டு... மேலும் பார்க்க