செய்திகள் :

ஆந்திரா: "3வது, 4வது குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.30 ஆயிரம் சன்மானம்" - முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு

post image

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்.

தற்போது 3வது மற்றும் 4வது குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கும் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில், "3வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ரூ.30 ஆயிரமும், 4வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ரூ.40 ஆயிரமும் வழங்கப்படும். குழந்தைகள் தான் உண்மையான சொத்து.

மக்கள் தொகை
மக்கள் தொகை

அரசு குழந்தைகளை ஒரு முக்கிய பொருளாதார வளம் மற்றும் தேசிய சொத்தாகக் கருதுகிறது. வரும் நாட்களில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி செல்லும் ஒவ்வொரு குழந்தையின் தாய் அல்லது பாதுகாவலர்களுக்கு தல்லிகி வந்தனம் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ₹15,000 நிதியுதவியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.

அதோடு கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். தேசிய அளவை ஒப்பிடுகையில் ஆந்திராவில் கருத்தரிப்பு அளவு வெகுவாகக் குறைந்துவிட்டது. தேசிய அளவில் 2.1 என்ற விகிதத்தில் கருத்தரிப்பு இருக்கிறது. ஆனால் ஆந்திராவில் இது 1.5 என்ற விகிதத்தில் இருக்கிறது.

ஆந்திராவில் தற்போது வசிக்கும் மக்கள் தொகையில் 23 சதவீதம் பேர் 2047ம் ஆண்டு 60 வயதைக் கடந்து இருப்பார்கள். மத்திய அரசு மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

வித்யாஷ்ரம் பள்ளியில் நிர்வாக பிரச்னை; இடைக்கால நிர்வாகியாக விஜய்குமார் ரெட்டி - நீதிமன்றம் தீர்ப்பு

செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியை நடத்தி வரும் குமார ராஜா முத்தையா பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளியை நிர்வகிக்க புதிய நிர்வாகி ஒருவரை நியமித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். கடந்த மே 2-ம் தேதி, அந்தப... மேலும் பார்க்க

இனி PF கிளைம் செய்தால் போதும்; 3 நாள்களில் வங்கிக் கணக்கில் தானாக பணம் வந்து விடும்!

தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த அனைவருக்கும் ஓய்வுக்காலத்தில் பெரியளவில் கைக்கொடுப்பது - பி.எஃப் பணம். சில நேரங்களில், பணியில் இருக்கும் போதே, அவசரக் காரணங்களுக்காக பி.எஃப் பணம் கிளைம் செய்யப்படும். ... மேலும் பார்க்க

மின் கட்டணம்: ``இதைப் பின்பற்றி செயல்படுத்துங்கள்..!"- அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை!

தவெக அரசு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்த நிலையில், அதனை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட மின் பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் முந்தைய திட... மேலும் பார்க்க

'ஆயிரம் கோடிக்கணக்கில் இந்தியாவில் இருந்து வெளியேறும் பணம்' இந்திய ரூபாய் மதிப்பு ரூ.96-க்கு சரிவு!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்துகொண்டே வருகிறது. இந்தச் சரிவைத் தடுக்க, அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அது அவ்வளவாக கைக்கொடு... மேலும் பார்க்க

'எடப்பாடிக்கு எதிராகவே `அதிமுக அதிகாரப்பூர்வ' ஊடகங்கள் திரும்பியது எப்படி?

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடும், தொலைக்காட்சியும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பியதோடு த.வெ.க ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு துண... மேலும் பார்க்க

பெட்ரோல் விலையேற்றம்: `விலைவாசி உயர்வு முதல் ஹைப்ரிட் வாகனம் வரை'- சிக்கல்களை விளக்கும் கே.பி.முரளி!

மேற்கு ஆசியப் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளன. இந்த வில... மேலும் பார்க்க