செய்திகள் :

ஆனந்த விகடன் இதழில் தொடங்குகிறது, நரன் எழுதும் 'ஆயிரம் சூரியன்கள்' வரலாற்றுப் புனைவுத் தொடர்!

post image

13ம் நூற்றாண்டில் சேர, சோழ, பாண்டிய வணிகர்களுக்கிடையே கடலின் நறுமணப் பாதையை யார் ஆள்வது என்ற போட்டி நடக்கிறது. அதுவரை சோழ வணிகர்கள்தான் கிழக்கின் கடலையும், மேற்கின் கடலையும் தங்கள் நாவாய்களால் கட்டி ஆண்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் 1216-ல் நடந்த தஞ்சைப் போரில் இருபத்தி இரண்டு வயதான மாறவர்ம சுந்தரபாண்டியன், ஐம்பத்தி ஏழு வயதான மூன்றாம் குலோத்துங்கனை தோற்கடித்த பின், ராஜராஜன் காலம் முதல் சோழ மன்னர்களின் தலையில் பெருமையுடன் ஏறியிருந்த மும்முடிச்சோழன் பட்டம் இறங்கியது.

நரன் எழுதும் 'ஆயிரம் சூரியன்கள்
நரன் எழுதும் 'ஆயிரம் சூரியன்கள்

இந்தப் போருக்குப் பின் தலைகீழாக மாறத் தொடங்கியது நாட்டின் வரலாறு மட்டுமல்ல. கடலின் வரலாறும் தான். நாட்டை வேண்டுமானால் மன்னன் ஆளலாம். ஆனால் கடலை ஆள்வது வணிகர்கள் தான். பல நூற்றாண்டுகளாக உலகின் எல்லா திசையிலிருந்தும் ஆயிரக்கணக்கானக் கப்பல்கள் கடலில் இறங்க காரணமாயிருந்தது மிளகு தான். மிளகின் கார சுவையும், அதன் மருத்துவ காரணங்களும் ஆயிரக்கணக்கான கப்பல்களை தென்னிந்தியாவை நோக்கி அழைத்து வந்தது.

மிளகில் காரமும் , சுவையும், தரமும் மிகுந்த முதல் தரமானது ''கரிமுண்டா'' என்று அழைக்கப்படும் மிளகு தான். கரிமுண்டா எப்போதும் எல்லோருக்கும் விற்கப்படுவதில்லை. உலகின் பெரிய பெரிய அரச குடும்பங்களின் சமையலறைகளிலும், விருந்து மேசைகளிலும் மட்டுமே அதைப் பார்க்க முடியும். கரிமுண்டா மிளகு, சேரநாட்டின் மலபார் மலைக் காடுகளின் உச்சந்தலையில் சன்னமாய் இயற்கையாய் விளைகிறது. பன்னிரண்டு முழம் நீளத்திற்கு குறைவில்லாத கொத்து கொத்தான ராஜ நாகங்கள் இந்த கரிமுண்டா மிளகுக் காட்டை பாதுகாக்கின்றன. என்னதான் அது சேர நாட்டின் காட்டில் விளைந்தாலும் இந்த கரிமுண்டா மிளகின் உரிமை மட்டும் சோழர்களுக்கு தான்.

நரன் எழுதும் 'ஆயிரம் சூரியன்கள்
நரன் எழுதும் 'ஆயிரம் சூரியன்கள்

இந்த வணிகப் பாதையை கட்டுப்படுத்துவதற்கு சேர, சோழ, பாண்டிய வணிகக் குழுவிற்கு நடுவே போட்டிகளும், சண்டைகளும், துரோகங்களும், மரண விளையாட்டுகளும் நிறைய நடக்கின்றன. மீண்டும் சோழ வணிகர்கள் எப்படி அவர்களிடமிருந்து கடலின் வணிக ராஜ்ஜியத்தை கைப்பற்றினார்கள் என்பதே 'ஆயிரம் சூரியன்கள்' வரலாற்றுப் புனைவின் களம்.

இந்தப் புனைவை மிகப்பெரும் காட்சிச் சித்திரிப்புகளுடன் உயிரோட்டமாகப் படைத்தளிக்கும் நரன், விருதுநகரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2016 - ம் ஆண்டு விகடனின் இலக்கிய அடையாளமான 'விகடன் தடம்' இதழில் அவரின் முதல் சிறுகதையான 'பெண்காது' பிரசுரமானது. இதுவரை நான்கு நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள், நான்கு கவிதை தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினான்கு இலக்கிய விருதுகளை வென்றிருக்கிறார்.

நரன்
நரன்

விகடனில் இதுவரை 'ஏழுகடல் ஏழுமலை, 'வேட்டை நாய்கள்' ஆகிய இரண்டு சிறந்த தொடர் கதைகளை எழுதியுள்ளார். காட்சி ஊடகங்களில் பரணியாற்றியுள்ள நரன், தற்போது 'Type Writer' என்ற Script நிறுவனத்தை நடத்தி வருகிறார். .

தமிழ் வரலாற்றில் இழையெடுத்து உணர்வும் உயிர்ப்புமாக உருவாகியிருக்கும் 'ஆயிரம் சூரியன்கள்' வரலாற்றுத் தொடரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆனந்த விகடனில் வாசிக்கத் தவறாதீர்கள்.

மகிழ மரத்தடியில் வந்த மாயப் பெண்! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சமையலறையும் வகுப்பறையும்! - ஓர் ஆழமான வாழ்வியல் ஒப்பீடு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ஒரு ஆன்மீக சாதனை! – 12 ஆண்டுகள் தடையின்றி நடந்த 'ஸ்ரீமத் பாகவதம்'

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வெளியில் மழை... What to Do! – சுவாரஸ்ய நினைவலைகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

படிக்கும் மாணவர்களைப் படைக்கும் மாணவர்களாக மாற்றும் பேராசிரியர் - நூலாசிரியராக மாறிய மாணவர்கள்!

ஒரு சாமானியனை, சாதனையாளனாகவும் சிந்தனையாளனாகவும் மாற்றுவது கல்வி. அதனால் தான் நம்முடைய வாழ்வில் சுமார் கால் நூற்றாண்டுக் காலத்தைக் கல்வி நிலையங்களில் அர்ப்பணிக்கிறோம். கல்லாக இருக்கும் மாணவனைக் கூட ஆச... மேலும் பார்க்க

கம்யூனிஸம் உருவாக்கிய மகா நடிகன்| உளவன் 16

உளவன் 16கம்யூனிஸம் உருவாக்கிய மகா நடிகன்1955 அக்டோபர் 25. வறண்ட வானிலை சற்று மாறத் தொடங்கி இருந்தது. ஆங்காங்கே சாரலாக மழை. ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெப்பம் தகித்தது. மக்கள் பிரதிநிதிகளிடையே அ... மேலும் பார்க்க