செய்திகள் :

ஆப்கன் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாக். குற்றச்சாட்டு: தலிபான் அரசு மறுப்பு

post image

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்குள்ளும் நுழைந்து இந்தியா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்த குற்றச்சாட்டு உண்மையல்ல என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இனயதுல்லா கவாரிஸ்மி இது குறித்து பேசுகையில், ஆப்கன் மண்ணிலும் இந்தியா ஏவுகணைகளை வீசியதாக பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று ஹுரியத் வானொலியில் தெரிவித்துள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி வந்து இந்திய முப்படைகளின் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியிருந்த பாகிஸ்தான் ராணுவம், தான் கூறிய பொய்யை உண்மையாக்க இந்தியாவின் தாக்குதல் எல்லையைத் தாண்டி ஆப்கன் மண்ணிலும் ஏவுகணைகள் வீசப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு மறுத்துள்ளது. பாகிஸ்தான் சொல்வது போல ஆப்கன் மண்ணில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்று கூறியிருக்கிறது.

ஏற்கனவே, இது குறித்து இந்தியாவின் வெளியுறவு விவகாரத் துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், பாகிஸ்தான் குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும், ஆப்கானிஸ்தானுக்கு தனது கூட்டாளி யார், எதிரி யார் என்று நன்கு தெரியும் எனவும் கூறியிருந்தது.

இந்தியாவுக்கு எதிராக பொய்யான தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருவதாகவும் மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தலிபான் அரசின் இந்த விளக்கம் வந்துள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் பதற்றத்தைத் தணிக்க வலியுறுத்திய நாடுகள்

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக பல்வேறு நாடுகள் இது தொடா்பாக கருத்து தெரிவித்தன. ஜி7 நாடுகள்: இந்தியாவும் பாகிஸ்தானும் மிகுந்த கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க ... மேலும் பார்க்க

மசூத் அஸாா் மைத்துனா் உள்பட பல முக்கிய பயங்கரவாதிகள் உயிரிழப்பு: ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கால் சா்ச்சை

கடந்த 1999-ஆம் ஆண்டு இந்திய பயணிகள் விமானக் கடத்தலின் மூளையாக செயல்பட்ட மசூத் அஸாரின் மைத்துனரான முகமது யூசுஃப் அஸாா் உள்பட இந்தியாவால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதிகள் 5 போ் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்... மேலும் பார்க்க

போர் நிறுத்தம்: பின்னணியில் யார்? பாகிஸ்தானுக்கு தொடர் அழுத்தம்!

இந்தியாவுடன் போர் நிறுத்தம் செய்துகொள்ள சம்மதம் என்று அதிரடியாக அறிவித்துவிட்ட பாகிஸ்தான் ர்வதேச நாடுகளின் அழுத்தத்துக்குப் பணிந்ததா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்திய ர... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வான்வெளியில் இனி விமானங்கள் பறக்க தடையில்லை!

இஸ்லாமாபாத்: போர் நிறுத்தம் எதிரொலியாக பாகிஸ்தானில் நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் சீராகியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம... மேலும் பார்க்க

சிந்து நதி நீர் உடன்பாடு: தற்போதைய நிலையே தொடரும்! - மத்திய அரசு

புது தில்லி: பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து திறந்துவிடப்பட்ட சிந்து நதி நீர் விவகாரத்தில், முன்னதாக அறிவித்தபடி இதே நிலைப்பாடே தொடரும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

திராவிடத்துக்கும் பலூசிஸ்தானுக்கும் என்ன தொடர்பு? சுவாரசியமான வரலாறு!

திராவிடத்துக்கும் மேற்கு பாகிஸ்தனிலுள்ள பலூசிஸ்தானுக்கும் என்ன தொடர்பு? என்பதைப் பற்றிய சுவாரசியமான வரலாற்றை விரிவாகப் பார்க்கலாம். பலூசிஸ்தான் - இருபதாண்டுகளுக்கும் மேலாக செய்திகளில் இடம் பெற்ற ஒரு ச... மேலும் பார்க்க