செய்திகள் :

ஆளுநர் மாளிகை: ``சட்டமன்றத்தை மதிக்காதவர்களின் கண் துடைப்பா?" - முதல்வர் ஸ்டாலின் காட்டம்

post image

சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநரின் மாளிகையான ‛ராஜ்பவன்' பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையின் பெயரை ‛மக்கள் பவன்' என மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி விருப்பம் தெரிவித்திருந்தார். இதனை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்ற நிலையில், பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் உள்ள ‛ராஜ் பவன்' பெயர்கள் ‛லோக் பவன்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகை

லோக்பவன் என்பதற்கு மக்கள் பவன் என்று பொருள். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை! சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், “மக்கள் மாளிகை” எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை! சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல" - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோயிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்... மேலும் பார்க்க

"டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் த... மேலும் பார்க்க

`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழனிசாமி?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது. அதிமுகவில் தங்களை இணைக்க ஓ.பி.எஸ் டிசம்பர... மேலும் பார்க்க

அதிமுக: "கட்சியை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள், ஆனால்.!"- சி.வி சண்முகம்

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.பி சி.வி சண்முகம், " அதிமுக வரலாற்றிலேயே பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வ... மேலும் பார்க்க

அதிமுக: `நாம் வென்றபோது சட்டையை கிழித்துக்கொண்டு திரிந்தவர் ஸ்டாலின்' - பொதுக்குழுவில் எடப்பாடி

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அ.தி​.மு.க பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் இன்று நடை​பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க