செய்திகள் :

`ஆஸ்திரேலியாவை சிதறடித்த `அசல்' சம்பவக்காரன்' - யார் இந்த பதும் நிசாங்கா?

post image

டி20 உலகக்கோப்பைத் தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.

இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இலங்கை வீரர் பதும் நிசாங்கா 52 பந்துகளில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களை பறக்கவிட்டு சதமடித்து இந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்திருக்கிறார்.

பதும் நிசாங்கா
பதும் நிசாங்கா

அதுமட்டுமின்றி ஜெயவர்த்தனேவிற்கு பிறகு இலங்கை டி20 உலகக்கோப்பையில் சதமடித்த 2- வது வீரர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார். இளம் வயதில் சாதனை படைத்த பதும் நிசாங்காவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

யார் இந்த பதும் நிசாங்கா?

இலங்கையில் உள்ள கல்லே(Galle) என்ற இடத்தில் பிறந்த பதும் நிசாங்கா (27) எளிய பின்னணியில் இருந்து வந்து இந்த இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார்.

போதிய வசதிகள் இல்லாத சமயத்தில் கடற்கரை மணலில் பயிற்சி பெற்று தனது பேட்டிங் திறமையை நிசாங்கா வளர்த்துக்கொண்டிருக்கிறார்.

இலங்கை அணியில் இடம்பெறுவதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பதும் நிசாங்கா
பதும் நிசாங்கா

2024-ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 210 ரன்கள் எடுத்து, ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார்.

தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து, உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

தற்போது டி20 உலகக்கோப்பையிலும் சதத்தை அடித்து அசத்தியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக இலங்கை அணி தடுமாறிய போது, அந்த அணியைத் தாங்கிப் பிடித்த ஒரு தூணாக நிசாங்கா இருந்திருக்கிறார்.

எவ்வளவு அழுத்தமான சூழலிலும் பதற்றப்படாமல் ஆடுவது இவரது மிகப்பெரிய பலமாக இருக்கிறது.!

இந்தியில் பேச சொன்ன சூர்யா; 'எனக்கு இந்தி தெரியாது மச்சி!' என பதில் அளித்த வருண்! - வைரலாகும் வீடியோ

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்நிலையில், அந்த பாகிஸ்தான் போட்டிக்கு மு... மேலும் பார்க்க

SL vs Aus : ஆஸ்திரேலியாவுக்கு அடி மேல் அடி... முதல் சுற்றோடு வெளியேறுகிறதா?

ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளின் உலக கோப்பை போட்டி, இலங்கையின் Pallekele International Cricket Stadium மைதானத்தில் நடந்து முடிந்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, இந்தப் போட்டியில் மிகப் பெரிய... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: `நட்சத்திர அந்தஸ்து மட்டுமே... ஒரு போட்டியைக்கூட வென்று தர முடியவில்லை' - சாடிய அக்தர்

இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கட... மேலும் பார்க்க

'எனக்கு எல்லாம் கொடுத்தது இந்த சின்னசாமி மைதானம்தான்!' - டிராவிட் நெகிழ்ச்சி

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தின் ஒரு ஸ்டாண்டுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேசியிருக்கும் ராகுல் டிராவிட், "சின்ன... மேலும் பார்க்க

ஜடேஜா, ஜெய்ஸ்வால் இல்லை! - புதிய கேப்டன் ரியான் பராக் - அறிவிப்பை வெளியிட்ட RR

ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், Rajasthan Royals அணி இன்று தங்களின் புதிய கேப்டனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இளம் ஆல்ரவுண்டர் ரியான் பராக் (Riyan Parag) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்... மேலும் பார்க்க

T20 WC: 'இந்திய அணிக்கு மட்டும் வாய்ப்பு, எங்களுக்கு?'- அதிருப்தியை வெளிப்படுத்திய நமீபியா கேப்டன்

டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, நமீபியா அணிக்கு இரவுநேரப் பயிற்சி வழங்கப்படாதது குறித்து அதன் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். 10வது... மேலும் பார்க்க