'சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர்; அவருக்காகத் தான் தலைவர் விஜய் கொளத்தூரில்.!'-...
இணையம் வழியே புகார் அளித்தால் உடனடியாக மின்னணு ரசீது வழங்கும் திட்டம் – எப்படி செயல்படும்?
‘ஆன்லைன்’ வாயிலாக, காவல் துறையில் அளிக்கப்படும் புகார்களுக்கு, உடனடியாக, இ – சி.எஸ்.ஆர்., எனும் மின்னணு புகார் மனு ஏற்பு ரசீது வழங்கும் திட்டத்தை, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் நேரடியாக காவல் நிலையங்களில் அளிக்கும் புகார் மனுக்களை, சி.சி.டி.என்.எஸ்., எனும் குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அம்மனுக்கள் ஏற்கப்பட்டதற்கு சான்றாக, சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக சேவை பதிவேடு ரசீது வழங்குவர். தற்போது, இந்த நடைமுறைக்கு பதிலாக, ‘ஆன்லைன்’ வாயிலாக புகார் அளித்து, இ – சி.எஸ்.ஆர்., எனும் மின்னணு ரசீது பெறும், புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இது எப்படி செயல்படும் என தமிழக டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் விளக்கம் அளித்திருந்தார்.

அதில், ``பொதுமக்கள் இனி, காவல் துறையின் இணையதளமான www.police.tn.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து, உடனடியாக இ-சி.எஸ்.ஆர். ரசீது பெற்றுக்கொள்ளலாம். இந்த ரசீது பெற்ற மூன்று நாட்களுக்குள், காவல் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று, போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவிக்கலாம். அவர்கள் முதல்கட்ட விசாரணை செய்து, முறைப்படி சி.எஸ்.ஆர். ரசீது வழங்குவர். எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடிய குற்றம் நடந்திருந்தால், வழக்குப் பதிவு செய்வர். அதன் பின் கைது நடவடிக்கை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர்.
மொபைல் போன், இரு சக்கர வாகனம் திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்கு, எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு தீர்வு காண, மொபைல் போன் திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்கு, இ – எப்.ஐ.ஆர்., எனும் மின்னணு முதல் தகவல் அறிக்கை பெறும் நடைமுறையும், விரைவில் அமலுக்கு வர உள்ளது. தமிழகத்தில், அரசியல் ரீதியான போராட்டங்கள், நடப்பு ஆண்டில், 30 சதவீதம் உயர்ந்துள்ளது." எனக் குறிப்பிட்டிருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

















