செய்திகள் :

'இது சட்டமன்றமா... இல்ல சண்டை மன்றமா?' - திடீரென கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்

post image

தேமுதிகவின் சட்டமன்ற உறுப்பினரான பிரேமலதா அவையில் திடீரென, 'இது சட்டமன்றமா இல்லை சண்டை மன்றமா...' என கொந்தளித்திருக்கிறார்.

சட்டமன்றம்
சட்டமன்றம்

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ ராஜா பேசுகையில் தவெக எம்.எல்.ஏ மதாரை விமர்சித்து பேசியிருந்தார். உடனே அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எழுந்து, திமுக இஸ்லாமியர்களுக்கு என்ன செய்தது என பேச்சை ஆரம்பிக்க, அங்கிருந்து ஒரு மணி நேரத்துக்கு திமுகவும் தவெகவும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு சலசலப்பை ஏற்படுத்தினர்.

இந்த சமயத்தில் திடீரென எழுந்த பிரேமலதா விஜயகாந்த், `மானியக் கோரிக்கையை தவிர எல்லா நிகழ்ச்சியும் நடக்கிறது. ஆள் ஆளாக்கு குறை சொல்வதால்தான் ஆறரை மணி வரைக்கும் சட்டமன்றம் நடக்கிறது. எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்வு எழுதப் போவதை போல இரவு பகலாக முன் தயாரிப்பு செய்து வருகிறோம். ஆனால், இங்கே பேசுவதற்கு வாய்ப்பே கிடைப்பது இல்லை. எப்ப பார் சண்டை... சண்டை என்றே செல்கிறது. இப்போதெல்லாம் சட்டமன்றம் பார்க்காமல் டிவியை அணைத்து விடுகிறோம் என மக்கள் கூறுகின்றனர்.

பிரேமலதா
பிரேமலதா

இரவு 3-4 மணி வரைக்கும் மக்களுக்காக பிரச்னைகளை பேச தயாரித்து வைத்துவிட்டு வந்தால் இங்கே சண்டைதான் நடக்கிறது. இது சட்டமன்றம், சண்டை மன்றம் அல்ல. அவர் பேச ஆரம்பிக்கும் வரை நன்றாக செல்கிறது. அவர் பேச ஆரம்பித்தாலே சண்டைதான் (ஆதவ்வை நோக்கி...)' என்றார்.

இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜூனா, 'அண்ணியாருக்கும் எங்களுக்கும் பிரச்னை கிடையாது. எங்களுக்கும் விஜயகாந்த் சாரை ரொம்ப பிடிக்கும். உண்மைக்கு மாறாக பேசும் போதுதான் நாங்கள் எழுந்தரிக்கிறோம். எதிர்க்கட்சி என்பது தீப்பெட்டி போன்றது. அதை பற்றவைத்து பால் காய்ச்சினால் அமைதியாக இருப்போம். கேஸை பிடுங்கிவிட்டு பற்ற வைத்தால் வெடிக்கும்' என்றார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க