செய்திகள் :

"இதே நிலை நீடித்தால் உங்களை அதிகாரத்திலிருந்து கீழிறக்குவார்கள்" - மோடியைச் சாடிய பிரகாஷ் ராஜ்

post image

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடிற்கு எதிராக நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியை 15 வயதுடைய சிறுமி அவதூறாகப் பேசியதாக அந்தச் சிறுமி மீது நொய்டாவில் ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தவிர போராட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இதனைக் கண்டித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்.

டெல்லி மாணவர்கள் போராட்டம்
டெல்லி மாணவர்கள் போராட்டம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இளைஞர்கள் தவறு செய்யும்போது பெரியவர்கள் அவர்களைக் கண்டித்து திருத்த வேண்டுமே தவிர, காவல் துறை மூலமாக வழக்குப்பதிவு செய்து அவர்களைத் துன்புறுத்தக் கூடாது.

நாட்டின் சீர்குலைந்த கட்டமைப்பு மற்றும் போலீஸ் அத்துமீறல்களால் விரக்தியடையும் இளைஞர்களின் ஆதங்கத்திற்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும்.

மாணவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்தால், அது அவர்களின் எதிர்காலத்தையும், பெற்றோர் மற்றும் குடும்பத்தினரையும் கடுமையாகப் பாதிக்கும். அவர்கள் நம் நாட்டின் குழந்தைகள். அன்போடு அவர்களை அணுகுங்கள்.

அவர்களின் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் சீரழித்துவிடாதீர்கள். சீரழிந்த கல்வி முறை மற்றும் நிர்வாகத் தோல்வியால் தங்களுடைய எதிர்காலத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களைப் பார்த்து மனமுடையும் குழந்தைகளின் நிலைக்கு அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மாணவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து வேட்டையாடுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இன்று மாணவர்கள் ராஜினாமா மற்றும் கணக்குக் கேட்கிறார்கள். ஆனால், இதே நிலை நீடித்தால் நாட்டின் பெற்றோர்களும் ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து உங்களை அதிகாரத்திலிருந்தே கீழிறக்குவார்கள் நண்பரே" என்று பிரதமர் மோடியைச் சாடியிருக்கிறார்.

"என் பதவி பறிக்கப்பட்ட காரணத்தை திமுக தலைமை சொல்லட்டும்" - தோப்பு வெங்கடாசலம்

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அ.தி.மு.க-வில் இருந்து விலகி‌ ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்த நிலையில், அந்தப் பதவியிலிருந்து விடுவிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர்... மேலும் பார்க்க

"’பரிதாபங்கள்’ ட்ரோல் காயப்படுத்துச்சு; ஆனா..." - விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மகன் அக்ஷய்

’சட்டமன்றத்தின் கதவுகளைப் பூட்டுவதாகச் சொல்கிறார்கள், பூட்டிப் பாருங்கள், உங்களது எலும்பை உடைக்கறோம்’ எனப் பொது மேடையில் முதல்வர் விஜய் குறித்து பேசிய விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்க... மேலும் பார்க்க

கோவை எண்​ணெய் குழாய்: ``போராடும் விவசாயிகளைக் கைது செய்வதா?" - தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

பாரத் பெட்​ரோலி​யம் நிறுவனம் சார்​பில் கோவை மாவட்டம் இரு​கூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை 340 கிமீ தொலை​வுக்கு பூமிக்​கடி​யில் எண்​ணெய் குழாய் அமைக்​கும் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கி... மேலும் பார்க்க

கொளத்தூர் EVM அதிர்ச்சி: "பரிசோதிக்கப்பட்ட 3 இயந்திரங்களில் பிரச்னை" - வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ

சென்னை கொளத்தூர் தொகுதியில் இவிஎம் மிஷின்களை ஆய்வு செய்த பொழுது பிரச்னைகள் இருப்பது தெரியவந்துள்ளதாக திமுக-வைச் சேர்ந்த வழக்கறிஞர்என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்... மேலும் பார்க்க

"அவதூறாகப் பேசிவிட்டேன்; இதுதான் கடைசி தவறு" - மோடியிடம் மன்னிப்புக் கேட்ட 15 வயது சிறுமி

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடிற்கு எதிராக நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியை 15 வயதுடைய சிறுமி அவதூறாகப் பேசியதாக அந்தச் சிறுமி மீத... மேலும் பார்க்க

CJP: ``ரீல்ஸில் மட்டும்தான் பிரதமர் மன்னிப்பாரா?" - போராட்ட வழக்குகள் குறித்து அபிஜித் தீப்கே கேள்வி

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், பிரதமருக்கு எதிராக அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக நொய்டாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி மீது காவல்துறை 'ஜீரோ எஃப்.ஐ.ஆர்' பதிவு செய்தது. ... மேலும் பார்க்க