செய்திகள் :

இந்தியா - அமெரிக்கா இடையே மெகா வர்த்தக ஒப்பந்தம்: ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி!

post image

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் ட்ரம்ப் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சமாக இது கருதப்படுகிறது. இதற்கு மாற்றாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யும் எனவும் தெரியவருகிறது.

Putin - Modi
Putin - Modi

மேலும், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 'மேட் இன் இந்தியா' பொருட்களுக்கான பரஸ்பர வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அமெரிக்கா உடனடியாகக் குறைத்துள்ளது. இதற்கு ஈடாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் தடைகளை நீக்கி, வரியை பூஜ்ஜியமாக (Zero Tariff) குறைக்க இந்தியா முன்வந்துள்ளது.

இது குறித்து அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ``எனது மிகச்சிறந்த நண்பர் பிரதமர் மோடியுடன் பேசியது கௌரவம். அவர் உலக அளவில் மதிக்கப்படும் ஒரு வலிமையான தலைவர். மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது. எரிசக்தி, விவசாயம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

மோடி, ட்ரம்ப்

இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் மோடி,``இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 18%-ஆகக் குறைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்தியா - அமெரிக்கா ஆகிய இரு பெரும் ஜனநாயக நாடுகளின் இந்த இணக்கம், இருநாடுகளின் வளர்ச்சிக்கு வித்திடும். உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு அதிபர் ட்ரம்ப்பின் தலைமைத்துவம் மிகவும் அவசியம் ."எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:

  • அமெரிக்காவில் இந்தியப் பொருட்கள் மீதான வரி 18% ஆகக் குறைப்பு.

  • அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல்.

  • ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி; அமெரிக்காவிடம் அதிக இறக்குமதி.

  • மார்ச் 2025 முதல் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்து, புதிய வர்த்தக அத்தியாயம் தொடக்கம்.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாளை வாஷிங்டன் செல்லவிருக்கும் நிலையில், இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`பட்டா இருந்தும் மின்சாரம் இல்லை' - 31 ஆண்டுகளாக இருளில் வாழும் 138 அருந்ததியர் குடும்பங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டிப்பட்டு கிராமம், கௌதம புத்தர் நகரில் வசித்து வரும் 138 அருந்ததியர் சமூக குடும்பங்களுக்கு அரசால் பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை அந்த பட்டாக்க... மேலும் பார்க்க

கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகியவை தேர்தலுக்கு தயாராகி வர... மேலும் பார்க்க

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது!" - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்... மேலும் பார்க்க

ராகுலா, பிரியங்காவா? - கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கரு... மேலும் பார்க்க

"அந்த போன்கால் வரட்டும்!" - காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாள... மேலும் பார்க்க

DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி... மேலும் பார்க்க