TNPSC குரூப் 2, 2A தேர்வு ஒத்திவைப்பு; "ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும்!"- ...
இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'அமெரிக்காவிடம் இந்தியா சரண்டரா?' - எதிர்ப்புகளின் தொகுப்பு
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு வரவேற்பு இருந்தாலும், சில எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
இந்த எதிர்ப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் பதிவு செய்துள்ளனர்.
அந்த எதிர்ப்புகளின் தொகுப்பு இதோ...
> இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்க விவசாய மற்றும் பால் பொருள்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன... வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன.
இதனால், அமெரிக்காவின் விவசாயப் பொருள்கள் மற்றும் பால் பொருள்களின் இறக்குமதி இங்கே அதிகரிக்கும்.

இது 72 கோடி விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனைப் பாதிக்கும்.
இந்திய விவசாயப் பொருள்களின் மீது அமெரிக்கா பெருமளவு எந்தச் சலுகையும் வழங்கவில்லை.
இதனால், அமெரிக்கப் பொருள்களுடன் இந்திய உற்பத்திகளால் போட்டியிட முடியாமல் போகலாம்.
> 'ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கமாட்டோம்' என்கிற உத்தரவாதத்தில் தான் இந்த ஒப்பந்தம் முடிவாகி உள்ளது.
இது சரண்டர் இல்லையா... இது இந்தியாவின் இறையாண்மையைப் பாதிக்கிறது அல்லவா? அமெரிக்காவின் கட்டளையைப் பின்பற்றுகிறதா இந்தியா?
> இந்தியா பல அமெரிக்கப் பொருள்களின் வரியை ஜீரோ சதவிகிதமாக்குகிறது. ஆனால், இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 18 சதவிகிதம் வரி வசூலிக்கிறது. இது சமத்தைக் கெடுக்கிறது.
> பல அமெரிக்க பொருள்களுக்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இருப்பதன் மூலம் இந்தியாவின் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் பாதிக்கப்படும்.
> இந்த ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்காதது வெளிப்படைத் தன்மையைப் பாதிக்கிறது.















