செய்திகள் :

இந்தியா: சீனா, பாகிஸ்தானை விட குறைவு; ஜப்பானை விட அதிகம்! - பிற நாடுகளுக்கு ட்ரம்பின் வரி எவ்வளவு?

post image

இந்திய பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே நேற்று இரவு நடந்த போன்கால்... அமெரிக்கா இந்தியா மீதான வரியை 18 சதவிகிதமாக குறைத்தது... - இது தான் இன்றைய ஹாட் டாபிக்.

கடந்த ஆகஸ்ட் மாதம், 25 சதவிகித வரி மற்றும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் கூடுதல் 25 சதவிகித வரி என இந்தியா மீது மொத்தம் 50 சதவிகித வரியை விதித்திருந்தது அமெரிக்கா.

இந்த வரி இந்தியாவின் ஜவுளித்துறை, தோல் மற்றும் காலணித் துறை, ரத்தின கற்கள் துறை, கடல்சார் உணவுத் துறைகளை மிகவும் பாதித்தது.

ஆசியாவிலேயே இந்தியாவிற்கு தான் அதிக அளவு வரி இருந்தது. ஆனால், நேற்றைய இரவு அனைத்தையும் மாற்றிவிட்டது.

ட்ரம்ப் - பரஸ்பர வரி
ட்ரம்ப் - பரஸ்பர வரி
இப்போது இந்தியாவைத் தவிர்த்து பிற முக்கிய நாடுகளுக்கு அமெரிக்கா எத்தனை சதவிகித வரி விதித்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

சீனா - 37 சதவிகிதம்,

பிரேசில் - 50 சதவிகிதம்,

வியட்நாம், வங்கதேசம் - 20 சதவிகிதம்,

பாகிஸ்தான், மலேசியா, கம்போடியா, தாய்லாந்து - 19 சதவிகிதம்,

ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், சுவிட்சர்லாந்து - 15 சதவிகிதம்,

இங்கிலாந்து - 10 சதவிகிதம்,

மியான்மர் - 40 சதவிகிதம்,

தென் ஆப்பிரிக்கா - 30 சதவிகிதம்,

தென் கொரியா - 25 சதவிகிதம்,

மெக்சிகோ - 30 சதவிகிதம்,

கனடா - 35 சதவிகிதம்.

ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்து மிக குறைந்த சதவிகித வரி உள்ள நாடு இந்தியா தான். அதே மாதிரி, ட்ரம்ப் பிரிக்ஸ் அமைப்பை கடுமையாக சாடி வருகிறார்.

அந்த அமைப்பில் இருக்கும் நாடுகளை வைத்து பார்க்கும்போதும், இந்தியாவிற்கு தான் குறைந்த வரி.

`பட்டா இருந்தும் மின்சாரம் இல்லை' - 31 ஆண்டுகளாக இருளில் வாழும் 138 அருந்ததியர் குடும்பங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டிப்பட்டு கிராமம், கௌதம புத்தர் நகரில் வசித்து வரும் 138 அருந்ததியர் சமூக குடும்பங்களுக்கு அரசால் பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை அந்த பட்டாக்க... மேலும் பார்க்க

கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகியவை தேர்தலுக்கு தயாராகி வர... மேலும் பார்க்க

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது!" - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்... மேலும் பார்க்க

ராகுலா, பிரியங்காவா? - கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கரு... மேலும் பார்க்க

"அந்த போன்கால் வரட்டும்!" - காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாள... மேலும் பார்க்க

DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி... மேலும் பார்க்க