ரூ. 25 கோடியில் 1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறும்: அம...
இந்திய படைகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய முதல்வர் ஸ்டாலின்; நன்றி தெரிவித்த ஆளுநர் ரவி
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் தாக்குதலை துணிவுடன் எதிர்கொள்ளும் இந்திய படைகளுக்கு ஆதரவாக இன்று மாலை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. இந்தப் பேரணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.
இந்தப் பேரணிக்கு குறித்து தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி தன் எக்ஸ் பக்கத்தில், ``"பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று மாலையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.