ரூ.1048 கோடி சொத்து: 'தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!' - லால்குடி அதிமுக வேட்பா...
'இந்த' கணக்குப் பார்த்து கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்யுங்க #CreditCard A-Z | 5 நாள்கள் 1 கான்செப்ட்
நாள் 2
கிரெடிட் கார்டு குறித்த இன்ட்ரோவை நேற்று பார்த்துவிட்டோம். இன்று கிரெடிட் லிமிட் ப்ளஸ் கிரெடிட் கார்டு எப்படி செயல்படுகிறது என்பதை நமக்கு விளக்குகிறார் வங்கியாளர் மற்றும் செபி ஸ்மார்ட் பயிற்சியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்.
``வங்கியில் கடன் கேட்கிறீர்கள்... தெரிந்தவரிடம் கைமாத்தாக குறிப்பிட்ட தொகையை கேட்கிறீர்கள். உடனே, கையில் எடுத்து கொடுத்துவிடுவார்களா?
திரும்ப கடனை கொடுத்துவிடுவோமா என்பதை பார்ப்பார்கள் தானே. இதற்கு கிரெடிட் கார்டும் விதிவிலக்கு அல்ல.

எத்தனை தடவை போன் செய்து கிரெடிட் கார்டு வாங்க சொல்லி வங்கிகள் கூறினாலும், அதை தருவதற்கு முன்னால் நம்மிடம் சிலவற்றை செக் செய்வார்கள்.
முதலில், வருமானம். கிரெடிட் கார்டு வாங்கினால், அதை சரியாக கட்டிவிடுவது போல, வருமானம் இருக்கிறதா என்பதை பார்ப்பார்கள்.
அடுத்ததாக, கிரெடிட் ஸ்கோர். இந்தக் கிரெடிட் ஸ்கோரை நமது நிதி ஜாதகம் என்றே கூறலாம்.
கிரெடிட் ஸ்கோர் கடன் வாங்கியிருக்கிறோமா... எங்கெல்லாம் கடன் வாங்கியிருக்கிறோம்... வாங்கிய கடனை சரியாக அடைத்திருக்கிறோமோ அல்லது சரியாக கட்டி வருகிறோமா என்பதை காட்டிவிடும்.
ஆக, இந்த இரண்டையும் பொறுத்து, நமக்கு கிரெடிட் கார்டு கொடுக்கலாமா... கொடுத்தால், எத்தனை கிரெடிட் லிமிட் தரலாம் என்பதை நிர்ணயிப்பார்கள்.
கிரெடிட் லிமிட் என்றால், கிரெடிட் கார்டு வாங்கியதும் எத்தனை ரூபாய்க்கு வேண்டுமானாலும், அதை ஸ்வைப் செய்துவிட முடியாது.
வங்கிகள் வருமானம், கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து ஒரு கிரெடிட் லிமிட் செட் செய்திருக்கும். அதாவது வங்கிக் கணக்கில் பணம் இருப்பது போல.
அந்தக் கிரெடிட் லிமிட்டைத் தாண்டி ஒரு பைசாவிற்குக் கூட கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்ய முடியாது.
இது தான் கிரெடிட் லிமிட்.

இப்போது கிரெடிட் கார்டு ஸ்வைப் செய்தப் பின்னர் நடப்பதைப் பார்ப்போம்.
நேற்றே சொல்லியிருந்தோம்... கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்தால், நீங்கள் கட்ட வேண்டிய தொகை யாருக்குச் செல்ல வேண்டுமோ, அவருக்குச் சென்றுவிடும் என்று.
அப்படி செலுத்திய கடனை திரும்ப செலுத்த வேண்டுமல்லவா?
நீங்கள் ஒரு மாதத்தில் எங்கெல்லாம், எத்தனை ரூபாயிற்கு கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்திருக்கிறீர்கள் என்கிற ஸ்டேட்மென்ட் உங்கள் மெயில் அல்லது ஆப்பில் 'டான்' என ஆஜராகிவிடும்.
அதை வைத்து நீங்கள் அந்தக் கடனை திரும்ப செலுத்திவிட வேண்டியது தான்.
ஆனால், இங்கே இரண்டு செக்குகள் உண்டு.
> ஒரு மாதம் முழுவதும் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்த தொகையை முழுவதுமாக செட்டில் செய்துவிட்டால், 'நோ' வட்டி.
மினிமம் டியூ தொகை தான் கட்டுகிறீர்கள் என்றால், மீதியிருக்கும் தொகைக்கு பரிவர்த்தனை செய்த நாளில் இருந்து கணக்கிட்டு வட்டி வசூலிக்கப்படும்.
> முழுமையாக கடனைச் செட்டில் செய்தாலும், அடுத்த பில்லிங் டியூ டேட்டிற்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றாலும், வட்டி, லேட் பேமென்ட் ஃபீஸ் என சேர்த்து செலுத்த வேண்டும்.
இந்த வட்டியும், ஃபீஸும் தான் கிரெடிட் கார்டில் சிலந்தி வலை. இதில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிப்பதே புத்திசாலித்தனம்.

முடிந்தளவு எத்தனை ரூபாய் கிரெடிட் கார்டில் செலவளித்திருக்கிறீர்களோ, அத்தனை தொகையையும் டியூ டேட்டில் கட்டிவிடுவது நல்லது.
இல்லையென்றால், அதிக வட்டியைச் சந்திக்க நேரிடும்.
ஒரு மாதத்தில் எத்தனை ரூபாய் நம்மால் கட்ட முடியும் என்று தோராயமாக நமக்கே தெரியும். அதனால், அந்தக் கணக்கைத் தாண்டி, கிரெடிட் கார்டு ஸ்வைப் செய்து சிக்கலில் மாட்டிவிடாதீர்கள் மக்கா."
நாளை சந்திப்போம்...















.jpg)




