செய்திகள் :

"இந்த சீரிஸ் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் இருந்தது, ஆனா.!"- 'காட்டான்' குறித்து விஜய் சேதுபதி

post image

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த வெப் சீரிஸ் 'முத்து என்கிற காட்டான்'.

இந்த வெப் சீரிஸை இயங்குநர் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இருவரும் இயக்கி இருந்தனர். மக்களிடையே இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த வெற்றியை 'முத்து என்கிற காட்டான்’ குழுவினர் ஒன்றிணைந்து கொண்டாடி இருக்கின்றனர்.

 'முத்து என்கிற காட்டான்'
'முத்து என்கிற காட்டான்'

இந்தக் கொண்டாட்ட விழாவில் பேசிய விஜய் சேதுபதி, " இந்த படைப்பில் உழைத்த அத்தனை பேரும் முழு அர்ப்பணிப்போடு உழைத்தார்கள்.

கதை நம் வாழ்க்கையோடு நெருக்கமாகவும் இருந்தது. அதனால் அந்த கேரக்டருக்குள் போவது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது.

வடிவேல் முருகன் என்னை ஆச்சரியப்படுத்தினார். அவர் பட விமர்சனம் செய்பவர் எப்படி நடிப்பார் என நினைத்தேன் ஆனால் அதைத்தாண்டி அசத்திவிட்டார். பார்வதியும் அவர் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.

செட்டில் நாங்கள் எல்லாரும் ஒரு ஃபேமிலி மாதிரி தான் இருந்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை சப்போர்ட் பண்ணி தான் இந்த படைப்பை முடித்தோம்.

இந்த படைப்பில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வெப் சீரிஸ் ரொம்ப சந்தோஷமான அனுபவத்தை கொடுத்தது. நாங்கள் பண்ணுகின்ற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்க வேண்டும் என்று தான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

இடையில் இந்த சீரிஸ் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. அதுவாக மீண்டும் நடந்து இந்த இடத்தை வந்தடைந்திருப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி.

இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி கதை இருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் ஒரு வாழ்க்கையைச் சொல்லும் மாதிரி இருக்கும். அதுதான் இந்த வெப் சீரிஸை எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆக்கியது" என்று பேசியிருக்கிறார்.

What To Watch: யூத் முதல் மிஸ்டர் எக்ஸ் வரை; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

மிஸ்டர் எக்ஸ் (Mr.X) - தமிழ்:மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், ரைசா, அதுல்யா ரவி, காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இன்று (ஏ... மேலும் பார்க்க

Chiyaan 63: மீண்டும் 'இருமுகன்' பட இயக்குநருடன் இணையும் விக்ரம் - டேக் ஆப் ஆகும் சீயான் 63

நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவருடைய 63-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். கடந்தாண்டு மார்ச் மாதம் விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. ... மேலும் பார்க்க

Mr. X Review: ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல், ஸ்பை த்ரில்லர் - புதிய களம் படமாக வலுப்பெறுகிறதா?

ரா அமைப்பில் உளவாளிகளாக இருக்கும் கௌதம் (ஆர்யா) & டீம் சென்னையில் ஹவாலா குற்றங்களைப் பிடித்துவருகிறார்கள். நீண்ட வருடங்களுக்கு முன்பு சோதனைக்காக நந்தா தேவி மலைக்குக் கொண்டு செல்லப்படும் அணு சாதனம்... மேலும் பார்க்க

Hansika Motwani: "தவறான ரயிலில் பயணிக்க முடியுமா?" - விவாகரத்து குறித்து மனம் திறந்த ஹன்சிகா

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கும் சோஹேல் கதுரியா என்பவருக்கும் 2022-ம் ஆண்டு ஜெய்பூர் அரண்மனையில் கோலாகலமாக திருமண... மேலும் பார்க்க