அதிமுக: "எடப்பாடி பழனிசாமிதான் இப்போதும் பொதுச்செயலாளர்; ஆனால்..." – கே.சி. வீரம...
'இந்த மக்கள் பணி அரசியலாக மாற வாய்ப்பிருக்கிருக்கிறதா?' - சௌந்தர்யா ரஜினிகாந்த் 'பளீச்' பதில்
நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கைக் கால்களையும், பெண்களுக்கு வாழ்வாதாரத்திற்கான ஆட்டோக்களையும் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கன்னியாகுமரி பகவதி அம்மன் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அந்தப் புனிதமான மண்ணில் இருந்து இந்த நற்பணியைத் தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 'ரவுண்ட் டேபிள்' அமைப்பின் உதவியோடு, தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, இந்த உதவிகள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன.
பயனாளிகளை நேரில் சந்தித்து எனது கைகளாலேயே இந்த உதவிகளை வழங்கியது ஆத்மார்த்தமான திருப்தியைத் தந்துள்ளது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதேபோல் தமிழகத்தின் அடுத்தடுத்த பகுதிகளிலும் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
ஏற்கெனவே என் குடும்பமும், குறிப்பாக அப்பா நிறைய நல்லவற்றைச் செய்துவருகிறார். இந்த மக்கள் பணி அரசியலாக மாற வாய்ப்பிருக்கிருக்கிறதா என்றால் என்றால்.... இந்த முயற்சி முற்றிலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது.
நல்லது செய்வதை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். தற்போதைக்குச் சேவை செய்யும் எண்ணத்தில் மட்டுமே நான் இங்கு வந்திருக்கிறேன். ஆனால், எதிர்காலத்தில் மக்கள் என்ன விரும்புகிறார்களோ, அதை நாங்கள் குடும்பமாகச் சேர்ந்து நிச்சயமாக நிறைவேற்றுவோம்.
இந்த மாத இறுதியில் நான் அடுத்த செய்யப்போகும் படம் குறித்து அறிவிப்போம். விஜய் அண்ணாவின் இந்த வெற்றி மிக முக்கியமான ஒரு வரலாற்று வெற்றியாகும்.
அவர் தமிழக மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வார் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். விஜய் அண்ணாவிற்கும், அவரது தவெக தொண்டர்களுக்கும் எனது குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் பல சவால்களைக் கடந்துதான் இந்த நிலைக்கு வந்துள்ளார், இனிமேலும் சவால்கள் வரக்கூடும். ஆனால், மக்கள் மத்தியில் அவர் தனது சிறப்பான ஆட்சியை நிச்சயம் வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உள்ளது" என்றார்.















.jpeg)



