”வரும் தேர்தலில் அதிமுக-வும், பாஜக-வும் மிகப்பெரிய தோல்வியை பெறப்போகிறது” - முதல...
'இந்த' விவசாயிகளா நீங்கள்? இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் உங்களுக்குள்ள ப்ளஸ் என்ன?
இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருள்களுக்கு சலுகைகள்... வரிக் குறைப்பு... வரி விலக்கு எதுவும் இல்லை.
இது விவசாயிகளின் நலனைக் காக்க என்றும், இதனால், இந்தியாவின் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அப்படிக் காக்கப்பட்ட உற்பத்திகளின் பட்டியல் இதோ...
> அரிசி
> கோதுமை
> மக்காச்சோளம்
> சோயா
> பால் பொருள்கள்

இந்த உற்பத்திகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டால், இவைகளுக்கு எந்த வரியும் இல்லை...
> மாம்பழம்
> வாழைப்பழம்
> கொய்யா
> அவகேடோ
> கிவி
> பப்பாளி
> அன்னாசிப் பழம்
> காளான்
> மசாலாப் பொருள்கள்
> டீ
> காபி
> தேங்காய்
> முந்திரி
> கசகசா
> எள்
இதுவும் விவசாயிகளின் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு என்று கூறப்படுகிறது.
ஒப்பந்தத்தில் அமெரிக்க விவசாயிகளுக்கு என்ன லாபம்?
பாதாம், வால்நட், காலநடைகளுக்கு தீவனமாக வழங்கும் சிவுப்பு சோளம் போன்று அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருள்களுக்கு இந்தியாவில் வரி குறைக்கப்படும்.
காரணம், இவை இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
ஆனால், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எந்த மரபணு மாற்று உற்பத்திகளுக்கும் எந்த வரிச் சலுகையும் இல்லை.




















