செய்திகள் :

இனி வெள்ளியை அடமானம் வைத்தும் கடன்; எவ்வளவு பெற முடியும்? எங்கே பெறலாம்?|Q&A

post image

தங்கம் போல, வெள்ளியின் விலையும் உயர்ந்திருக்கிறது.

அதே மாதிரி, இனி வெள்ளியையும் அடமானம் வைக்கலாம். இதற்கான புதிய விதிமுறைகளை பிறப்பித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

எங்கெல்லாம் இந்தக் கடன் கிடைக்கும்?

இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் படி, வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வீட்டுக்கடன் நிதி நிறுவனங்கள், வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் வெள்ளிக்கு அடமானக் கடன் வழங்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி

எதற்கெல்லாம் கிடைக்கும்?

இந்த அடமானக் கடன் வெள்ளி நகைகள் அல்லது வெள்ளி நாணயங்களுக்குத் தான் கிடைக்கும்.

வெள்ளிக் கட்டிகள், வெள்ளி இ.டி.எஃப்கள், வெள்ளி சம்பந்தமான மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு இந்த விதிமுறைகளின்படி கடன் கிடைக்காது.

எவ்வளவு கடன் பெற முடியும்?

ஒரு நபருக்கு 10 கிலோ கிராம் வரையிலான வெள்ளி நகைகளுக்கும், 500 கிராம் வரையிலான வெள்ளி நாணயங்களுக்கும் அடமானக் கடன் வழங்கப்படும்.

Loan to Value - LTV எவ்வளவு?

ரூ.2.5 லட்சம் வரையிலான கடனுக்கு வெள்ளியின் 85 சதவிகித மதிப்பு வரையில் (Loan to Value - LTV) கடன் பெறலாம்.

ரூ.2.5 - ரூ.5 லட்சம் வரையிலான கடனுக்கு வெள்ளியின் 80 சதவிகித மதிப்பு வரையில் கடன் பெறலாம்.

ரூ.5 லட்சத்திற்கு மேலான கடனுக்கு வெள்ளியின் 75 சதவிகித மதிப்பு வரையில் கடன் பெறலாம்.

இந்த மதிப்பு எப்படி கணக்கிடப்படும்?

குறிப்பிட்ட தினத்தில் இருந்து கடந்த 30 தினங்களுக்கு சந்தையின் முடிவில் இருந்த வெள்ளி விலையின் சராசரி மதிப்பிடப்படும்.

கடந்த நாளில், சந்தையின் முடிவில் இருந்த வெள்ளி விலை.

இந்த இரண்டில் எது குறைவாக உள்ளதோ, அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வெள்ளி
வெள்ளி

வங்கிகளுக்கான விதிமுறை என்ன?

அடமானக் கடன் முழுவதும் அடைக்கப்பட்ட ஏழு வேலை நாள்களுக்குள் அடமான நகையை வங்கிகள் வாடிக்கையாளருக்குத் தந்துவிட வேண்டும்.

இதில் தாமதம் ஏற்பட்டால், ஒவ்வொரு நாளுக்கும் வங்கி அந்த வாடிக்கையாளருக்கு ரூ.5,000 செலுத்த வேண்டும்.

வெள்ளி அடமானக் கடன் எப்போதிருந்து அமலுக்கு வருகிறது?

2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் வெள்ளி நகை அல்லது நாணயங்களை அடமானம் வைத்துக் கடன் பெறலாம்.

Personal Finance: 'செல்வம் சேர்க்கும் ஃபார்முலா' - சோம வள்ளியப்பன் உரை; இலவச நிகழ்ச்சி; முழு விவரம்

சொத்து ஒதுக்கீடு: நல்ல முதலீட்டு உத்தி..!முதலீட்டுத் தொகையைப் பல்வேறு சொத்து பிரிவுகளில் பிரித்து மேற்கொள்ளும், சொத்து ஒதுக்கீடு (Asset Allocation) என்பது ஒரு நல்ல முதலீட்டு உத்தியாகும்,நிறுவனப் பங்கு... மேலும் பார்க்க

ChatGPT-யை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா? - நிபுணர் விளக்கம்

சாப்பாட்டில் எவ்வளவு உப்பு போட வேண்டும்... என்ன படிக்கலாம்... எங்கே டிரிப் போகலாம்... இந்த டிரெஸ்ஸிற்கு என்ன மேட்சாக போடலாம்... - இப்படி சின்ன, பெரிய சந்தேகங்கள் அனைத்திற்கும், இப்போது 'ChatGPT' தான் ... மேலும் பார்க்க

ஏற்றத்தில் தங்கம், உச்சத்தில் பங்குச்சந்தை - இப்போது எதில் முதலீடு செய்வது சிறந்தது?

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்தில் பங்குச்சந்தையும் புதிய உச்சத்தை தொட்டது. இந்த நேரத்தில் எதில் முதலீடு செய்வது நல்லது என்கிற கேள்வியும், சந்தேகமும் எழலாம். அந்தக் கேள்விக்கா... மேலும் பார்க்க

வளைகுடா வாழ்க்கை முடிவதற்குள், உங்கள் 'இரண்டாவது சம்பளத்தை' உறுதி செய்துவிடுவீர்களா?| NRI Special

துபாய் வெயிலோ, சவுதி பாலைவனமோ... கடந்த 10-20 வருடங்களாக குடும்பத்தைப் பிரிந்து, பண்டிகைகளைத் தியாகம் செய்து உழைத்துக்கொண்டிருக்கிறீர்கள். "இன்னும் 5 வருஷம்... அப்புறம் செட்டில் ஆகிடலாம்" என்று உங்களுக... மேலும் பார்க்க

FD-ஐ விட இரட்டிப்பு லாபம்; 45-60 வயதில் ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்வது எப்படி? முழு விளக்கம்

"குழந்தைகள் படிப்பு முடிந்துவிட்டது அல்லது முடியப்போகிறது. வீட்டுக் கடன் கிட்டத்தட்ட அடைந்துவிட்டது. கையில் சில லட்சங்கள் சேமிப்பு இருக்கிறது. இனி என்ன செய்வது?" உங்களில் பலர் இப்படி யோசித்துக் கொண்டி... மேலும் பார்க்க

'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் 'ஃபார்முக்கு' வந்துள்ளது என்றே கூறலாம். தீபாவளிக்குப் பிறகு, தங்கம், வெள்ளி விலை சற்று இறங்குமுகத்திற்கு சென்றது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. இந... மேலும் பார்க்க