செய்திகள் :

`இனி வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது திமுக; ஆயுள் தண்டனை வரை..'- ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

post image

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்து ஏறத்தாழ மூன்று வாரங்கள் ஆகும் நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தற்போதைய ஆட்சி அமைந்து 3 வாரங்கள் ஆகின்றன. ஆனால் அதற்குள் 40-க்கும் மேற்பட்ட கொலை, பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் கொதிக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பாக எந்த இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி இவர்கள் ஆட்சிக்கு வந்தார்களோ, அதே பாணியை தற்போதும் கையாண்டு, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் பொய் பிரசாரங்களைச் செய்து வருகின்றனர்.

r s bharathi dmk

கோவையில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தைத் திசைதிருப்பும் வகையில், சமூக ஊடகங்களில் திமுக-வுக்கு அந்தக் குற்றங்களில் தொடர்பிருக்கிறது எனவும், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் குறித்தும், தி.மு.க குறித்தும் அவதூறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது. மேலும், உண்மைத் தன்மையை மறைத்து, வேறொருவரின் அடையாளத்தைப் பயன்படுத்தி இந்த அவதூறுகள் வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டு அரசியலில் இதுவரை இப்படிப்பட்ட அநாகரிகங்கள் நடந்தது இல்லை. எனவே, இனிமேலும் இது போன்ற அவதூறுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க தி.மு.க தயாராக இல்லை.

தேர்தலுக்கு முன்னால் இந்த சமூக ஊடகப் பிரசாரங்களால் மக்கள் வாக்களித்தது பட்டவர்த்தமான உண்மை என்றாலும், இனி இது தொடரக் கூடாது என்பதில் தி.மு.க உறுதியாக உள்ளது. இதன் முதற்கட்டமாக, அவதூறு கருத்துகளை பதிவிட்டவர்கள் மீது தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், இனிவரும் காலங்களில் இதனைச் சட்டரீதியாகவே எதிர்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாதாரணமாக ஒருவர் மீது அவதூறு பரப்பினால் அதற்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஆனால், மற்றொருவரின் போலி அடையாளத்தைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்கள் வாயிலாக அவதூறான பொய் பிரசாரங்களை மேற்கொண்டால், அதற்குச் சட்டப்படி ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

கைது

குழந்தைகளும், சிறுவர்களும் தங்கள் தாய், தந்தை மற்றும் தாத்தா, பாட்டிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதால் தான் விஜய் கட்சிக்கு வாக்குகள் கிடைத்தன என்பதைப் பரவலாக அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே, தமிழ்நாட்டு மக்கள் மீதும், மாநிலத்தின் மீதும் உள்ள அக்கறையின் காரணமாகவே தி.மு.க இதனைத் தெளிவுபடுத்துகிறது. தெரியாமல் செய்யும் தவறுகளால் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிவிடக் கூடாது என்பதில் தி.மு.க கவனமாக இருக்கிறது. ஒருமுறை ஆயுள் தண்டனை கிடைத்துவிட்டால், சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை முற்றிலும் நாசமாகிவிடும்.

இத்தகைய சட்டப் பாதிப்புகளைத் தி.மு.க விரும்பாத காரணத்தினாலேயே, இதனை வெளிப்படையாக எச்சரித்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்குகிறோம். சமூக ஊடகங்களில் தவறான பிரசாரங்களில் ஈடுபடுவோர் தங்கள் குடும்பத்திலோ அல்லது உறவினர்களிலோ இருந்தால், பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறி எச்சரிக்க வேண்டும். குறிப்பாக, அந்தந்தக் கட்சித் தலைவர்களும் தங்கள் தொண்டர்களுக்கு இதனை அறிவுறுத்த வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

எம்‌.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார்! - பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க தரப்பில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயக்குமார். அதேபோல் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட... மேலும் பார்க்க

`அதற்கு நான் பதில் சொல்ல முடியாது; பேரவைத் தலைவர் என்ற முறையில்...' - சபாநாயகர் சொல்வது என்ன?

அ.தி.மு.க-வுக்குள் த.வெ.க-வுக்கு ஆதரவளிப்பது தொடர்பான கருத்து வேறுபாட்டால் கட்சி, எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரண்டாகப் பிரிந்தது. இந்த அரசியல் மோதல்களுக்கு இடையே, சி.வி.சண்முக... மேலும் பார்க்க

`புதிய கரகாட்ட கோஷ்டி; ஆட்சியை காப்பாற்ற தகிடுதத்தம் அரசியல், வெட்கக்கேடு'- விஜய்க்கு இபிஎஸ் கண்டனம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்ப... மேலும் பார்க்க

`` `துயரசக்தி' - இந்தக் கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் வாக்களித்தார்களா?" - ஸ்டாலின் விமர்சனம்!

அ.தி.மு.க-வுக்குள் த.வெ.க-வுக்கு ஆதரவளிப்பது தொடர்பான கருத்து வேறுபாட்டால் கட்சி, எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரண்டாகப் பிரிந்தது. இந்த அரசியல் மோதல்களுக்கு இடையே, சி.வி.சண்முக... மேலும் பார்க்க

`தேர்தலுக்கு முன்பே திமுக அதிமுக கூட்டணி; அனிதா மாதிரியானவங்க'- ஸ்டாலினுக்கு நிர்வாகி பகிரங்க கடிதம்

'திமுக அதிமுக கூட்டணி'நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளிவந்த நாள் முதல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படும் விவகாரம் இதுதான்.தவெக தலைமையிலான அரசு அமைவதைத் தடுக்க இப்படியொரு மு... மேலும் பார்க்க

மேகதாது அணை: ``இதை முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும்" - விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள்!

மேகதாது அணை திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த 2025 நவம்பர் 13 அன்று தள்ளுபடி செய்திருந்தது. ... மேலும் பார்க்க