செய்திகள் :

இன்று தமிழ்நாடு 80% வாக்கு சதவிகிதத்தை தொடுமா? - Tough போட்டி கொடுக்கும் 2021-ம் ஆண்டு தேர்தல்!

post image

இன்னும் சில மணி நேரத்தில் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவடைய உள்ளது.

சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு, இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் 5.73 கோடி மக்கள் தகுதியுள்ள வாக்காளர்கள்.

இதில் 14.6 லட்சம் பேர் இந்தத் தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள். இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கான முதல் முறை வாக்காளர்கள் எண்ணிக்கை ஆகும்.

தேர்தல்
தேர்தல்

இன்னும் சில மணிநேரத்தில் இன்று தமிழ்நாட்டில் எத்தனை பேர் வாக்களித்துள்ளனர்... எத்தனை சதவிகிதம் வாக்கு பதிவாகியுள்ளது ஆகியவை தெரிந்துவிடும்.

தமிழ்நாட்டில்...

2011-ம் ஆண்டு 78.01 சதவிகித வாக்கு பதிவாகியிருந்தது.

2016-ம் ஆண்டு 74.81 சதவிகிதமும், 2021-ம் ஆண்டு 73.63 சதவிகிதமும் வாக்கு பதிவாகியிருந்தது.

இன்று 80 சதவிகித வாக்கு பதிவாகியிருந்தால் தான், 2021-ம் ஆண்டு வாக்களித்த மக்களின் எண்ணிக்கையை சமன் செய்ய முடியும்.

முன்னரே, சொன்னதுபோல, இது சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பின் நடக்கும் தேர்தல் ஆகும்.

இந்த நடைமுறையில், இறந்தவர்களின் பெயர்கள், இரு முறை பதிவான பெயர்கள், தகுதியில்லாத நபர்களின் பெயர்கள் என பலர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.

இதனால், அதிக சதவிகித வாக்குகள் பதிவானாலும், வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

தமிழ்நாடு தேர்தல்
தமிழ்நாடு தேர்தல்

இதில் இன்னும் ஒரு சிக்கல் என்னவென்றால், இதுவரையிலான தேர்தல்களில், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் பெண்களின் வாக்குகள் மொத்த எண்ணிக்கையை விட, குறைவாக இருக்கும்.

இதனாலும், வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் சிக்கல் எழும்.

இன்று 70 - 72 சதவிகிதத்திற்குள் வாக்கு சதவிகிதம் பதிவாகியிருந்தால், வாக்கு சதவிகிதத்தைப் பார்த்தால், கடந்த தேர்தலின் சதவிகிதத்தை சமன் செய்திருக்கும். ஆனால், குறைந்த வாக்காளர்களே இன்றைய தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்று பொருள். காரணம், இப்போது வாக்காளர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத் தேர்தல் களம்: எடப்பாடியில் வாக்குப்பதிவு சாதனை; ஸ்டாலின், விஜய், சீமான் தொகுதிகளின் நிலவரம்?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய அரசியல் தலைவர்களின் தொகுதிகளில் மாலை 5 மணிவரை பதிவான வாக்குப்பதிவு சதவிகித விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ப... மேலும் பார்க்க

சேலம் 88%, ஈரோடு 87%... மாலை 5 மணிக்கே உச்சம் தொட்ட வாக்கு சதவிகிதம்! காரணம் என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிகத்து வர... மேலும் பார்க்க

`யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த நம்பிக்கை இருக்கிறது..!' - நடிகர் யோகி பாபு

தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், நடிகர் யோகிபாபு தன் குடும்பத்துடன் மதுரவாயல் தொ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: "தாமரை எங்கும் மலரும்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்ளுக்கு.!"- மோடி வாக்குறுதி

மேற்கு வங்கத்தில் இன்று (ஏப்.23) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், மேற்கு வங்கம் மதுராபூரில் நடைபெற்ற பேரணியில்... மேலும் பார்க்க

``மாற்றம் வரும் என நம்புகிறோம்" - நடிகர் ஆதி பேட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை முதலே திரையுலக நட்சத்திரங்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நடி... மேலும் பார்க்க

நெல்லை: `இரட்டைக் கொலை, கல்குவாரிக்கு எதிர்ப்பு' - தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக, சட்டமன்றத் தேர்தல் நடந்து வரும்போதிலும், நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி மற்றும் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப் போட மறுத்து பொதுமக்... மேலும் பார்க்க