செய்திகள் :

இன்றைக்கு ஒரு மாத வீட்டுச் செலவு ரூ.50,000... 10 ஆண்டுக்கு பிறகு ரூ.89,542 தேவை - எப்படி தெரியுமா?

post image

இன்றைக்கும் பலரும் புரிந்துகொள்ளாத விஷயமாகத்தான் இருக்கிறது, பணவீக்கம் எனப்படும் விலைவாசி உயர்வு. இதனால் நம் கையில் இருக்கும் பணத்தின் மதிப்பானது மெல்ல மெல்ல குறைந்துகொண்டே வருவதை நம்மில் பலரும் புரிந்துகொள்வதில்லை.

இதனால் சாதாரண மக்களை நாம் குறை சொல்ல முடியாது. காரணம், பணவீக்கம் என்பது கேன்சர் கிருமி மாதிரி. அது நம் உடம்பில் இருந்துகொண்டே நமக்கே தெரியாமல் நம்முடைய சத்து அத்தனையும் உறிஞ்சிக் குடித்துவிட்டு, கடைசியில் நம் உயிரை மாய்த்துவிடுவதைப் போல, பணவீக்கம் என்பது நமக்குத் தெரியாமலே நம் பணத்தின் மதிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கிறது. இதனை ஓர் உதாரணத்துடன் பார்த்தால் சட்டெனப் புரியும்.

உணவுப் பொருள்

உதாரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ அரிசி விலை 40 ரூபாய். 100 ரூபாய்க்கு 2.5 கிலோ அரிசியை நீங்கள் வாங்கி இருப்பீர்கள். ஆனால், இன்று ஒரு கிலோ அரிசி 70 ரூபாய் எனில் 100 ரூபாய்க்கு 1.5 கிலோ அரிசியைத்தான் வாங்க முடியும். இன்னும் சில ஆண்டுகளில் ஒரு கிலோ அரிசி விலை 100 ரூபாய் ஆகிவிட்டால், 100 ரூபாய்க்கு 1 கிலோ அரிசியைத்தான் வாங்க முடியும். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே 100 ரூபாய்தான் இப்போதும் நம்மிடம் இருக்கிறது. ஆனால், அதே அளவிலான மதிப்பு இல்லை. அதனால்தான் 2.5 கிலோ அரிசி வாங்க முடிந்த 100 ரூபாயால் இப்போது 1.5 கிலோ அரிசி மட்டுமே வாங்க முடிகிறது.

இப்படி ஒவ்வொரு பொருளின் விலை அதிகரித்தால், அவை அனைத்தையும் வாங்குவதற்கு நாம் செய்ய வேண்டிய செலவும் அதிகரிக்கும் அல்லவா? அப்படியானால், இன்றைக்கு நம் வீட்டுச் செலவு ரூ.50,000 ஆகிறது எனில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வளவு பணம் நம் குடும்பத்தை நடத்தத் தேவைப்படும்?

பணவீக்கம்

பணவீக்கம் அதாவது, விலைவாசி உயர்வு விகித வளர்ச்சிக்கேற்ப, நம் குடும்பத்தை நடத்தத் தேவையான பணத்தின் அளவு அதிகரிக்கும். தற்போது சில்லரைப் பணவீக்க விகிதம் நமது ரிசர்வ் வங்கி அறிவிக்கிறபடி சுமார் 4% என்கிற அளவில் இருக்கிறது. இந்த விகிதம் மாறிக்கொண்டே இருக்கும். இதனுடன் கல்விப் பணவீக்கம் மற்றும் மருத்துவப் பணவீக்கம் ஆகிய இரண்டையும் சேர்த்துப் பார்த்தால், 6% என்கிற அளவில் இருக்கும். ஆக, ஆண்டுதோறும் 6% நாம் அதிகம் செலவு செய்ய வேண்டும் என்கிறபோது, 10 ஆண்டுகள் கழித்து, நாம் செலவு செய்ய வேண்டிய தொகையை இனி பார்ப்போம்...

வீட்டு பட்ஜெட்

இப்போது ஒரு குடும்பத்தின் வீட்டுச் செலவு ரூ.15 ஆயிரம் எனில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.26,863 செலவு செய்ய வேண்டி இருக்கும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு எனில், ரூ.48,107 செலவு செய்ய வேண்டியிருக்கும்!

இப்போது ஒரு குடும்பத்தின் வீட்டுச் செலவு ரூ.25 ஆயிரம் எனில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.44,771 செலவு செய்ய வேண்டி இருக்கும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு எனில், ரூ.80,178 செலவு செய்ய வேண்டியிருக்கும்!

இப்போது ஒரு குடும்பத்தின் வீட்டுச் செலவு ரூ.50 ஆயிரம் எனில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.89,542 செலவு செய்ய வேண்டி இருக்கும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு எனில், ரூ.1,06,357 செலவு செய்ய வேண்டியிருக்கும்!

ஒரு மாதத்துக்கு இவ்வளவு தொகை தேவைப்படும் எனில், 12 மாதங்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

விலைவாசி உயர்வை நம்மால் தடுக்கவே முடியாது. விலைவாசி உயர்வுக்கேற்ப நாம் அதிகமாக சம்பாதித்தே ஆகவேண்டும். அல்லது, நாம் செய்யும் முதலீடு பணவீக்கத்தைவிட அதிக வருமானம் தருகிற மாதிரியாவது இருக்க வேண்டும்.

வீட்டுச் செலவு

நம்மிடம் இப்போது 10 லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை பாதுகாப்பான வங்கி எஃப்.டி ஒன்றில் 10 ஆண்டுகள் போட்டு வைத்தால், அதிகபட்சம் 7% - 8% வட்டி வருமானம் கிடைக்கும். ஆனால், பணவீக்கமே 6%, வரி 1% என்று போய்விட்டால், கூடுதலாக நமக்குக் கிடைக்கும் லாபம் 1% மட்டுமே!

இதே 10 லட்சம் ரூபாயைக் கொஞ்சம் ரிஸ்க் உடைய மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் 10 ஆண்டுகள் போட்டு வைத்தால், சுமார் 12% வரை லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பணவீக்கம் 6%, வரி 2% என்று வைத்துக்கொண்டால், ஆண்டுதோறும் 4% கூடுதலாக லாபம் கிடைக்கும். இப்படி 10 ஆண்டுகள் தொடர்ந்து கிடைக்கும்போது, விலைவாசி உயர்வை எளிதாக சமாளிக்க முடிகிற மாதிரி இருக்கும்!

இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டால், எதிர்காலத்தில் நாம் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருக்கலாம்!

Labham

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யணுமா?

இது போன்ற சுவாரஸ்யமான/முக்கிய முதலீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள் - https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்'-ஐத் தொர்புகொள்ளுங்கள் - மிஸ்டு கால்: 9600296001

நீங்கள் விரும்பிய நேரத்தில் லாபம் ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் பேச, கால் புக் செய்யவும் - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைப் படித்து பார்ப்பது அவசியம்.

11 நாளில் பணம் டபுளாகும்; மோசடி கும்பலிடம் 12 கோடி இழந்த டாக்டர்; அவசியம் அறிய வேண்டிய CAGR

யாரெல்லாம் அதிகப் பணம் சம்பாதிக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் பணம் செயல்படும் விதம் பற்றி ஓரளவுக்கே தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மை மீண்டும் மீண்டும் நிருபிக்கிற மாதிரி பல சம்பவங்கள் நடந்துகொண்... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் உழைக்கப் போகிறீர்களா? உண்மையான செல்வத்தை உருவாக்கும் 6 ரகசியங்கள்!

பணக்காரராக இருப்பதற்கும், உண்மையான செல்வந்தராக (Wealthy) இருப்பதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. 'The Psychology of Money' புத்தகத்தின் ஆசிரியர் மார்கன் ஹௌசல் சொல்வது போல, "நீங்கள் செலவு செய்த பணம்... மேலும் பார்க்க

NRI Corner - 5: இந்த `3'-ம் இல்லாமல் எதில் முதலீடு செய்தும் எந்தப் பயனும் இல்லை... அந்த `3' என்ன?

சமீபத்தில் என்னைச் சந்திக்க 'லாபம்' அலுவலகத்திற்கு வந்திருந்தார் அஜ்மல். குவைத்தில் இருந்து ஒரு வார அவசரப் பயணத்தில் சென்னைக்கு வந்திருந்தவர், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு என்னை சந்திக்க வந... மேலும் பார்க்க

கிரெடிட் கார்டை பயன்படுத்தி கெத்தா, சூப்பரா, ஓஹோனு இருக்கணுமா? #CreditCard A-Z | பணம் வளர்ப்போம்

நாள் 5நேற்றைய அத்தியாயத்தில் எப்படி பாசிட்டிவ் மற்றும் பாதுகாப்பைப் பார்த்தோமோ... அது மாதிரி இன்று கிரெடிட் கார்டிற்கு இருக்கும் செக்குகளைப் பார்த்துவிடுவோம். கிரெடிட் கார்டு பற்றி நமக்கு விளக்குபவர் ... மேலும் பார்க்க

NRI-களே... ஊர் திரும்பியதும் உங்கள் மாதாந்திர பென்ஷனுக்கு என்ன கேரண்டி?!

வெளிநாடுகளில் குடும்பத்தைப் பிரிந்து, இரவு பகலாக உழைத்துச் சம்பாதிக்கிறீர்கள். இன்று கை நிறையச் சம்பளம் வரலாம். ஆனால், ரிட்டயர்மென்ட் முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பும்போது, ஒவ்வொரு மாதமும் குடும்பச்... மேலும் பார்க்க

'ஒரு லிட்டர் பெட்ரோல் 265 ரூபாய்' - அதிரவைக்கும் புள்ளிவிவரம்! - எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?

''அவனுக்கென்னப்பா, கோடீஸ்வரன். எந்தக் கவலையும் இல்லாம ஜாலியா இருக்கான்'' என்று சில நண்பர்களைப் பற்றி சிலர் கொஞ்சம் பொறாமையுடன் பேசுவதைக் கேட்டு இருப்பீர்கள். கோடீஸ்வரன் என்பது இன்றைக்கு ஒரு கெத்து ஃபீ... மேலும் பார்க்க