செய்திகள் :

''இலங்கை டு சரிகமப நிகழ்ச்சி பயணம்" - 'சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்' பைனலிஸ்ட்கள் பேட்டி

post image

'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் 'சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5' நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இறுதிப்போட்டிக்கு தற்போது ஆறு பேர் பைனலிஸ்டாகத் தேர்வாகியுள்ளனர். அந்த லிட்டில் சாம்ப்ஸ் அனைவரிடமும் ஜாலியாக ஒரு உரையாடலை நிகழ்த்தினோம்.

Saregamapa Lil Champs Finalist
Saregamapa Lil Champs Finalist

முதல் பைனலிஸ்டான விஷ்ணுவரதன், "எல்லாரும் நல்லா பாடுற ஒரு மேடையில நான் தேர்வாயிருக்கிறது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அப்பா, அம்மா கூட இதை எதிர்பார்க்கல. என் அம்மாகிட்ட நான் நல்லா பாடுறேன் பாட்டு கிளாஸ் சேர்த்துவிடலாம்னு சொன்னாங்க.

ஆனா, அம்மாகிட்ட சேர்த்துவிட காசு இல்லைன்றதால இன்னொருத்தவங்கதான் என்னைப் படிக்க வச்சாங்க. அகாடமில நான் நல்லா பாடுறேன்னு, என்னை ஆடிஷன்ல கலந்துக்க சொன்னாங்க. எஸ்.பி.பி சார் மாதிரியே இருக்கிறதால எனக்கு சரண் சாரை ரொம்ப பிடிக்கும்" என்றார்.

இரண்டாம் ஃபைனலிஸ்டான அக்ஷித் நிருபம், "சீசன் 4 ஆடிஷன்ல முதல் சுற்றிலேயே எலிமினேட் ஆயிட்டேன். சீசன் 5 இல் இறுதிச் சுற்று வரை வந்திருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார்.

மூன்றாம் ஃபைனலிஸ்டான வர்ஜா, "பொதுவாவே கோல்டு வாங்கினவங்கள்ல இருந்துதான் ஃபைனலிஸ்ட் தேர்வு செய்வாங்க. நான் கோல்டு வாங்கினப்போ ஐந்து பேர் கோல்டு வாங்கி இருந்தாங்க.

அதுல இருந்து மூன்று பேர்தான் தேர்வு செய்வாங்கன்றதால எனக்கு ரொம்ப பயமா இருந்தது. என் பெயரைச் சொன்னதும் எனக்கு நான்தான் அதுன்னு நம்ப முடியாத அளவுக்குச் சந்தோஷமா இருந்தது.

நான் இலங்கையில இருந்து வந்திருக்கேன். முதல்ல அங்க நடக்கிற ஆடிஷன்ல நான் செலக்ட் ஆகணும். பிறகுதான் இங்க நடக்கிற மெகா ஆடிஷன்ல நான் கலந்துக்க முடியும்.

அங்க நான் செலக்ட் ஆகி, பிறகு இங்க நடந்த ஆடிஷன்லயும் என்னைத்தேர்வு பண்ணினாங்க" என உற்சாகத்துடன் பேசினார்.

நான்காம் ஃபைனலிஸ்டான தன்வி, "நான் பொதுவாவே மெலடி பாட்டுக்கள்தான் அதிகமா பாடுவேன். ஆனா அன்னைக்கு நான் வெஸ்டர்ன் பாடியிருந்தேன். அதுவும் நான் பாடும்போது பவர்கட் ஆகிடுச்சு.

அது இன்னும் பயத்தை ஏற்படுத்துச்சு. இருந்தாலும், நான் பைனலிஸ்டா செலக்ட் ஆனது எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்துச்சு" என்றார்.

Saregamapa Lil Champs Finalist
Saregamapa Lil Champs Finalist

ஐந்தாம் ஃபைனலிஸ்டான அபிஷேகா, "நிகழ்ச்சிக்கு வந்த தொடக்கத்தில் எனக்கு பைனலிஸ்ட் ஆகணும்னு ரொம்ப ஆசை இருந்தது.

அது இப்ப நிறைவேறியிருக்கிறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் பாடும்போது வரிகள் மறந்திடுவேன்னு கொஞ்சம் பயமா இருந்தது" எனப் பகிர்ந்துகொண்டார்.

ஆறாம் ஃபைனலிஸ்டான சுமன்ராஜ், "பாட்டு ரிகர்சல் பண்ணும்போது என்ன ஆனாலும் பரவாயில்லை, யாரு பைனலிஸ்ட் ஆனாலும் நம்ம நண்பர்கள் தானேனு நினைச்சேன். நம்ம செலக்ட் ஆகவில்லை என்றால் வீட்டிற்குப் போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கலாம்னு இருந்தேன்.

என்னுடைய அப்பா ஏற்கனவே சரிகமப நிகழ்ச்சியின் ஆடிஷன் அட்டெண்ட் பண்ணியிருக்காரு. அப்பா என்கிட்ட முதல் முறையாக எனக்கு சிங்கிங்ல ஆர்வம் இருக்கான்னு கேட்கும்போதுகூட நான் ஆர்வம் இருந்தும் வேண்டாம்னு சொல்லிட்டேன். பிறகு நிகழ்ச்சியில கலந்துகிட்டு இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது ரொம்பவே மகிழ்ச்சி" என்றார்.

முழு பேட்டியைக் காண கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

"'Heart Beat 3'ல நான் இருக்கேனா?!" - 'கனா கண்டேனடி' சஞ்சனா ஷேரிங்ஸ்

'ஹார்ட் பீட்' சீரிஸிலும், 'பொன்னி' சீரியலில் வில்லியாக நடித்து மக்களுக்குப் பரிச்சயமான சஞ்சனா, இப்போது 'கனா கண்டேனடி' தொடரில் நடித்து வருகிறார். இத்தொடருக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.Kana Ka... மேலும் பார்க்க

"சாண்ட்ரா இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா எங்கிட்ட டைவர்ஸ் வாங்கியிருப்பாங்க" - பிரஜின் பேட்டி

''தமிழில் இதுவரை 16 படங்கள் வந்திடுச்சு. நாலு படம் ரிலீஸ்க்கு வெயிட்டிங். மலையாளத்துல 4. கன்னடம், தெலுங்கில் தலா 1. ஆனாலும் எனக்குப் பிறகு டிவியில இருந்து சினிமாவுக்குப் போன விஜய் சேதுபதி, சிவ கார்த்த... மேலும் பார்க்க

நீங்களும் ஆகலாம் பிக்பாஸ் போட்டியாளர்! 'பிக்பாஸ் தி காமன் மேன்' எதற்கு தெரியுமா?

விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 10 அடுத்த சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. வழக்கம் போல் இந்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கவிருக்கிறார்.நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட... மேலும் பார்க்க

Kana Kandenadi: "சீரியல்ல நடிக்கணும்னு ஐ.டி வேலையை விட்டுட்டேன்" - 'கனா கண்டேனடி' டீம் பேட்டி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'கனா கண்டேனடி' சீரியலின் முக்கிய கதாபாத்திரங்களான ஜாய்சன் மற்றும் சைத்ராவிடம் பேசினோம். 'கனா கண்டேனடி' சீரியலில் அறிமுகமாகியிருக்கும் ஜாய்சன் அவரது முத... மேலும் பார்க்க

"ஆடிட்டருடன் திருமணம்... பத்து பேருக்கு மேல கூப்பிடலை; ஏன்னா..." - 'வாணி ராணி' ஜெனிப்ரியா

'வாணி ராணி', 'அழகு' உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஜெனிப்ரியா என்ற சாராவுக்கு மோகன் சுந்தர் என்பவருடன் சென்னை அம்பத்தூரிலுள்ள அம்மன் கோவில் ஒன்றில் வைத்து கடந்த வாரம் திருமணம் நடைபெற்றுள்ளது.திருமணத்தில... மேலும் பார்க்க

Kana Kandenadi: "இப்போது என்னிடம் பேசவே பயப்படுகிறார்கள்" - நடிகர் விக்னேஷ் ஷேரிங்ஸ்

'கிழக்குச் சீமையிலே' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துத் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் நடிகர் விக்னேஷ். கடந்த சில வருடங்களாக சீரியல் பக்கமும் இவர் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் டிவியில்... மேலும் பார்க்க