செய்திகள் :

``ஈரான் 'இந்த' 15 பரிந்துரைகளை ஏற்றால்... போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தயார்" - ட்ரம்ப்

post image

மூன்று வாரமாக ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்திய அமெரிக்கா, இப்போது சற்று 'சமாதன' மோடிற்கு வந்துள்ளது.

அதன் விளைவாக, கடந்த திங்கட்கிழமை (மார்ச் 23) ஐந்து நாள்கள் போர் தாக்குதல் நிறுத்தி வைப்பை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

நேற்று, ஈரான் போர் அமைதிக்கான 15 பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளார்.

அதில் ஈரான் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாவது...

> ஈரான் தற்போது தங்களிடம் உள்ள அணுசக்தி கட்டமைப்புகளைக் கலைக்க வேண்டும்.

> அணு ஆயுதம் தயாரிப்பதற்கான எந்தவொரு முன்னெடுப்பும் செய்யமாட்டோம் என்று ஈரான் வாக்கு கொடுக்க வேண்டும்.

ஈரான் போர்
ஈரான் போர்

> ஈரானியப் பிரதேசத்தில் யுரேனியம் செறிவூட்டல் நடைபெறக் கூடாது.

> ஈரான் தங்களிடம் உள்ள சுமார் 450 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை சர்வதேச அணுசக்தி முகமையிடம் விரைவில் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண்டும்.

> நடன்ஸ், இஸ்பஹான் மற்றும் ஃபோர்டோ அணுசக்தி நிலையங்கள் அகற்றப்பட வேண்டும்.

> சர்வதேச அணுசக்தி முகமை மற்றும் ஐ.நா அணுசக்தி பார்வையாளர்கள் ஈரான் முழுவதும் சோதனையிட முழு அனுமதியையும், வெளிப்படைத்தன்மையையும் தர வேண்டும்.

> ஈரான் தங்களது பிராந்தியத்தில் பயங்கரவாதிகள் போன்றவர்களைக் கொண்டு செயல்படுவதை நிறுத்த வேண்டும்.

> அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு நிதி, ஆயுதம் போன்றவற்றை வழங்குவதை ஈரான் நிறுத்த வேண்டும்.

> ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும். அது சுதந்திரமான கடல்வழிப் பாதையாகச் செயல்பட வேண்டும்.

> ஈரானின் ஏவுகணைத் திட்டத்தில், அதன் தயாரிப்பு எண்ணிக்கையையும், அது சென்று தாக்கும் தூரத்தையும் குறைக்க வேண்டும்.

> எதிர்காலத்தில் ஈரான் ஏவுகணைகளைப் பயன்படுத்தினாலும், அது தற்காப்பிற்காக மட்டுமே இருக்க வேண்டும்.

ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி
இவற்றை செய்தால் ஈரானுக்கு என்ன கிடைக்கும்?

> ஈரான் மீதுள்ள முழு தடைகளும் நீக்கப்படும்.

> புஷேர் அணுமின் நிலையத்தில் மின்சார உற்பத்தி உட்பட, ஈரானின் குடிசார் அணுசக்தித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அமெரிக்கா உதவும்.

> ஈரான் மேலே சொன்னவற்றை மீறினால், மீண்டும் முழு தடை விதிக்கப்படும்.

நட்பு சண்டை என்ற பெயரில் திமுகவுக்கு `செக்’ - புதுச்சேரியில் கூட்டணியை உடைக்கிறதா காங்கிரஸ்?

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் எங்கள் கூட்டணி தொடரும் என்று அறிவித்தது இந்தியா கூட்டணி. அதையடுத்து காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான வி.சி.க ஒரு தொகுதியிலும், தி.மு.க 14 தொகுதிகளிலும்... மேலும் பார்க்க

கூட்டணி பலத்துடன் திமுக; அமமுக ஆதரவுடன் அதிமுக; தவெக தருமா ட்விஸ்ட்? - தஞ்சாவூரில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'இன்று நாம் பார்க்கப்போவது தஞ்சாவூர் மாவட... மேலும் பார்க்க

ஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப்-ன் 15 அமைதி பரிந்துரைகளுக்கு ஈரான் முன்வைக்கும் '5' நிபந்தனைகள் என்ன?

ஈரான் போர் நிறுத்தத்தை முன்னிறுத்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று 15 அமைதி பரிந்துரைகளை முன்மொழிந்திருந்தார். போர் நிறுத்தத்திற்கு இதுவரை கொஞ்சம் முரண்டு பிடித்து வந்த ஈரான் தற்போது கொஞ்சம் இறங்கி வந... மேலும் பார்க்க

`ராஜபாளையம் டு சிவகாசி' - ராஜேந்திர பாலாஜி மீண்டும் பழைய தொகுதிக்கே மாறிய பின்னணி!

2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைந்ததில் இருந்து சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்ட அ.தி.மு.கவின் முகமாக ராஜேந்திர பாலா... மேலும் பார்க்க

RCB: ரூ.16,700 கோடிக்கு விற்பனையான பெங்களூரு அணி; புதிய உரிமையாளர்கள் யார்?

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி மற்றும் பெங்களூர் அணி சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. இதில் ராஜஸ்தான் அணியை அமெரிக்க தொழிலதிபர் மற்றும் வால்மார்ட், ஃபோர்டு போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்குதாரர் ஆன கல் சோ... மேலும் பார்க்க