செய்திகள் :

ஈரான் - இஸ்ரேல் போர்: 'நான் வீட்டுக்கு போகணும்'- நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் டேரன் சமி

post image

'நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்' என்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமியின் பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் எனப் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஈரான் - இஸ்ரேல் போர்
ஈரான் - இஸ்ரேல் போர்

இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழல் மற்றும் பதற்றம் காரணமாக, முக்கிய வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

டேரன் சமி
டேரன் சமி

விமானப் போக்குவரத்து பாதிப்பால் டி20 உலகக்கோப்பைக்காக இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியினரும், ஜிம்பாப்வே அணியினரும் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் 'நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்' என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி பதிவிட்டிருக்கிறார்.

Finn Allen: `இது சிறிய வெற்றி தான்; ஞாயிற்றுக்கிழமை தான் டார்கெட்' - அதிவேக சதம் அடித்த ஃபின் அலன்

ஈடன் கார்டனில் நடைபெற்ற நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 170 என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கை விரட்டி களமிறங்கிய ந... மேலும் பார்க்க

NZ vs SA: `ஆரம்பத்திலேயே பறித்துவிட்டார்கள்; இது மோசமான இரவுதான், ஆனால்.!" - மார்க்ரம்

நேற்று ஈடன் கார்டன்-ல் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதி போட்டியில்,நியூசிலாந்து அணி 170 என்ற ஸ்கோரை 13 வது ஓவரிலேயே அடைந்து, 9 விக்கெட் வித்தியாசத்த... மேலும் பார்க்க

IPL 2026: பகலில் ஷூட்டிங்; மாலையில் தீவிரப் பயிற்சி; சென்னை அணியோடு இணைந்த தோனி; எடுத்த ப்ளான் என்ன?

உலகக்கோப்பையே இன்னும் முடியவில்லை அதற்குள் ஐ.பி.எல்லுக்கான முகாமை தொடங்கிவிட்டது சென்னை அணி. சி.எஸ்.எகே அணியின் திட்டம் என்ன?தோனியும் கிட்டத்தட்ட ஐ.பி.எல். தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னையில்... மேலும் பார்க்க

"ஆரம்ப நாட்களிலிருந்தே அவரது வளர்ச்சியை நான் கவனித்து வருகிறேன்"- சஞ்சுவை பாராட்டிய சசி தரூர்

நேற்று முன் தினம் (மார்ச்.1) நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில்... மேலும் பார்க்க

மகத்தான சாதனைகள்; ஸ்டார்க் கண்ணீர் - கிரிக்கெட் என்றும் உங்களை நினைவில் வைத்திருக்கும் அலிஷா ஹீலி!

“இன்று நம்முடன் ஒரு அறிமுக வீராங்கனை உள்ளார். இன்றைய நாளை அவருக்கே உரியதாக்குவோம். அது நாளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்” என்று இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பேசியிருந்த... மேலும் பார்க்க

``சஞ்சு சாம்சனின் 97 ரன்களுக்கு இணையானது, துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகளும்!" - கோச் கம்பீர்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களிடம் ... மேலும் பார்க்க