செய்திகள் :

ஈரான் துறைமுகம், விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 'ட்ரம்ப் உத்தரவின் பேரில்' என விளக்கம்

post image

அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் 17-ம் தேதி கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பின், அவ்வப்போது தாக்குதல் நடந்தாலும், தற்போது முழு நேர போர் தொடங்கியுள்ளது.

துருக்கியில் நடக்கும் நேட்டோ மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம் முடிந்துவிட்டது' என்று கூறியிருந்தார்.

அதன் பின், இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்தன.

இந்த நேரத்தில் ஈரான் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் நிலைப்பாடுகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்...
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானில் உள்ள சபஹார் துறைமுகத்தின் அமெரிக்காவின் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப், "நேற்று ஈரான் நடத்திய கப்பல் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் தொடர்ந்தால், நிலைமை இன்னும் மோசமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"ஈரானின் தென்கிழக்கு நகரமான இரான்ஷாரில் உள்ள 'இரான்ஷார் விமான நிலையம்/விமானப்படைத் தளத்தை' இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை உள்ளூர் அதிகாரிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தளத்தை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல்படையின் விண்வெளிப் பிரிவு (IRGC-AF) ஓரளவுக்குப் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது" என்கிற பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார் ட்ரம்ப்.

அமெரிக்காவின் ராணுவ பிரிவுகளில் ஒன்றான மத்தியக் கட்டளையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்...

"அமெரிக்கப் படைகளின் தலைமைத் தளபதியின் (அதிபர்) உத்தரவின் பேரில், ஹார்முஸ் நீர்ச்சந்தி சர்வதேசக் கடல் வழிப் போக்குவரத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் ராணுவத் திறனை மேலும் முடக்குவதற்காக, அமெரிக்க மத்தியக் கட்டளையகப் படைகள் ஈரான் மீது கூடுதல் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளன.

முக்கிய சர்வதேச நீர்வழித்தடத்தில் எவ்வித தடையுமின்றிச் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல்கள் மற்றும் அதன் சிவிலியன் ஊழியர்கள் மீது அண்மையில் ஈரான் நடத்திய தேவையற்ற ஆக்கிரமிப்புச் செயல்களுக்கு, அமெரிக்கா, ஈரானை முழுப் பொறுப்பேற்கச் செய்து வருகிறது" என்று தாக்குதலுக்கான காரணத்தை விளக்கியுள்ளது.

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க

ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இந்த நேரத்தில், ஈரானில் உள்ள 'ஹம்ஷஹ்ரி' என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குற... மேலும் பார்க்க