செய்திகள் :

Doctor Vikatan: விபத்தில் துண்டான விரல்... மீண்டும் ஒட்டவைக்க முடியுமா?

post image

Doctor Vikatan: சமீபத்தில் நான் சாலையில் கண்ட காட்சி இது. இரண்டு டூ வீலர்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவரது விரல் துண்டாகிவிட்டது. அந்தத் துண்டான விரலை மீண்டும் தைத்து ஒட்ட வைக்க முடியுமா... அதை எப்படி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, அவசர சிகிச்சை மருத்துவர் கணேஷ்

அவசர சிகிச்சை மருத்துவர் கணேஷ்
அவசர சிகிச்சை மருத்துவர் கணேஷ்

கை விரல்கள் துண்டிக்கப்படும்போது, அதை மீண்டும் பொருத்த முடியுமா என்பது காயத்தின் தன்மையைப் (Depends on the injury) பொறுத்தது.

அதாவது விபத்திலோ அல்லது மெஷின்களில் (Machine) கை மாட்டிக்கொண்டோ விரல் நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்தால், அதை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பழையபடி பொருத்துவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

அதுவே, விபத்துகளின் போது கைகள் அல்லது விரல்கள்  நசுங்கிப் போயிருந்தால், அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது மிகவும் கடினம். துண்டிக்கப்பட்ட பாகத்தைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் முறை இதில் மிக முக்கியமானது. 

அந்த வகையில், துண்டிக்கப்பட்ட விரலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான வழிமுறைகள் சில உள்ளன.

துண்டிக்கப்பட்ட விரலை நேரடியாக ஐஸ் கட்டியிலோ அல்லது தண்ணீரிலோ வைக்கக் கூடாது. இது திசுக்களை அழித்துவிடும். முதலில் துண்டிக்கப்பட்ட பாகத்தைச் சுத்தமான பிளாஸ்டிக் கவரில் (Plastic cover) போட்டு நன்றாக மூட வேண்டும்.  பின்னர், அந்தக் கவரை அப்படியே ஒரு ஐஸ் பெட்டியினுள் (Ice container) வைக்க வேண்டும்.

துண்டிக்கப்பட்ட பகுதியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் கால அளவும் (Time Limit) இதில் மிக முக்கியம்.  பாதுகாப்பாக எடுத்துச் சென்றால், அந்தத் திசுக்களின் உயிர்வாழும் தன்மையைப்  (Tissue viability)  பொறுத்து, பொதுவாக 6 முதல் 12 மணி நேரத்திற்குள் துண்டிக்கப்பட்ட பாகத்தை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்து அறுவை சிகிச்சை செய்து ஒட்ட வைக்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Doctor Vikatan: 10 வயது மகனுக்கு தேர்வு நெருங்கினால் வயிற்றுப்போக்கு... தானாகச் சரியாகுமா?

Doctor Vikatan: என் மகனுக்கு 10 வயதாகிறது. பள்ளிக்கூடத்தில் தேர்வு நெருங்கினாலே அவனுக்கு வயிற்றுப்போக்குஆரம்பித்து விடுகிறது. பயத்தினால் இப்படி ஆகுமா... இதற்கு என்ன செய்வது, தானாகச் சரியாகுமா?பதில் சொ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண்களில் தெரியும் புள்ளி.... பூச்சி பறக்கும் உணர்வு... பார்வை பாதிக்குமா?

Doctor Vikatan:எனக்குக் கடந்த சில மாதங்களாக கண்ணில் கறுப்புப் புள்ளிகள் அல்லது பூச்சிகள் பறப்பது போல் தெரிகிறது. இது அவ்வப்போது தோன்றுகிறது... பிறகு தானாக மறைகிறது. இந்தப் பிரச்னையயால் கண் பார்வைபாதிக... மேலும் பார்க்க

Doctor Vikatan: அடிக்கடி ஏற்படும் விக்கல்... மரணத்தை ஏற்படுத்துமா?

Doctor Vikatan:எனக்கு அடிக்கடி விக்கல் எடுக்கிறது. தண்ணீர் குடித்தாலும் நிற்பதில்லை. சில சமயங்களில் 2 நாள்களுக்குக்கூட தொடர்கிறது. இது போன்று அடிக்கடி ஏற்படும் விக்கல் மரணத்தை ஏற்படுத்துமா?பதில் சொல்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடலில் சோடியம் குறைந்தால் கோமா நிலைக்குப் போவார்களா?

Doctor Vikatan:உணவில் உப்பை முற்றிலும் தவிர்த்தால் உடலில் சோடியம் குறைந்து கோமாவுக்குச் செல்ல வாய்ப்பு உண்டா... சோடியம் குறைந்தால் அதை எப்படிச் சமாளிப்பது... சிகிச்சைகள் உண்டா?பதில் சொல்கிறார், சென்னை... மேலும் பார்க்க

Doctor Vikatan: மூக்கில் வளர்ந்துள்ள சதை... ஆபரேஷன் இல்லாமல் கரைக்க முடியுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில வருடங்களாக மூக்கில் அரிப்பு, தண்ணீர் வடிவது போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் அலர்ஜி என விட்டுவிட்டேன். பிறகு மருத்துவரைச் சந்தித்துக் கேட்டபோது என் மூக்கில் ச... மேலும் பார்க்க

Doctor Vikatan: நுரைத்து வெளியேறும் சிறுநீர்... கிட்னி பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: என் வயது 54.சிறுநீர் கழிக்கும்போது எனக்கு அவ்வப்போது அது நுரைத்து வெளியேறுகிறது.இப்படி சிறுநீரில் நுரைத் தள்ளினால், அது சிறுநீரகப் பாதிப்பாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். இந்தப் பிரச்... மேலும் பார்க்க