மாணவ, மாணவிகள் "அப்பா, அப்பா" என அழைப்பது அளவில்லா மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகு இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திமுக போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
இதையும் படிக்க |உச்சநீதிமன்றத்தை சுற்றிப்பாா்க்க பொதுமக்களுக்கு அனுமதி முன்பதிவு அவசியம்
அதன்படி, வரும் பிப்ரவர 5 ஆம் தேதி நடைபெற இருக்கும ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் போட்டியிடுகிறார் என கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் ஏற்கேனவே தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2011 முதல் 2019 ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.