செய்திகள் :

ஈரோடு: பழைய இரும்பு வியாபாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.8 கோடி பணம் - அதிர்ச்சியில் GST அதிகாரிகள்!

post image

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான செல்வக்குமார் பெருந்துறை அருகில் உள்ள ஈங்கூர் பகுதியில் பழைய இரும்பு வியாபார கடை நடத்தி வருகிறார். வேறு சில தொழில்களும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வணிக பரிவர்த்தனைகள் தொடர்பாக ஜி.எஸ்.டி செலுத்தாமல் வந்திருக்கிறார். இது குறித்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு தராமல் அங்கிருந்து சென்றிருக்கிறார் செந்தில்குமார்.

செல்வக்குமார் வீடு

தொடர்ந்து நடைப்பெற்ற சோதனையில் இரும்பு குடோனில் இருந்து 15 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அருகில் உள்ள அவரின் வீட்டை அவசர அவசரமாக சிலர் பூட்டிவிட்டுச் செல்வதைக் கண்ட அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேச் சென்று சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

அப்போது வீட்டுக்குள் கட்டுக்கட்டாக பணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜி.எஸ்.டி அதிகாரிகள், வருமானவரித்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு செல்வக்குமார் வீட்டில் வைத்தே பணத்தை எண்ணியுள்ளனர். இதில் 8 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணத்தை பறிமுதல் செய்ததுடன், அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை: `வராத குடிநீருக்கு வரி' மல்லிகைப்பூ, அல்வா, காலிக்குடம்... திமுக கவுன்சிலர் போராட்டம்!

புதுக்கோட்டை மாநகராட்சியின் 42-வது வார்டுக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களுக்குக் குடிநீரே வழங்... மேலும் பார்க்க

அமெரிக்காவை உலுக்கிய லேசி பீட்டர்சன் கொலை வழக்கு: தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கும் புதிய ஆவணப்படம்!

அமெரிக்காவின் நீதித்துறை வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய லேசி பீட்டர்சன் கொலை வழக்கில், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு புதிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. தனது கர்ப்பிணி மனைவியைக் கொன்றதாகக் குற்... மேலும் பார்க்க

`தீர்ப்பு சாதகமா வரணும்' - நீதிபதியின் இருக்கையில்`வெள்ளை கடுகு' தூவி பில்லிசூனியம் வைத்த பெண்

சிவில் வழக்கு ஒன்றில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன், கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் மேடை, மேஜை மற்றும் தலைமை அதிகாரி அமரும் நாற்காலிக்கு அருகில் வெள்... மேலும் பார்க்க

'வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி' - ஓய்வூதியத் தொகையை எடுக்க சென்ற 82 வயது முதியவர் அதிர்ச்சி!

வங்கிகளில் சில நேரம் சாப்ட்வேர் பிரச்னை காரணமாக சிலரது வங்கிக்கணக்கில் அதிக பணம் இருப்பதாக கணக்கு காட்டும். இது போன்று பல முறை நடந்திருக்கிறது. பீகாரில் 82 வயது முதியவர் வங்கிக்கணக்கில் ரூ.759 கோடி இர... மேலும் பார்க்க

`மட்டன் போடுவதாக சொல்லிவிட்டு சிக்கன் போட்டுவிட்டார்கள்'- பீகார் திருமணத்தில் வன்முறை; 12 பேர் காயம்

திருமண வீட்டில் சாப்பாடு சரியில்லை என்றால் விருந்தினர்கள் டென்ஷாகிவிடுவது வழக்கம். அவர்களை சமாதானப்படுத்துவது திருமண வீட்டுக்காரர்களுக்கு பெரிய சவாலாக மாறிவிடும். பீகாரில் திருமண வீட்டில் மட்டன்(ஆட்டு... மேலும் பார்க்க

15 நாள்களில் 31 கோடி லிட்டர் தண்ணீர் சேமிப்பு... சத்தமில்லாமல் சாதித்த சத்தீஸ்கர் கிராம மக்கள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து, வெறும் 15 நாள்களுக்குள் சுமார் 31 கோடி லிட்டர் மழைநீரைச் சேமித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்த் (Mahasamund) மா... மேலும் பார்க்க