செய்திகள் :

`ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள்; செயல்பாடுகளில் மர்மம்; CBCID விசாரணை வேண்டும்' - பெ.சண்முகம் அறிக்கை

post image

`ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள் நடக்கிறது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை வேண்டும்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது...

"கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த வாரம் விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்ற ஊழியர் அந்த மையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதும், ஜூன் 22-ம் தேதியன்று நெல்லை மாவட்டம், மடத்துப் பட்டியைச் சேர்ந்த மலர்விழி (வயது 45) என்ற பெண் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஈஷா
ஈஷா

ஈஷா யோகா மையத்தில் 2022ம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் பயிற்சிக்கு வந்த நிலையில் மர்மமான முறையில் காணாமல் போனார். பிறகு அங்கிருந்த ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

அதேபோன்று 2016ம் ஆண்டு பொறியியல் பட்டதாரிகளான தனது இரண்டு மகள்களை மூளைச் சலவை செய்தும், போதைப் பொருட்கள் கொடுத்தும், மொட்டையடித்தும் சித்திரவதை செய்யும் ஜக்கி வாசுதேவ் பிடியிலிருந்த தனது மகள்களை மீட்டுத் தர வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேராசிரியர் ஒருவர் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று பல்வேறு காலக்கட்டங்களில் தங்களது பிள்ளைகளை மூளைச் சலவை செய்து ஈஷா மையக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக பெற்றோர்கள் தரப்பில் நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஈஷா யோகா மையத்தில் உள்ள மயான மேடையில் சட்டப்பூர்வமான தகவல்கள் அளிக்காமல் முறைகேடான வகையில் உடல்கள் எரியூட்டப்படுகின்றன என்ற புகார்களும் இந்த மையத்தின் மீது உள்ளது.

இந்த மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ஒன்றிய அரசின் உச்சபட்ச தலைவர்களுடனும், ஆட்சியாளர்களுடனும், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்புகளில் உள்ளதால் வழக்கு விசாரணைகளை நீர்த்துப் போகச் செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து வருவதாகவும் பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அறிக்கை
அறிக்கை

ஆன்மீகத்தின் பெயரால் ஈஷா மையத்தின் செயல்பாடுகள் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது.

எனவே, ஈஷா மையத்தில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த மரணங்கள், ஏற்கனவே நடந்துள்ள சந்தேக மரணங்கள் குறித்து விசாரிப்பதற்கும், ஏற்கனவே இந்த மையத்தின் மீது போதைப் பொருள், நில மோசடி, வன விலங்குகள் மீது தாக்குதல், மனித உடல் தகனம் உள்ளிட்டு அடுக்கடுக்கான புகார்கள் குறித்து விசாரிப்பதற்கும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய முறையில் விசாரணை செய்து உண்மைகளை கண்டறிய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது."

`கர்நாடக அரசின் பிராக்ஸி அரசா இந்த அரசு?' - ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனத்திற்கு அதிமுக எதிர்ப்பு

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட நாராயணாவை நியமித்ததற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அது குறித்து அதிமுக ஐ.டி விங் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

``திமுக-வை பாஜக பக்கம் இழுத்துச் செல்கிறார் ஆ.ராசா’’ - அமைச்சர் வன்னி அரசு சூசகம்!

ராணிப்பேட்டையில் இன்று, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``தோல்வி ஏற்பட்டதில் இருந்து ஆ.ராசா மிகுந்த மன உளைச்சலில் பலவிதமாக உளறி வருகிறார். வி... மேலும் பார்க்க

'ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய பதவி வழங்கிய முதல்வர் விஜய்!' - விவரம் என்ன?

ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட நாராயணாவுக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பொறுப்பை கொடுத்திருக்கிறார் முதல்வர் விஜய். வெங்கட நாராயணாதிரையுலகில் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தை தயார... மேலும் பார்க்க

ஆதார், பான், பாஸ்போர்ட்டெல்லாம் அல்ல... இவைதான் குடியுரிமைக்கான ஆதாரம்! - மத்திய அரசு சொல்வதென்ன?

'பாஸ்போர்ட் வெறும் போக்குவரத்து ஆவணம் தான்... குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல' - இது நேற்று முன்தினம் (ஜூன் 24, 2026) மத்திய வெளியுறவுத் துறை கூறிய ஒரு ஸ்டேட்மென்ட். ஆதார் கார்டை எடுத்துக்கொண்டாலுமே, அது ... மேலும் பார்க்க

`கன்ஃபெஷன் ரூம் டு கன்சல்டன்ட் ரூம்' - அறிவாலயத்தில் பிக்பாஸ் சாஷோ?!

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டு, மீண்டும் அதிரி புதிரி அரசியலுக்குத் திமுக திரும்பிட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தோல்விக்கான காரணங்கள் அறிக்கையாக கட்சித் தலைமைக்குச் சமர்ப்... மேலும் பார்க்க

`மூக்கைப் பிடிச்சிக்கிட்டு நிற்க வேண்டியிருக்கு' - கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அவல நிலை!

தென்மாவட்டங்களுக்கான பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையம் சற்றே பொலிவிழந்திருப்பது உண்மைதான்ஆனால், இன்னமும் சென்னைக்குள்ளும், புறநகர்ப் பகுதிகளுக்கும... மேலும் பார்க்க