செய்திகள் :

உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி... வருகிறது லாபம் 'மணி கிளினிக்'!

post image

SIP தொடங்கிவிட்டீர்கள். மாதந்தோறும் பணமும் செலுத்துகிறீர்கள். ஆனால் சந்தை 10% சரிந்தால் என்ன செய்வது என்று தெரியுமா? கையில் ₹5 லட்சம் இருந்தால் மொத்தமாக முதலீடு செய்வதா, அல்லது SIP முறையில் முதலீடு செய்வதா?

நல்ல லாபம் கிடைத்திருக்கும் முதலீட்டைத் தொடர்வதா, லாபத்தை எடுத்து விடுவதா? ஓய்வுக்குப் பிறகு முதலீட்டிலிருந்து மாதந்தோறும் பணம் எடுப்பது எப்படி? முதலீட்டின் அபாயத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

இப்படிப் பல விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய ஆர்வம் இருந்தாலும், சரியான விளக்கம் கிடைக்காமல் இருக்கலாம்.

சில நேரங்களில் நண்பர்கள் சொல்வது ஒரு விதமாகவும், இணையத்தில் படிப்பது வேறு விதமாகவும் இருக்கும். எதை நம்புவது, எதைப் புரிந்துகொள்வது என்ற குழப்பம் ஏற்படலாம். குறிப்பாக, நம்முடைய பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரைகுறையான புரிதலுடன் இருப்பது சரியானதல்ல.

இனி கூகுளில் தேட வேண்டாம். ஊகத்தின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டாம். உங்கள் சந்தேகங்களைக் கேட்க ஒரு வாய்ப்பு!

Labham Money Clinic

அதற்காகவே வருகிறது 'லாபம் மணி க்ளினிக்' – மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கான பிரத்யேக 90 நிமிட கேள்வி – பதில் நிகழ்ச்சி.

இது இன்னொரு வழக்கமான முதலீட்டு வகுப்பு அல்ல. உங்களுக்குத் தேவையான கேள்விகளைக் கேட்கவும், அவற்றுக்கான விளக்கங்களை நேரடியாகப் பெறவும் உருவாக்கப்பட்ட 90 நிமிட நேரலைக் கலந்துரையாடல்.

SIP, லம்ப்சம், SWP, சந்தை ஏற்ற இறக்கங்கள், முதலீட்டு அபாயங்கள், முதலீட்டுக் காலம், முதலீட்டாளர்கள் செய்யும் பொதுவான தவறுகள் என உங்களுக்குத் தேவையான விஷயங்களைக் கேளுங்கள். லாபம் குழுவினரிடம் நேரடியாக உங்கள் சந்தேகங்களைக் கேட்டு எளிமையான விளக்கங்களைப் பெறுங்கள்.

90 நிமிடங்கள் செலவிட்டு, உங்கள் முதலீட்டுப் பயணத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் கேள்விகளுக்குத் தெளிவு பெறுங்கள்!

நவம்பர் 18, புதன்கிழமை
⏰ மாலை 7:00 மணி
⌛ 90 நிமிடங்கள்

லாபம் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் குழுவினர் பதில் அளிப்பார்கள்.

உங்கள் முதலீடு குறித்த கேள்விகளை ஒத்திப்போடாதீர்கள். இந்த முறை கேளுங்கள்!

90 நிமிட நிகழ்ச்சி என்பதால், முதலில் வருவோர்க்கே முன்னுரிமை.

முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-nov18-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_nov18_2026

குறிப்பு: குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பரிந்துரைப்பது அல்லது மதிப்பீடு செய்வது இந்த நிகழ்ச்சியின் நோக்கமல்ல. பொதுவான முதலீட்டுக் கருத்துகள் மற்றும் சந்தேகங்களுக்கு மட்டுமே விளக்கம் அளிக்கப்படும். குறிப்பிட்ட எந்தவொரு நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஸ்கீம் பற்றியும் இதில் பதில் அளிக்கப்படமாட்டாது.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கான பணத்தைச் சேர்க்க மிகச் சிறந்த வழி எது தெரியுமா?

நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தேவைப்படும் என்று நினைத்து நாம் பல வகையில் பணம் சேர்க்கிறோம். 'நாம் இருக்கிற வரை நமக்கு; நமக்குப்பின் நம் குழந்தைகளுக்கு...' என்று நினைத்து, வீடு வாங்குகிறோம். 'இப்... மேலும் பார்க்க

ஓய்வுக்காலத்திற்கு EPF மட்டும் போதுமா? இவற்றையும் மனசில் வெச்சு செயல்படுங்க!

மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினரின் மிகப்பெரிய நம்பிக்கையே ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் (EPF - Employee's Provident Fund) தொகைதான். "நமக்குத்தான் பி.எஃப் இருக்... மேலும் பார்க்க

A2B : ரூ.1,600 கோடி... கைமாறிய பெரும்பான்மையான பங்குகள்! - வாங்கியது யார் தெரியுமா?

போதி ட்ரீ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் A2B-இன் பெரும்பான்மையான பங்குகளை சுமார் 180 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,600 கோடி) வாங்குவதன் மூலம் அடையாறு ஆனந்த பவனின் உரிமையைத் தன்வசமாக்கி இர... மேலும் பார்க்க

இளம் தலைமுறையினருக்காக ‘யங் ஸ்டார் நியோ’ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தது ஸ்டார் ஹெல்த்!

ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NSE: STARHEALTH; BSE: 543412), இளம் தொழில் வல்லுநர்கள், திருமணமான தம்பதிகள் மற்றும் வளர்ந்து வரும் குடும்பங்களின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட ... மேலும் பார்க்க

கையில் மொத்தப் பணம்... முதலீடு செய்ய பயமா? தயக்கத்தால் எவ்வளவு இழக்கிறீர்கள் தெரியுமா?

மார்க்கெட் இறங்கினால் முதலீடு செய்யலாம்... இன்னும் கொஞ்சம் குறைந்தால் வாங்கலாம்... என்று காத்திருக்கிறீர்களா? இந்தக் காத்திருப்புக்கே நீங்கள் விலை கொடுத்துக்கொண்டிருக்கலாம்!வீடு விற்ற பணம், சொத்து மூல... மேலும் பார்க்க