மக்கள் சிம்மாசனம் யாருக்கு? - Quick Look! | Junior Vikatan Mega Survey | DMK ADM...
உங்க குழந்தைகளோட School, College Fees சமாளிக்க இது ஒரு 'சூப்பர்' வழி! | பணம் வளர்ப்போம்
குழந்தை பிறந்தாச்சு... இதன் பிறகு, பெற்றோர்களுக்கு இருக்கும் அடுத்த மிகப்பெரிய செலவு, 'கல்விக் கட்டணம்'.
எந்தத் திட்டமிடலில் கவனமாக இருக்கிறோமோ... இல்லையோ... கல்வி நிதி திட்டமிடல் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். காரணம், அது தான் குழந்தைகளின் எதிர்காலம்.
குழந்தைகளின் எதிர்காலத்தை எப்படி திட்டமிடலாம் என்பதை விளக்குகிறார் நிதி ஆலோசகர் முனைவர் A.V செந்தில்.

"கல்வி விஷயத்தில் பெரும்பாலான பெற்றோர்களின் சாய்ஸ், 'தனியார் பள்ளிக்கூடங்கள்' தான்.
இப்போது பல தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி ஃபீஸே ரூ.1 லட்சத்திற்கும் மேல் ஆகிறது.
'எத்தனை செலவானாலும் சரி... நம்ம குழந்தையை நல்ல ஸ்கூல்ல படிக்க வெச்சடணும்' என்று நினைப்பது தவறில்லை.
ஆனால், அந்தக் கட்டணத்தை சரியாக கட்டிவிட முடியுமா என்று பார்ப்பது தான் புத்திசாலித்தனம். 'கடன் வாங்கியாவது ஃபீஸ் கட்டிவிடுவேன்' என்று நினைத்தால், அந்தக் கடன் பிள்ளைகளின் தலையிலேயே போய் விழுவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.
ஒரு குழந்தையின் ஒரு ஆண்டு பள்ளிக் கட்டணம் என்பது பெற்றோரின் ஒவ்வொரு மாத வருமானத்தில் 5 - 10 சதவிகிதத்தை எடுத்து வைக்கும் போது, அதை கூட்டும் போது மொத்த ஃபீஸும் இதே தொகையில் வந்திருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, பெற்றோருக்கு ஒரு மாத வருமானம் ரூ.50,000 என்றால், அதில் 10 சதவிகிதம் ரூ.5,000.
5,000-த்தை 12-ஆல் பெருக்கினால் ரூ.60,000. ஆக, ஒரு குழந்தையின் பள்ளிக்கூட கட்டணம் ஒரு ஆண்டிற்கு ரூ.60,000 ஆக இருக்க வேண்டும்.
குறைவான சம்பளமாக இருந்தால், ரூ.30,000 இருப்பதே நல்லது.

இன்னொரு குழந்தை இருந்தாலும், இதே பேட்டர்னை ஃபாலோ செய்யுங்கள்.
மாதா மாதம் இந்தத் தொகையை எடுத்து வைத்துவிடுவது நல்லது.
அடுத்தது, கல்லூரிக் கட்டணம். பள்ளிக் கட்டணத்தையாவது எப்படியாவது சமாளித்துவிடலாம். ஆனால், கல்லூரி கட்டணம் என்பது மிகப்பெரிய தொகை.
அதனால், அதற்காக குழந்தை பள்ளிக்கு செல்லும் போதிலிருந்தே, செல்வ மகள் அல்லது செல்வ மகன் திட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்து வாருங்கள்.
இந்தத் திட்டத்தில் குறைவான வட்டி தான் கிடைக்கும் என்று நினைப்பவர்கள், ரிஸ்க் எடுக்க துணிந்தால் இன்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்து வரலாம்.
இல்லையென்றால், நிதி ஆலோசகரிடம் பேசிப்பாருங்கள்.
செல்வ மகள் அல்லது செல்வ மகன் திட்டமாக இருந்தாலும், இன்டெக்ஸ் ஃபண்டாக இருந்தாலும் ஆண்டுதோறும் 5 - 10 சதவிகிதம் ஸ்டெப் அப் செய்து முதலீடு செய்யுங்கள்".!





















