செய்திகள் :

உடல்நிலை சரியில்லாத மகள் தற்கொலை; துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை - பெரம்பலூர் சோகம்

post image

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமம், அண்ணா நகரை சேர்ந்தவர் முருகதாஸ் (53). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், சோபனா (24) என்ற மகளும், முகேஷ் (22) மகனும் உள்ளனர். இந்நிலையில், சோபனாவிற்கு பிறந்த பொழுது இருந்தே, உடல் உபாதை கழிப்பதில் பிரச்னை இருந்து வந்தது. அந்த பிரச்னையால் அவர் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இது தொடர்பாக, சில நாட்களாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக சோபனா வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தவர், வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

perambalur

இந்நிலையில், மகள் தூக்கிட்டு இறந்த துக்கம் தாளாமல் தவித்து வந்த முருகதாஸூம், மக்கள் இறந்த மறுநாளே அவரது மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மகள் மீது கொண்ட அளவில்லாத பாசத்தின் காரணமாக இப்படி முருகதாஸ் தற்கொலை செய்துகொண்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து மகளும், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடு புகுந்து பெண் அடித்து கொலை – கோவையில் மீண்டும் அதிர்ச்சி

கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (58). இவர் தனது மகனுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சாந்தி வீட்டு வேலை செய்து ... மேலும் பார்க்க

திருச்சி: சமயபுரத்தில் தொடர் வாகனத் திருட்டு; 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! - 4 பேர் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சமயபுரம் ஈச்சம்பட்டி பிரிவு சாலையில், சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந... மேலும் பார்க்க

கோவை பொறியியல் கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 5 மாணவர்கள் கைதான பின்னணி என்ன?

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன் (19) என்பவர், கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து அமுதன் படித்து வந்... மேலும் பார்க்க

பெரம்பலூர்: எம்.எல்.எம் பாணியில் மோசடி; ஒரு கிராமமே பல லட்சங்களை ஏமாந்த அதிர்ச்சி; என்ன நடந்தது?

பெரம்பலூர்மாவட்டத்திலிருக்கிறது அன்னமங்கலம். இந்தக் கிராமத்தில் கியூநெட் பெயரில் அதிக லாபம் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரே கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மா... மேலும் பார்க்க

வேலூர்: இலவச முகாம்... இன்ஸ்டா விளம்பரம்... பெண்ணின் உயிரைப் பறித்ததா `அபூர்வ மூலிகைச் சாறு’?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள குடிபல்லி கிராமம் சென்னராயசுவாமி கோயில் வளாகத்தில் `ஆஞ்சநேயா ஜனசேவா அறக்கட்டளை’ சார்பாக மாதந்தோறும் 11-ம் தேதி கண் பாதிப்புகளுக்கு இலவசமாக மூலிகை சிகிச்சை முகா... மேலும் பார்க்க

கருவிலுள்ள பாலினம் அறிய சட்டவிரோத ஸ்கேன் சென்டர் - பொறிவைத்து பிடித்த மருத்துவக்குழு! பகீர் சம்பவம்

"கர்ப்பத்திலிருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என கண்டறிய ரூ 23 ஆயிரம்தான்" என ஊர் ஊராக கேன்வாஸ் செய்து சட்டவிரோத ஸ்கேன் சென்டர் நடத்திய கும்பலை மருத்துவக் குழுவினர் பொறி வைத்து பிடித்துள்ள சம்பவம... மேலும் பார்க்க