செய்திகள் :

"உனக்கு என்ன நஷ்டம்? அவர் என் கணவர்" - நடிகர் கோவிந்தா குறித்த கேள்விக்கு மனைவி காட்டம்

post image

பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கும், அவரது மனைவி சுனிதா அஹுஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் பிரியப்போகிறார்கள் என்றும் அடிக்கடி செய்தி வெளியாகி வருகிறது.

தற்போது இயக்குநர் பரா கான், நடிகர் ரிதேஷ் தேஷ்முக் ஆகியோர் தொகுத்து வழங்கும் லாக் அப்: சச் யா சஸா ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் சுனிதா கலந்துகொண்டார்.

இந்தச் சீசனின் போட்டியாளர்களுள் ஒருவராகக் களமிறங்கியுள்ள சுனிதா அஹுஜா, நிகழ்ச்சியின் புதிய ஜெயிலர்களான நிகழ்ச்சியை நடத்தும் ஃபரா கான் மற்றும் ரிதேஷ் தேஷ்முக் முன்னிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதில் வைல்ட்கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த நடிகை ஷில்பா ஷிண்டே, கோவிந்தா குறித்து சுனிதா பேசிய கருத்துக்களை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசினார்.

சுனிதா எதையும் யோசிக்காமல் ஓப்பனாகப் பேசுவதால், மக்கள் அவரை சமூக வலைத்தளங்களில் 'எதையும் யோசிக்காமல் பேசுபவர்'என்று அழைக்கிறார்கள் என்று கூறினார்.

நடிகர் கோவிந்தா, அவரது மனைவி சுனிதா அஹுஜா
நடிகர் கோவிந்தா, அவரது மனைவி சுனிதா அஹுஜா

ஷில்பாவின் இந்தக் கருத்துக்கு சுனிதா உடனடியாகப் பதிலடி கொடுத்தார். ''எனது குடும்பத்தைப் பற்றி நீ பேசாதே. அவர் என் புருஷன். அவர் 50 திருமணம் மீறிய உறவு (Affairs) வைத்திருந்தாலும், உனக்கு என்ன நஷ்டம்? அவர் என் கணவர், நான் அவருடைய மனைவி.

மக்கள் என்னை விமர்சிப்பதற்கு முன்பாக, தனது சூழ்நிலையில் இருந்து யோசித்துப் பார்க்க வேண்டும். இது போன்ற ஒரு சூழ்நிலை உங்களுக்கு ஏற்படும் போதுதான், நான் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். இது என் வாழ்க்கை. நான் என்ன நினைக்கிறேனோ அதைத்தான் செய்வேன். அவர் என் கணவர்.

அவருக்கு 10 பெண்களுடன் திருமணம் மீறிய உறவு இருந்தாலும் சரி, நான் அவரை விட்டுப் பிரிய மாட்டேன். எனது கடைசி மூச்சு இருக்கும் வரை நான் அவரை நேசிப்பேன்.

அவர் என் கணவர். அவரைப் பற்றிப் பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை, நான்தான் அவருடைய மனைவி. கடந்த 36 ஆண்டுகளாகத் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். தனது கணவர் மிகவும் நல்லவர் மற்றும் குடும்பத்தின் மீது பற்றுள்ளவர்'' என்றும் அவர் பேசினார்.

சுனிதாவின் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து, சிலர் அவரது தீவிரமான அன்பைப் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், திருமண வாழ்க்கையில் துரோகத்தை இவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்வது தவறான முன்னுதாரணம் என்று கூறி மற்றொரு தரப்பினர் அவரது கருத்தை விமர்சித்து வருகின்றனர்.

`1000 ஊசிகள் போட்டுக்கொண்டேன்..!' - செயற்கை முறையில் குழந்தை பெற்ற வேதனையைப் பகிர்ந்த பாலிவுட் நடிகை

பாலிவுட் நடிகை தேஜஸ்வினி கோலாபுரே, நடிகர் பங்கஜ் சரஸ்வத் என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு 2015ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை நீண்ட போரா... மேலும் பார்க்க

டெல்லி மாணாவர்கள் போராட்டம்: "இந்தியாவின் எதிர்காலத்திற்காக வாங்சுக் போராடுகிறார்" - பிரீத்தி ஜிந்தா

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க

டெல்லி மாணவர் போராட்டம்: "தடியடி தேவையில்லை; அரவணைக்கும் கைகள்தாம் தேவை" - நடிகர் சோனு சூட்

நீட் தேர்வு முறைகேடு, கல்வியில் சீர்திருத்தம் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா உட்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போ... மேலும் பார்க்க

வயதான தோற்றத்தில், சோர்வாக சல்மான் கான்: `அவருக்கு என்ன ஆச்சு?' - இணையத்தில் ரசிகர்கள் வேதனை

பாலிவுட் நடிகர் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் சல்மான் கான் மும்பையில் நடந்த அரசு விழா ஒன்றில் கலந்து கொண்டார். குடிசை புனரமைப்ப... மேலும் பார்க்க

Ramayana: "சீதை கதாபாத்திரத்தில் நடிக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்!" - சாய் பல்லவி

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் பிரத்தியேக டிரெய்லர் திரையிடல் நிகழ்வு நேற்றைய தினம் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில்... மேலும் பார்க்க

72nd National Awards: 'பாஜக பிரசார படமாக இருந்தால் தேசிய விருது வழங்கப்படுமா?' - வலுக்கும் கண்டனம்!

72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருடமும் பாஜகவுக்கு ஆதரவான அரசியல் பேசும் படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.கடந்த 2024ஆம் ஆண்டு இயக்குநர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பால... மேலும் பார்க்க