செய்திகள் :

`உன் அப்பாவை கொன்றேன், நீதான் அடுத்த குறி'- கொலை செய்யப்பட்ட மகா., அமைச்சர் மகனுக்கு கொலை மிரட்டல்

post image

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாபா சித்திக் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். பாபா சித்திக் நடிகர் சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் சுட்டக் கொலை செய்தனர். தற்போது பாபா சித்திக்கின் மகனும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) எம்எல்ஏ-வுமான ஜீஷான் சித்திக்கிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து செயல்படும் கேங்ஸ்டர் ஜீஷன் அக்தர் சமூக ஊடகங்களில் குரல் மூலம் மிரட்டலை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

பாபா சித்திக் கொலையில் அக்தர் முக்கிய சதிகாரர்களில் ஒருவர் ஆவார். மேலும் இக்கொலை வழக்கில் மும்பை குற்றப்பிரிவு மற்றும் பிற விசாரணை அமைப்புகளால் அக்தர் தேடப்பட்டு வருகிறார். அக்தர் அனுப்பி இருக்கும் குரல் மிரட்டல் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த குரல் குறிப்பில், பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்று ஜீஷான் சித்திக்கை மிரட்டி, "உன் தந்தையை கொன்றேன், அடுத்த குறி நீதான்.

எனது எல்லா நடவடிக்கைகளிலும் நீங்கள் தலையிடுகிறீர்கள். உங்களால் முடிந்தவரை க்ரைம் பிராஞ்சிற்கு ஓடுங்கள். உங்கள் பாதுகாப்பை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கொலை மிரட்டல் குறித்து ஜீஷான் சித்திக் அல்லது அவரது குடும்பத்தினர் யாரும் முறைப்படி போலீஸில் புகார் அளிக்கவில்லை. ஜீஷன் சித்திக் தற்போது இந்தியாவுக்கு வெளியே இருக்கிறார். மும்பை குற்றப்பிரிவு வைரலான ஆடியோ கிளிப்பின் நம்பகத்தன்மையை கண்டறியவும், அது எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதையும் கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஜீஷான் சித்திக் இந்தியா திரும்பியதும் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என போலீஸார் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாபா சித்திக் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வெளியில் மர்ம நபர்கள் இரண்டு பேரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக நடிகர் சல்மான் கான் வீட்டின் மீதும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

உ.பி.யில் நூதன முயற்சி: நெடுஞ்சாலை ஈரத்தை காய வைக்க மின் விசிறிகளை கொண்டு வந்து வைத்த அதிகாரிகள்!

வடமாநிலங்களில் இப்போது மழை அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் அனைத்து சாலைகளும் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர... மேலும் பார்க்க

திடீரென நிரம்பி குலுங்கும் கிணற்று தண்ணீர்: குஜராத்தில் மர்ம கிணற்றை பார்க்க திரளும் மக்கள்! | Video

குஜராத் மாநிலம் மோர்பி அருகில் உள்ள விர்பர்தா என்ற கிராமத்தில் இருக்கும் கிணறு ஒன்று அங்குள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. கடந்த 5 நாட்களாக அக்கிணற்றில் ஒரு அசாதாரண செயல்பாடு இருந்து வருகிறது.... மேலும் பார்க்க

An Ordinary Man : இயக்குநர் ரவி மோகன்; ஹீரோ யோகி பாபு - ஷூட்டிங் ஸ்பாட் ஜாலி போட்டோஷூட்!

An Ordinary Man Exclusive: “சாதாரண மனிதன் கடவுளாகுற கதைதான் An Ordinary Man” - இயக்குநர் ரவி மோகன் மேலும் பார்க்க

`எங்களுக்கு வர நேரமில்லை' - இறந்த தந்தை; இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்த்த மகள்கள்

மும்பையை சேர்ந்த சிவ்சரண் ராம் ரத்தன் குப்தா. இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். மூன்று பேருக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அவர்கள் தங்களது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கின்றனர... மேலும் பார்க்க

மும்பை: வேலையிலேயே இல்லாத 10 கற்பனை போலீஸார்; ரூ.6.5 கோடி சம்பளம் பட்டுவாடா செய்து மோசடி

மும்பை காவல் துறையில் இல்லாத ஒருவரை இருப்பது போன்று காட்டி மோசடி செய்யப்பட்டுள்ளது. காவல் துறையில் இல்லாத 10 பேர் உத்தியோகபூர்வ பதிவேடுகளில் ஊழியர்களாக பலமுறை காட்டப்பட்டு, அவர்களின் கணக்கில் மாதாந்தி... மேலும் பார்க்க

80 மீட்டர் தேசியக் கொடி... உலகச் சாதனை படைத்த சேலம் பள்ளி மாணவர்கள்!

பெற்றோரின் வழிகாட்டுதலுடன், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசைத்தறியில் 80 மீட்டர் தேசியக் கொடியை நெய்து உலக அங்கீகாரம் பெற்ற அண்ணன்–தங்கையான தமிழ்ச்செல்வன் - செந்தமிழமுதுவின் சாதனை கவனம் ஈ... மேலும் பார்க்க