செய்திகள் :

'எங்க வீட்டுக்கு வாங்க' என்றழைத்த மோடி; கலைஞரின் எமோஷனல் பதில் - நினைவுக்கூர்ந்த ஜெகத்ரட்சகன்

post image

திருவள்ளூரில் நேற்று (பிப்.5) திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் கட்சி நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது அவர் பிரதமர் மோடி, கலைஞர் கருணாநிதி சந்திப்பின்போது நடந்த விஷயத்தை நினைவுக்கூர்ந்திருக்கிறார்.

மேடையில் பேசிய அவர், " தலைவர் கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அப்போது அவரைப் பார்க்க பிரதமர் மோடி வந்திருந்தார். நாங்கள் அங்கேயேதான் இருந்தோம்.

ஜெகத்ரட்சகன்
ஜெகத்ரட்சகன்

எங்களை வெளியே போக வேண்டாம் இங்கேயே இருங்கள் என கலைஞர் சொன்னார். அப்போது கலைஞரை நலம் விசாரித்த பிரதமர் மோடி கோபாலபுரம் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்.

பிறகு கலைஞரிடம், ' நீங்கள் எத்தனையோ தலைவர்களையும், பிரதமரையும், ஜனாநிதிபதியையும் உருவாக்கியிருக்கிறீர்கள்.

இவ்வளவு செல்வாக்கு படைத்த நீங்கள் இவ்வளவு சிறிய வீட்டில் இருக்கிறீர்கள். டெல்லியில் எனக்குப் பெரிய வீடு இருக்கிறது.

என் வீட்டுக்கு வாருங்கள்' என்று கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி அழைத்தார். ஆனால் 'எனக்கு 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்.

அதனால் உங்கள் வீடு பத்தாது' என கலைஞர் சிரித்துக்கொண்டே கூறிவிட்டார். அதனை கேட்டு நான் அசந்துவிட்டேன்" என நினைவுக்கூர்ந்திருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய ஜெகத்ரட்சகன், " சமீபத்தில் டெல்லிக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு முதலமைச்சர் என்னைப் பார்த்து, 'உங்கள் முதலமைச்சர் மிகப்பெரிய சாதனைகளைச் செய்கிறார்.

அவர் செய்கின்ற சாதனைகளை எல்லாம் பார்த்து நான் வியந்து போயிருக்கிறேன்' என அவர் சொன்னார்" என ஸ்டாலின் குறித்தும் புகழ்ந்திருக்கிறார்.

`மோடியைச் சூழ்ந்த காங்., பெண் எம்.பி-க்கள்; நான்தான் அவரை வர வேண்டாமென்றேன்!' - ஓம் பிர்லா

இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறுத்து முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், காங்... மேலும் பார்க்க

'வெறும் கைகளால் தொடக் கூடாது'; சென்னையில் பரவும் பறவைக் காய்ச்சல் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்த பறவைகள் மற்றும் கால்நடைகளை வெறும் கைகளால் தொடக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வெள... மேலும் பார்க்க

'நான் சரண்டர் ஆவதா' கொதிக்கும் ராமதாஸ் டு திமுக-வுக்குத் தாவும் அதிமுக மாஜி மாண்புமிகு! | கழுகார்

கொதிக்கும் ராமதாஸ்!'நான் சரண்டர் ஆவதா...'தேர்தல் நெருங்க நெருங்க, 'என்ன செய்யப் போகிறோம்?' என்ற கேள்வி ராமதாஸ் தரப்பினருக்கு ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வி.சி.க-வின் தலையீட்டால், ராமதாஸுக்கு எந்த பத... மேலும் பார்க்க

`கமல் பேசிய எதுவுமே புரியவில்லை; அதனால்தான் கோவை மக்கள் திருப்பி அனுப்பினார்கள்'- வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் திராவிட மாடல் தோல்வி அடைந்துள்ளது. போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. மக்கள... மேலும் பார்க்க

சென்னை: 'அரசுக்கு நன்றி; ஆனால் போராட்டம் தொடரும்!' - தூய்மைப் பணியாளர் போராட்டக்குழு

சென்னையில் தனியார்மயத்தை எதிர்த்து 150 நாள்களுக்கு மேலாகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை மீண்டும் மாநகராட்சியின் ஒப்பந்தப் பணியாளர்களாகவே சேர்த்திருக்கிறது சென்னை மாநகராட்சி.கு.பாரதிஇது சம்பந்தமாக தூய்... மேலும் பார்க்க

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணையுமா? - அஜித் பவார் மனைவி, மகன்களை சந்தித்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித்பவார் கடந்த மாதம் 28ம் தேதி நடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் துணைமு... மேலும் பார்க்க