செய்திகள் :

எண்களால் விண்வெளிக்குப் பாதையிட்ட கணித மேதை: நாசாவின் மனித கணினி கேத்தரின் ஜான்சன்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

கேத்தரின் ஜான்சன் ஆகஸ்ட் 26, 1918 அன்று அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஒயிட் சல்பர் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் பிறந்தார். அவரது தந்தை ஜோசுவா மெக்கின்லி கோல்மன் மர வேலை செய்பவராகவும் தாயார் ஜாய்லெட் ராபர்ட்டா லோவ் ஆசிரியராகவும் பணியாற்றினர்.  கேத்தரின் இவர்களின் நான்கு குழந்தைகளில் இளையவர். இவரது ஊரில் கறுப்பினக் குழந்தைகளுக்கான பள்ளிகள் 8-ஆம் வகுப்பு வரை மட்டுமே இருந்தன. எனவே, இவரின் பெற்றோர் 120 மைல்களுக்கு அப்பால் இருந்த மற்றொரு நகரத்திற்குச் சென்று கேதரினை உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தனர்.

எண்களின் மீதிருந்த அதீத ஆர்வத்தால், பத்து வயதிலேயே உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். தனது பதினான்காவது வயதிலேயே பள்ளிப் படிப்பை மிகச் சிறப்பாக முடித்தார். பதினைந்து வயதில் மேற்கு வர்ஜீனியா மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு கணிதம் மற்றும் பிரெஞ்சு மொழியைக் கற்று, பதினெட்டாவது வயதில் (1937) சிறந்த மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1939-ஆம் ஆண்டு, மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பட்டதாரி திட்டத்தில் சேர்ந்த முதல் மூன்று ஆப்பிரிக்க-அமெரிக்க (கறுப்பின) மாணவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1939-ஆம்ஆண்டுகேத்தரின்ஜேம்ஸ்பிரான்சிஸ்கோபிலைதிருமணம்செய்துகொண்டார். இவர்களுக்குஜாயிலெட், கேத்தரின்மற்றும்கான்ஸ்டன்ஸ்என்றமூன்றுமகள்கள்பிறந்தனர். ஜேம்ஸ் 1956-ஆம்ஆண்டுபுற்றுநோயால்இறந்தார்.

1959-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ அதிகாரியான ஜேம்ஸ் ஏ. ஜான்சனை மறுமணம் செய்து கொண்டார். இவர்கள் 60 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர்.

தனது கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, சிறிது காலம் ஆப்பிரிக்க அமெரிக்க மாணவர்களுக்கு கணிதம் மற்றும் பிரெஞ்சு மொழி ஆசிரியராகப் பணியாற்றினார். 1952-ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு (NACA - National Advisory Committee for Aeronautics) கணிதவியலாளர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தெரிந்துகொண்டு, 1953-ல் அங்கு சேர்ந்தார். விண்வெளி நிர்வாகமும் இணைக்கப்பட்டு நாகா பின்னர் நாசா (NASA- National Aeronautics and Space Administration) எனப் பெயர் மாற்றம் பெற்றது.

ஆரம்பத்தில் அவர் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களைக் கொண்ட ஒரு குழுவில் பொறியாளர்கள் விண்கலங்களை வடிவமைப்பதற்குத் தேவையான கடினமான கணிதக் கணக்கீடுகளை செய்யும் 'மனித கணினியாக' (Human Computer) பணியாற்றினார். விமானப் பாதைகள் (Flight Trajectories) மற்றும் சுற்றுப்பாதைகளைக் கணக்கிடுவதில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார்.

அமெரிக்காவின் முதல் மனித விண்வெளிப் பயணமான நாசாவின் மெர்குரி திட்டத்தில் முக்கிய கணிதவியலாளராகப் பணியாற்றிய கேத்தரின் ஜான்சன், விண்கலம் செல்லும் பாதை, ஏவுதள நேரம் மற்றும் அவசரகாலத் திரும்பும் வழிகள் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு நாசாவுக்கு உதவினார். 1961-ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கரான ஆலன் ஷெப்பர்டின் பயணத்திற்கான பாதையை இவர் வெற்றிகரமாகக் கணக்கிட்டார்.

உலகைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கரான ஜான் கிளென், தன்னுடைய விண்கலத்தின் மின்னணு கணினி கணிப்புகளை நம்ப மறுத்தார். அவர் கேத்தரின் ஜான்சனை நேரில் அழைத்து, காகிதத்தில் மின்னணு கணினி செய்த கணக்கீடுகளைச் சரிபார்க்கும்படி கேட்டுக் கொண்டார். " நீங்கள் சரி என்று சொன்னால் மட்டுமே நான் பறப்பேன்" என்று கூறி கேத்தரின் மீது முழு நம்பிக்கை வைத்தார். விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டால், விண்வெளி வீரர்கள் பத்திரமாகப் பூமிக்குத் திரும்புவதற்கான அவசரகால வழிகளையும் கேத்தரின் வரைபடமாக்கினார்.

1969ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சாட்டர்ன் V ராக்கெட் மூலம் அப்பல்லோ 11 விண்ணில் செலுத்தப்பட்டது. மிஷன் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் இப்பயணத்தை மேற்கொண்டனர். ஜூலை 20, 1969 அன்று நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் 'ஈகிள்' (Eagle) தரை இறங்கு கலத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பை அடைந்தனர். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி பதித்த முதல் மனிதர் என்ற அழியாப் புகழைப் பெற்றார்.

விண்கலம் பூமியில் இருந்து புறப்பட்டு நிலவைச் சென்றடைவதற்கான சரியான சுற்றுப்பாதை மற்றும் நேரத்தை (Launch Window) கேத்தரின் ஜான்சன் துல்லியமாகக் கணக்கிட்டார். நிலவைச் சுற்றி வந்த கமாண்ட் மாடல் (Command Module) விண்கலத்தையும், நிலவில் தரையிறங்கிய லூனார் லேண்டர் (Lunar Module) விண்கலத்தையும் தங்களுக்குள் ஒத்திசைக்கச் செய்வதற்கான முக்கியக் கணக்கீடுகளை அவர் வெற்றிகரமாகச் செய்தார்.

ஏப்ரல் 13, 1970 அன்று, பூமிக்கு அப்பால் சுமார் 2,00,000 மைல்கள் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது, அப்பல்லோ 13 விண்கலத்தின் ஆக்சிஜன் தொட்டி எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதனால் கட்டளை தொகுதியின் மின்சாரம், ஒளி மற்றும் நீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. விண்வெளி வீரர்கள் தங்கள் பிரதான விண்கலத்தை விட்டுவிட்டு, லேண்டிங் மாட்யூலை ஒரு உயிர் காக்கும் படகாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாசா விஞ்ஞானிகள் வீரர்களை எப்படி உயிருடன் பூமிக்கு அழைத்து வருவது எனத் தெரியாமல் திணறினர்.

இந்த சூழ்நிலையில், கேத்தரின் ஜான்சன், நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி விண்கலம் பூமியை நோக்கித் திரும்புவதற்கான புதிய மற்றும் துல்லியமான கணக்கீடுகளை மிக விரைவாகச் செய்தார். விண்கலம் நிலவின் மறுபக்கம் சென்று பூமியை நோக்கி 'ஸ்லிங்ஷாட்' முறையில் திரும்ப அவர் வகுத்த கணக்கீடுகள் பெரிதும் உதவின. விண்வெளி வீரர்கள் விண்கலத்தின் சரியான இருப்பிடத்தைக் கண்டறிய, 'ஒன்-ஸ்டார் அப்சர்வேஷன் சிஸ்டம்' என்ற புதிய வழிகாட்டுதல் காப்பு விளக்கப்படங்களையும் அவர் உருவாக்கிக் கொடுத்தார்.

1986-ஆம் ஆண்டு நாசாவில் தனது 33 ஆண்டு கால சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனது வாழ்நாளின் இறுதிப் பகுதியை இளம் தலைமுறையினருக்கு அறிவியல் துறைகளில் ஈடுபட ஊக்கமளிப்பதில் கழித்தார். பிப்ரவரி 24, 2020 அன்று வர்ஜீனியாவில் உள்ள நியூபோர்ட் நியூஸ் பகுதியில் உள்ள ஒரு ஓய்வூதிய இல்லத்தில் அவர் இயற்கை எய்தினார்.

நாசாவில் கறுப்பினப் பெண்களின் பங்களிப்பைப் போற்றும் விதமாக உருவான புகழ்பெற்ற 'ஹிடன் ஃபிகர்ஸ்' (மறைக்கப்பட்ட உருவங்கள்) திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் இவரும் ஒருவர். விண்வெளித் துறையில் இவரின் அசாத்திய பங்கீட்டிற்காக, 2015-ஆம் ஆண்டு அமெரிக்காவின் உயரிய குடிமகன் விருதான 'ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம்' (Presidential Medal of Freedom) இவருக்கு வழங்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸின் மிக உயரிய தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

``அழாதேம்மா... வயித்துல இருக்குற பாப்பா கிண்டல் செய்யும்!" - ஓர் உன்னத மருத்துவர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

உங்களை நெகிழ வைத்த மருத்துவர்கள் பற்றி 'மை விகடன்' பக்கத்தில் எழுதுங்கள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அமெரிக்காவில் 'வள்ளுவன் தெரு'.. நூலகங்களில் தமிழ் நூல்கள்! - தமிழ் மையத்தின் 16 ஆண்டு சாதனைப் பயணம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தூத்துக்குடி: சிஸ்டம் டெவலப்பரின் அர்த்தமுள்ள முன்னெடுப்பு; ட்ரெண்டிங்கில் கலக்கும் வாசிப்பு வண்டி!

எம்.சி.ஏ படித்துவிட்டு சிஸ்டம் டெவலப்பராக இருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த சைமன் அரவிந்த் சிங், புத்தகங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். 5,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்திருக்கும் சைமன், தா... மேலும் பார்க்க

விஜய்: ஒரு தலைமுறை தன்னைப் பார்த்துக் கொண்ட கண்ணாடி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஆய்வகத்திலிருந்து அமைதிப் பள்ளத்தாக்கு வரை: இந்திய தாவரவியலின் தாய் டாக்டர் ஜானகி அம்மாள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க