செய்திகள் :

``என்னை தவெக-வில் இணையச் சொன்னதே தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர்தான்" - அனிதா ராதாகிருஷ்ணன்

post image

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக இன்று காலை கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மார்க்கண்டேயனை பார்ப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், கருணாநிதி உள்ளிட்டோரை சந்திக்க விடாமல் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தியது காவல்துறை. அதன் காரணமாக காவல்துறையினர் மற்றும் திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

கீதா ஜீவன்

கீதா ஜீவன் கூறுகையில், ``எம்.எல்.ஏ மார்கண்டேயனை பார்க்கவிடாமல் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் கையில் ஒரு அலைபேசி கூட வைத்திருக்க அனுமதி இல்லை. மேலும் அவருடைய உதவியாளரை பார்க்க அனுமதிக்கவில்லை. வழக்கறிஞரை பார்க்க அனுமதிக்கவில்லை.

முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களை பார்க்க இதுவரை அனுமதிக்கவில்லை. அவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது அவருக்கு உடல் நிலையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளது. போலீஸாரிடம் கேட்டால், மேலே இருந்து உத்தரவு வரவேண்டும் என்று கூறுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினருக்கு எந்தவித நோட்டீஸும் வழங்காமல் எவ்வாறு கைது செய்ய முடியும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். எதிர்க்கட்சியை ஒடுக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

சட்டத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள். தமிழக வெற்றிகழக ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ மீது பாதிக்கப்பட்ட பெண் பல்வேறு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரிக்க கூட இல்லை இந்த அளவுக்கு ஒடுக்குமுறை அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்" என்றார்.

அனிதா ராதாகிருஷ்ணன்

முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், "சட்டமன்ற உறுப்பினர் அவர் மனதில் பட்டதைத்தான் பேசினார். சட்டமன்றத்தில் சரியான பதிலடி நடக்கும் என்று கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது?

என்னிடம் ரூரல் டி.எஸ்.பி சுதீர் என்பவரும் அவருடன் சபாரி போட்டு வந்த ஒருத்தர் என்னை பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணையச் சொல்லி மிரட்டினார். தி.மு.க.,வினரை எந்த காரணம் கொண்டும் அடக்க முடியாது தொட்டு பார்க்க முடியாது என்று கூறிவிட்டேன்.

மார்க்கண்டேயன் மனைவி எங்களிடம் தகவல் அளித்தார். `எனது கணவரை கூட்டி சென்று இருக்கிறார்கள் அவர் உடல்நிலை சரியில்லை முதுவலியில் உள்ளது' என்று கூறினார். இந்த ஆட்சி நான்கு மாதம் தான் இவர்கள் ஆட்டம் நான்கு மாதத்தில் இந்த ஆட்சி முடிந்துவிடும் பாராளுமன்றம் இப்பொழுது கூடியுள்ளது. அதனால் இந்த நாட்களில் இதற்கு முடிவு தெரிந்து விடும்." என்றார்.

திமுக பொதுச்செயலாளராகிறாரா கனிமொழி? தகவலும் பின்னணியும்!

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் லண்டன் சென்று திரும்பிய நிலையில், கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள். மேலும் வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளர் து... மேலும் பார்க்க

CJP: ``மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் ஏன் இன்னும் அமைதிகாக்கிறார்" - ராகுல் காந்தி கேள்வி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

``முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" - நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மண... மேலும் பார்க்க

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்திய... மேலும் பார்க்க

உக்ரைன் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு - பெயரை குறிப்பிடாமல் ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சக... மேலும் பார்க்க

பழநி கோயில் நில மோசடி: `அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் உடன்பாடில்லை' - பெ.சண்முகம்

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று (ஜூலை. 21) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழ... மேலும் பார்க்க