செய்திகள் :

``என் உழைப்பிற்கு மதிப்பளித்த தேசம்" - குடியரசு தின வரவேற்பு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சமந்தா!

post image

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவரால் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன், நடிகை சமந்தாவும் விருந்தில் கலந்துகொண்டார்.

அது தொடர்பான படங்களைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.

அதில், ``நான் வளர்ந்த காலத்தில் எனக்குத் துணையாகவோ, தட்டிக் கொடுக்கவோ யாரும் இல்லை. இங்கெல்லாம் வந்து சேருவேன் என்று ஒருபோதும் என் உள்ளுணர்வு சொன்னதே இல்லை.

செல்ல வேண்டிய பாதை எதுவென்றும் தெரியவில்லை... இந்தக் கனவுகள் எல்லாம் காண்பதற்கே எட்டாத உயரத்தில் இருந்தன. ஆனால், தளராமல் தொடர்ந்து உழைத்தேன். அந்த உழைப்பிற்கு மதிப்பளித்த இந்தத் தேசத்திற்கு நான் என்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Arijit Singh: ``இதோடு நான் விடைபெறுகிறேன்" - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாடகர் அரிஜித் சிங்

பாடகர் அரிஜித் சிங் என்ற பெயர் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்காவிட்டாலும், அவரின் பாடலை ஒருமுறையாவது கேட்காமல் இருந்திருக்க முடியாது.உதாரணமாக சூர்யாவின் 24 படத்தில் ''நான் உன் அழகினிலே" பாடல் ஆல... மேலும் பார்க்க

ஜனநாயகன்: விஜய் பட சென்சார் வழக்கு; சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்றம்! | Live Updates

ஜனநாயகன் சென்சார் வழக்கு விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது.ஆனால் படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்... மேலும் பார்க்க

``அதிக சம்பளம் கேட்டேனா? இதுதான் உண்மை" - தொடர் விமர்சனங்களுக்கு 'பளீச்' பதில் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து ... மேலும் பார்க்க

``இப்படியெல்லாம் நடக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை... என் ஆசையெல்லாம்" - நடிகை நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன் தெலுங்கில் அறிமுகமான முதல் படம் அலா மொதலைந்தி (Ala Modalaindi). 2011-ல் வெளியான ஒரு வெற்றிகரமான தெலுங்கு காதல் நகைச்சுவைத் திரைப்படம். பி.வி. நந்தினி ரெட்டி இயக்கிய இப்படத்தில்நடிகர... மேலும் பார்க்க