செய்திகள் :

`என் முடி ரொம்ப பிடிக்கும் தான்; ஆனால்.!' - திருமண நெருக்கடியிலிருந்து தப்பிக்க இளம்பெண் செய்த செயல்

post image

பெண்களுக்கு 25 வயதாகிவிட்டால், திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் வேலைகளை தொடங்கிவிடுவர். இன்னும் படிக்க வேண்டும் என்று சொன்னால் திருமணம் செய்து கொண்ட பிறகு படிக்கலாம் என்று குடும்பத்தில் கூறிவிடுவர். சில பெண்கள் மட்டும் இந்த திருமண நெருக்கடியில் இருந்து தப்பித்து 30 வயது வரை வந்துவிடுகின்றனர்.

இது போன்ற திருமண நெருக்கடியில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள இளம்பெண் ஒருவர் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பெண்கள் என்றாலே முடிதான் அவர்களுக்கு அழகு. ஆனால் இந்த பெண் தனது முடியை தியாகம் செய்து தனது திருமணத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

குடும்பத்தினர் தன்னைத் திருமணத்திற்கு வற்புறுத்தியதால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் காஜோல் என்ற பெண் தனது தலையை மொட்டையடித்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அப்பெண் தனது பதிவில், `எனக்குத் தலைமுடி மிகவும் பிடிக்கும் என்றாலும், திருமணத்திற்காகக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தைத் தாங்க முடியாமல், என் வாழ்க்கையைத் என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்த அதிரடி முடிவை எடுத்ததாக' அவர் கூறியுள்ளார்.

மேலும், ``ஆண்கள் எடுக்கும் முடிவுகளைக் காட்டிலும், பெண்கள் தங்களின் தோற்றத்தை மாற்றிக்கொள்ள எடுக்கும் முடிவுகளைச் சமூகம் ஏன் இவ்வளவு உற்று நோக்குகிறது?. மக்கள் என்னை முறைத்துப் பார்ப்பதற்கு நான் என்ன தவறு செய்தேன்?" என்று அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.

``ஒருமுறை வாழ்க்கை உங்கள் கையை விட்டுப் போய்விட்டால், உங்களைப் பற்றி விசாரிக்க யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள், அதற்காக எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்.

அனுதாபத்தைத் தேடுவதல்ல தனது நோக்கம். மாறாக, இதேபோன்ற அழுத்தத்தை எதிர்கொள்ளும் பெண்களை தமக்காக நிற்கவும், தங்கள் சொந்த அபிலாஷைகளில் கவனம் செலுத்தவும் ஊக்குவிக்க விரும்புவதாக' அவர் கூறினார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும், "உங்கள் சுதந்திரம் முடியை விட மேலானது", "உங்கள் தைரியத்தைப் பார்த்துப் பெருமைப்படுகிறோம்" என அந்தப் பெண்ணின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.

ஒரு பயனர், "பெண்கள் தங்களுக்காகத் தாங்களே எழுந்து நிற்பது எனக்கு மிகவும் பிடிக்கும், தைரியமாக இரு பெண்ணே" என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர், "உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன்... நீ நினைத்த வாழ்க்கையை வாழ்," என்று அவரது கனவுகளைத் தொடர ஊக்கமளித்துள்ளார்.

பலர் இந்த தனிப்பட்ட முடிவின் பின்னாலுள்ள தைரியத்தைக் குறிப்பிட்டு, "உங்கள் தைரியத்தைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன்" என்றும், "நீங்கள் செய்தது சரிதான், முடியை விட நமது சுதந்திரம் அதிக மதிப்புடையது" என்றும் பதிவிட்டுள்ளனர். "இந்தத் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுக்கள்" மற்றும் "உன்னைப் பெருமையாக நினைக்கிறேன் சகோதரி" போன்ற வாழ்த்துகளும் அவருக்குக் குவிந்த வண்ணம் உள்ளன.

வாட்ஸ்அப் மூலம் உயர் நீதிமன்ற பெண் நீதிபதியிடம் கைவரிசை; ரூ.6.02 லட்சம் பறித்த சைபர் கிரிமினல்கள்

நாடு முழுவதும் சைபர் கிரிமினல்கள் தொடர்ந்து தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். இதில் முதியவர்கள், பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் டிஜிட்டல் கைது மூலமும் இந்த மோசடி நடைபெறுக... மேலும் பார்க்க

Age is Just a number Bro... 60 வயதிலும் இளமை: ரகசியம் சொல்லும் சுவான்டோ டான்

சிங்கப்பூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும் மாடலுமான சுவான்டோ டான் (Chuando Tan), அண்மையில் தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழல்வதைப் போன்ற இவரது இளமை மாறாத தோற்றம்... மேலும் பார்க்க

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 5 ஆண்டுகளில் புதிதாக 30 சிப்காட் தொழில் வளாகங்கள்!

`தமிழ்நாடு 2030 இல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் என்பது திண்ணம்! திண்ணம்!' - தமிழ்நாடு அரசுதமிழ்நாட்டின் தொழில் வரலாற்றில் ஒரே இடத்தில் பல தொழில்கள் தோன்றுவதற்கு வகை செய்யும்... மேலும் பார்க்க

ஈரான் போர்; வெள்ளை மாளிகையில் சிறப்பு பிரார்த்தனை செய்த அதிபர் ட்ரம்ப் - புகைப்படங்கள் வைரல்!

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவிடம் இருக்கும் ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள்... மேலும் பார்க்க

'வாட்ஸ்அப் உரையாடலை மட்டும் வைத்து விவாகரத்து வழங்க முடியாது' - மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி

வாட்ஸ்அப் உரையாடல்களை மட்டுமே ஆதாரமாக வைத்து ஒருவருக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் குடும்ப நீதிமன்றம், மனைவி தரப்பு ... மேலும் பார்க்க