செய்திகள் :

`ஏன் அமைச்சர் கீர்த்தனா பெயரை முதலில் போட்டுள்ளீர்கள்?' - ஆட்சியரிடம் காட்டமான அமைச்சர் ஜெகதீஸ்வரி

post image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலம்ப விளையாட்டில் சிறந்து விளங்கும் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிக்கும் விழா இன்று காலை தொடங்கியது.  இந்த விழாவுக்காக மேடையில் அமைக்கப்பட்டுள்ள பேனரில் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்குபவர்கள் எனக் குறிப்பிட்டது.

ஆட்சியரிடம் விளக்கம் கேட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி

அதன் கீழ் தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

விழா மேடைக்கு வந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, “இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் என்னுடைய பெயர்தானே முதலில் இருக்க வேண்டும். ஏன் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரை முதலில் போட்டுள்ளீர்கள்?

நிகழ்ச்சிக்கே வராத அமைச்சரின் பெயரை முதலில் போட்டுள்ளீர்கள். ப்ரோட்டாகால் தெரியாதா? பல முறை சொல்லியாச்சு பலமுறை அதிகாரிகளிடம் சொல்லியும் மீண்டும் மீண்டும் அதிகாரிகள் இதே தவறை செய்து வருகிறார்கள். நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவா அல்லது எழுந்து செல்லட்டுமா” என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் கேள்வி எழுப்பினார் அமைச்சர் ஜெகதீஸ்வரி.

கேஎள்வி எழுப்பிய அமைச்சர் ஜெகதீஸ்வரி

மாவட்ட ஆட்சியரோ ”இனி இப்படி நடக்காது மேடம்” எனச் சொல்லி சமாதானம் செய்தார். ”இந்த மாதிரியான போக்கினை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என மாவட்ட ஆட்சியரிடம் கொந்தளிப்பில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.    

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க