செய்திகள் :

ஐதராபாத்: காங்கிரீட் கலவை டேங்கர் விழுந்து விபத்து; BMW காரில் சிக்கி வழக்கறிஞர் பலி

post image

ஐதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ் ராவ் தனது பி.எம்.டபிள்யூ காரில் ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கார் காஞ்சிகச்சேர்லா என்ற இடத்தில் இருக்கும் டோல்கேட் அருகில் வந்தது. அந்நேரம் அங்கு காங்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரி ஒன்று டோல்கேட் அருகில் வந்ததும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் காங்கிரீட் கலவை டேங்கர் அப்படியே அருகில் நின்ற பி.எம்.டபிள்யூ கார் மீது விழுந்தது.

இதில் கார் அப்படியே நொறுங்கியது. காருக்குள் இருந்த ஸ்ரீனிவாஸ் ராவை வெளியில் எடுக்கவே முடியவில்லை.

கார் மீது காங்கிரீட் டேங்கர்
கார் மீது காங்கிரீட் டேங்கர்

கிரேன் கொண்டு வரப்பட்ட பிறகே வழக்கறிஞர் காரில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டார். இந்த விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். கார் மீது காங்கிரீட் கலவை டேங்கர் விழுந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருக்கிறது.

டேங்கரில் அதிக அளவு காங்கிரீட் கலவை எடுத்து வரப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பக்கட்ட விசாரணையில் காங்கிரீட் கலவையுடன் வந்த லாரியை டிரைவர் திருப்ப முயன்றுள்ளார்.

வழக்கறிஞர் ராவ்
வழக்கறிஞர் ராவ்

ஆனால் லாரியில் சரியாக பிரேக் பிடிக்கவில்லை. அந்நேரம் அந்த வழியாக கார் வந்துள்ளது. டேங்கரில் இருந்த அதிகப்படியான எடை காரணமாக லாரி கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் காங்கிரீட் டேங்கர் நிலைதடுமாறி காரில் விழுந்ததில் அப்படியே கார் நொறுங்கியது.

விபத்து நடந்தவுடன் டோல்கேட் ஊழியர்கள் ஓடி வந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ் அமராவதியில் நடந்த பார் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்ப வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். காரில் வழக்கறிஞர் மட்டுமே இருந்ததார்.

சத்தீஸ்கர் வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடிப்பு: 10 பேர் பலி?; 40 பேர் படுகாயம்

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கிதாரி கிராமத்தில் அமைந்துள்ளது வேதாந்தா மின் உற்பத்தி நிலையம் (Vedanta Power Plant), இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கர பாய்லர் ... மேலும் பார்க்க

மண்டபம் அருகே டூ வீலர்கள் மோதல்; காய்ச்சல் சிகிச்சைக்குச் சென்ற சிறுமி உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு

மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவரின் மகள் நபியாஶ்ரீ (6). நபியாஶ்ரீக்கு காய்சல் அடித்ததால் மருத்துவரிடம் சிகிச்சை பெற தன் தம்பி கபில்தேவ் முருகன் (17) உடன் மூவரும் டூவீலரில... மேலும் பார்க்க

டாக்சி மீது டேங்கர் மோதி ஒரே பெரும் விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 11 பேர் பலி

மும்பை அருகில் உள்ள கல்யான் என்ற இடத்தில் இருந்து முர்பாட் என்ற இடத்திற்கு டாக்சி சேவை இயக்கப்படுகிறது. இந்த வழிதடத்தில் பஸ் குறைந்த அளவில் இயக்கப்படுவதால் ஷேர் டாக்சி அதிக அளவில் இயக்கப்படுகிறது. நேற... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ட்ரக்கிங் சென்ற மாணவர்கள்; வெடித்த ராக்கெட் லாஞ்சர் - என்ன நடந்தது?

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி பயிற்சி மையம் அமைந்துள்ள அனுமந்தபுரம் மலைப்பகுதிக்கு அனுமதியின்றி கல்லூரி மாணவர்கள் 6 பேர் டிரக்கிங் சென்றிருக்கின்றனர். அங்கி... மேலும் பார்க்க

நீலகிரி: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து; தவெக வேட்பாளரின் உறவினர்கள், தொண்டர்கள் காயம்|Photos

பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிராவில் கிணற்றுக்குள் விழுந்த கார்; 7 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி; விபத்து நடந்தது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகில் உள்ள தீண்டோரி சிவாஜி நகரில் கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துள்ளானது. கார் சாலையோர தடுப்பை மீறி அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்தது. கிணறு முழுக்க த... மேலும் பார்க்க