செய்திகள் :

ஐபோன் பாக்ஸில் மதிய உணவு கொண்டு வந்த மாணவன் - இணையத்தை கலக்கும் வீடியோ!

post image

வட இந்தியாவில் வகுப்பறைக்கு மாணவன் ஒருவன் ஐபோன் பாக்ஸில் மதிய உணவு எடுத்து வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வழக்கமாக மாணவர்கள் ஸ்டீல் பாக்ஸ் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் மதிய உணவு கொண்டு வருவார்கள். ஆனால், ஒரு மாணவன் செய்த காரியம் ஆசிரியரையே குழப்பத்தில் ஆழ்த்தியது.

வைரலாகும் வீடியோவின்படி, வகுப்பறையில் ஒரு மாணவன் 'ஆப்பிள் ஐபோன்' பாக்ஸ் வைத்திருப்பதை ஆசிரியை கவனித்துள்ளார். அந்த மாணவன் கையில் வைத்திருந்த பாக்ஸை பார்த்து "இதற்குள் என்ன இருக்கிறது?" என்று ஆசிரியர் கேட்டார்.

rep image

அதற்கு அந்த மாணவன் எந்தவித பதட்டமும் இல்லாமல், இது என்னுடைய லஞ்ச் என்று பதிலளித்தான். இதை கேட்டு ஆசிரியர் அதிர்ச்சியடைந்து. ”என்னது லஞ்சா? திற பார்க்கலாம்" என்று கேட்டிருக்கிறார்.

வகுப்பறையில் இருந்த மற்ற மாணவர்களும் ஆவலுடன் அந்த பாக்ஸை எட்டிப்பார்த்தனர்.

ஆசிரியர் சொன்னதை கேட்டு, அந்த மாணவன் ஐபோன் பாக்ஸை திறந்தான். உள்ளே பார்த்தால், மொபைல் போனுக்கு பதிலாக சப்பாத்திகள் பேப்பரில் மடித்து வைக்கப்பட்டிருந்தன.

இதனை பார்த்த ஆசிரியர் இதை யார் உனக்கு பேக் செய்து கொடுத்தது? இது பார்ப்பதற்கு சாப்பாட்டு டப்பா மாதிரியா இருக்கிறது? என்று கிண்டலாக கேட்க, "இதை நான் தான் பேக் செய்தேன்" என்று அந்த மாணவன் கூறியது வீடியோவில் பதிவாகியுள்ளது.​

இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மின்சாரம் பாய்ந்த பாம்பு; CPR கொடுத்து உயிரைக் காப்பாற்றிய நபர் - வைரல் வீடியோ

குஜராத் மாநிலத்தின் வல்சாத் பகுதியில் மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்த பாம்பு ஒன்றுக்கு CPR செய்து உயிரைக் காப்பாற்றிய வனவிலங்கு மீட்பு நிபுணரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மின்கம்பியில்... மேலும் பார்க்க

AI Video: 90 வயது தாத்தாவுக்கு பேரன் கொடுத்த AI Gift; கண்கலங்கிய குடும்பம்; வைரலான வீடியோ!

90வது வயதை எட்டியுள்ள தனது தாத்தாவுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் அவரது பேரன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.தொழில்நுட்ப உலகில் 'செயற்கை நுண்ணறிவு' பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி... மேலும் பார்க்க

நாகாலாந்து: 'வெட்டுக்கிளி, பட்டுப்புழு, பூனை' - திகைத்த சுற்றுலாப் பயணி; வைரலான உணவுப் பட்டியல்

நாகாலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் வருடாந்திர ஹார்ன்பில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த விழா இப்போது தொடங்கி நடந்து வருகிறது. விழாவிற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்க... மேலும் பார்க்க

IndiGo: ஒரே நாளில் 200 இண்டிகோ விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி; காரணம் என்ன?

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.நவம்பர் மாதத்தில் மட்டும் மொத... மேலும் பார்க்க

"சில்க் ஸ்மிதா பேருல மக்களுக்காக உதவுறேன், ஏன்னா.!" - நெகிழும் டீக்கடை குமார்!

ஈரோடு அகில்மேடு வீதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் குமார்.மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான இவர், கடந்த 20 வருடங்களாக சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் நேற்று ... மேலும் பார்க்க

Alpha Beard: தாடிக்குள்ளே 26 ஆங்கில எழுத்துக்கள்; பிரிட்டன் கலைஞரின் வைரல் வீடியோ!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் தனது தாடி மற்றும் மீசையை ஆங்கில அகரவரிசையின் 26 எழுத்துக்களாக மாற்றி இணையத்தில் வைரலாக்கியுள்ளார்.'A' முதல் 'Z' வரையிலான அனைத்து எழுத்துக்களையும் தனது முகத்தில் உள்ள முடிக... மேலும் பார்க்க