செய்திகள் :

`ஐயாவுக்காக சொத்தை அடமானம் வைத்து கடனில் தவிக்கிறோம்; நட்டாற்றில் விட்டதுபோல...' - பாமக அருள்

post image

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரின் மகன் அன்புமணி இடையே நீடித்து வந்த 18 மாத மோதல் முடிவுக்கு வந்திருக்கிறது. தைலாபுரத்தில் தந்தையும் மகனும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டது, மகிழ்ச்சி அளிப்பதாக அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தாலும், அவர்களின் உண்மை மனநிலையோ வேறாக இருக்கிறது. குறிப்பாக ராமதாஸ் பக்கம் நின்ற சேலம் அருள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. இந்த நிலையில்தான் சேலத்தில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ அருள் அலுவலகத்தில் பா.ம.க-வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அவரைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பா.ம.க அருள்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அருள், "மருத்துவர் ஐயாவும் அவரின் மகனும் இணைந்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒன்றரை வருடத்திற்கு முன்பு இணைந்திருந்தால் கோடிகளில் கடன்பட்டிருக்க மாட்டோம். ஐயாவுக்காகவும் கட்சிக்காகவும் சொத்தை அடமானம் வைத்து கடனில் தவிக்கிறோம். அதுமட்டுமன்றி முடிந்த தேர்தலில் பத்து அல்லது பதினைந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூடுதலாக தேர்வாகி இருப்பார்கள். கட்சி அங்கீகாரம் பெற்றிருக்கும். துணை முதல்வர் ஆகியிருப்போம். வாக்கு விழுக்காடும் இரண்டு சதவிகிதம் குறைந்திருக்காது. நாங்கள் மாணவர் பருவத்தில் இருந்து எந்த கட்சிக்கும் செல்லாமல் பாட்டாளி மக்கள் கட்சியிலேயே இருக்கிறோம். பாட்டாளி மக்கள் கட்சி மட்டும்தான் எங்களுக்குத் தெரியும். ஆனால், தற்போது எங்களை நட்டாற்றில் விட்டதுபோல் எண்ணுகிறோம். எந்த முடிவாக இருந்தாலும் அடுத்த இரண்டு நாள்களில் சொல்கிறோம்" எனக் கூறியிருக்கிறார்.

'ரூ.15 கோடிக்கு விலைபோனர்களா?' - ஷிண்டேயின் சிவசேனாவில் சேரும் 6 உத்தவ் கட்சி MP-க்கள்

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்கு மக்களவையில் 9 எம்.பி.க்கள் இருக்கின்றனர். அவர்களைத் தங்களது பக்கம் இழுக்க துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தொடர்ந்து ஆப்ரேசன் டைகர் என்ற பெயர... மேலும் பார்க்க

`பலம் பெறும் அதிருப்தி அணி' மம்தாவை கைவிட்ட விசுவாசிகள்; சிவசேனா வழியில் திரிணாமுல் காங்கிரஸ்?

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்ட பிறகு அக்கட்சியில் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அக்கட்சியை சேர்ந்த 80 எம்.எல்.ஏ.க்களில் 60க்கும் மேற்பட்டோர் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தல்: 'எதிர்க்கட்சியினர் வாபஸ் வாங்க ரூ.150 கோடி' - உத்தவ் கட்சி புகார்

மகாராஷ்டிரா சட்டமேலவைக்குக் காலியாக இருக்கும் 17 இடங்களுக்கு வரும் 18ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த எதிர்க்கட்சி வேட்பாளர்கள் 8 பேர் கடைசி நே... மேலும் பார்க்க

மகா. சட்டமேலவை: விலைபோன எதிர்க்கட்சி வேட்பாளர்கள்? - 6 ஆளும்கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 17 சட்டமேலவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 22-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். எதிர்க்கட்சிகள் சார்பாக ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் மகாராஷ்டிரா மாடல்; மம்தா பானர்ஜி இல்லாத திரிணாமுல் காங்கிரஸை உருவாக்க முயற்சி?

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ளது. மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜி கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். இத்தாக்க... மேலும் பார்க்க