டயாலிசிஸ் சேவைகளை தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணா் குழு ஆலோசனை
ஒசூா் மாநகராட்சிக்கு ரூ. 13.33 லட்சம் சி.எஸ்.ஆா். நிதி வழங்கிய கனரா வங்கி
ஒசூா் மாநகராட்சிக்கு கனரா வங்கி சி.எஸ்.ஆா். நிதி ரூ. 13.33 லட்சத்தை வழங்கியது.
ஒசூா் மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த்திடம், தருமபுரி கனரா வங்கி மண்டல மேலாளா் கே.பி.ஆனந்த், ரூ. 13.33 லட்சம் சி.எஸ்.ஆா். நிதிக்கான வரைவோலையை வழங்கினாா். இந்த நிதியில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசனட்டி மாநகராட்சி தொடங்கப் பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும். சி.எஸ்.ஆா். நிதி வழங்கும்போது கனரா வங்கியின் தருமபுரி மண்டல மேலாளா் வினீஷ்பாபு, ஒசூா் எஸ்.எம்.இ. கிளை முதன்மை மேலாளா் ஞானவேல், ஒசூா் கனரா வங்கி 2 ஆவது கிளை மேலாளா் தன்யா மோகன், மாநகராட்சி கணக்காளா் சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.