செய்திகள் :

ஒண்ணு இல்ல, ரெண்டு! ஒரே தொடரில், கார்ல்சனின் சொந்த ஊரில் இருமுறை வீழ்த்தி பிரக்ஞானந்தா செய்த சம்பவம்

post image

செஸ் உலகின் சக்கரவர்த்தி என வர்ணிக்கப்படும் மேக்னஸ் கார்ல்சனை, அதுவும் அவரது சொந்த மண்ணில், ஒரே தொடரில் இருமுறை வீழ்த்துவதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனை. அந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா.

நார்வே செஸ் 2026 தொடரின் எட்டாவது சுற்றில், செவ்வாயன்று நடந்த கிளாசிக்கல் ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் ஒருமுறை வீழ்த்தி ஒட்டுமொத்த செஸ் உலகையும் தன்பக்கம் திருப்பியுள்ளார் பிரக்ஞானந்தா.

Praggnanandha | பிரக்ஞானந்தா

சரித்திரம் படைத்த பிரக்ஞானந்தா!

இந்த வெற்றி, பிரக்ஞானந்தாவின் கோப்பை கனவுக்கு உயிரூட்டியது மட்டுமல்ல, புதிய சரித்திரத்தையும் படைத்துள்ளது. ஒரே தொடரில், கிளாசிக்கல் ஆட்டங்களில் கார்ல்சனை இருமுறை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டில் கார்ல்சனை கிளாசிக்கல் போட்டிகளில் இருமுறை தோற்கடித்த முதல் வீரரும் பிரக்ஞானந்தாதான். கருப்பு நிற காய்களுடன் விளையாடி, கார்ல்சனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பிரக்ஞானந்தாவின் ஆட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கார்ல்சனின் முகத்தில் அப்பட்டமான ஏமாற்றம்.

தோல்வியை ஒப்புக்கொள்வதைத் தவிர கார்ல்சனுக்கு வேறு வழி இருக்கவில்லை. பிரக்ஞானந்தாவின் அபார திறமைக்கு முன் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தோல்வி உறுதியானதும், ஏமாற்றத்துடன் பிரக்ஞானந்தாவுடன் கைகுலுக்கிவிட்டு, தலையை ஆட்டியபடியே அங்கிருந்து எழுந்து சென்றார் கார்ல்சன். சொந்த மண்ணில் இளம் இந்திய வீரரிடம் இருமுறை வீழ்ந்ததன் விரக்தி அவரது முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.

கோப்பை யாருக்கு? சூடுபிடிக்கும் போட்டி!

இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம், எட்டாவது முறையாக நார்வே செஸ் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இருந்த கார்ல்சனின் கனவில் இந்தத் தோல்வி பேரிடியாக விழுந்துள்ளது. தொடர் முடிய இன்னும் இரண்டு சுற்றுகளே உள்ள நிலையில், நடப்பு சாம்பியனான கார்ல்சனின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. இந்தத் தொடரில் அவர் சந்தித்த நான்காவது கிளாசிக்கல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளிப் பட்டியலில் அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் வெஸ்லி சோ 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். பிரான்சின் ஃபிரௌஜா 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷை கிளாசிக்கல் ஆட்டத்தில் வீழ்த்தி ஃபிரௌஜா இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

Gukesh - குகேஷ்
Gukesh - குகேஷ்

வாய்ப்பை நழுவவிட்ட குகேஷ்

இந்தத் தோல்வியின் மூலம் குகேஷின் நார்வே செஸ் கோப்பை கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது 8 புள்ளிகளுடன் இருக்கும் அவரால், மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வென்றால்கூட அதிகபட்சமாக 14 புள்ளிகளையே எட்ட முடியும். இது கோப்பையை வெல்ல போதுமானதாக இருக்காது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகி வரும் குகேஷ், இந்தத் தொடரில் சந்தித்த மூன்றாவது கிளாசிக்கல் தோல்வி இதுவாகும்.

ஆனால், பிரக்ஞானந்தாவுக்கான கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. கார்ல்சனின் கோட்டையை அவரது சொந்த மண்ணிலேயே இருமுறை தகர்த்தெறிந்த இந்த இளம் புயல், பட்டத்திற்கான போட்டியில் தன்னை ஒரு வலிமையான போட்டியாளராக நிலைநிறுத்தியுள்ளார். கடைசி இரண்டு சுற்றுகளும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

'காலத்துக்கு ஏத்த மாதிரி மாறனும்!' - 38 வயதில் விராட் கோலி எப்படி சாதித்தார்?

ஆர்.சி.பி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. விராட் கோலியின் நீண்ட கால கனவு இது. ஆனால், அவருடைய கேப்டன்சியில் இந்த சாதனையை அவரால் நிகழ்த்தவே முடியவில்லை. ரஜத் பட்டிதார் வந்த பிற... மேலும் பார்க்க

RCB: "ஹாட்ரிக் கப் அடிக்கிறதுக்கு ஐடியா பண்ணப் போறோம்!" - உற்சாகத்தில் ரஜத் பட்டிதார்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் ஆகியிருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கும் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பத்திரிகையாளர் சந... மேலும் பார்க்க

'இப்படித்தான் 2 கப் அடிச்சோம்!' - வெற்றி ரகசியத்தை விளக்கும் தினேஷ் கார்த்திக்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி Dinesh Karthikஅணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்... மேலும் பார்க்க

முதலில் தோல்வி; பின்னர், 'பேருந்தில் மின்கசிவு' - குஜராத் டைடன்ஸ் அணிக்கு அடுத்தடுத்த பிரச்னைகள்

நேற்று நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில், ஆர்.சி.பி கோப்பையைக் கையிலேந்த, குஜராத் டைடன்ஸ் தோல்வியைத் தழுவினர். இந்தப் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் முடித்துவிட்டு, தாங்கள் தங்... மேலும் பார்க்க

'தோத்தாலும் பெருமையா இருக்கு சார்...' - குஜராத் கேப்டன் சுப்மன் கில்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி.கில்தோல்விக்கு பிறகு பேசிய குஜராத் கேப்டன் கில், '180–1... மேலும் பார்க்க

'நான் விக்கெட் எடுக்கலன்னாஹேசல்வுட் எடுப்பார்... அவர் எடுக்கலன்னா...' - ரகசியம் கூறும் RCB பௌலர்கள்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி.கோலிஆர்.சி.பியின் வெற்றிக்கு உதவிய சீனியர் பௌலர்களான பு... மேலும் பார்க்க