செய்திகள் :

ஒரே ஒரு ரெட் கார்டு; 60,000 இலவச பீட்சாக்கள் - அமெரிக்க வீரரின் தவறால் ரசிகர்களுக்கு ஜாக்பாட்!

post image

அமெரிக்க கால்பந்து வீரர் ஃபோலாரின் பலோகன் உலகக் கோப்பை போட்டியில் வாங்கிய ஒரு ரெட் கார்டு, அவரது அணிக்கு தற்காலிக பின்னடைவைக் கொடுத்தாலும், ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக மாறியுள்ளது.

பிரபல பீட்சா நிறுவனமான டோமினோஸ், இந்த ரெட் கார்டால் சுமார் 60,000-க்கும் மேற்பட்ட இலவச பீட்சாக்களை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இது கால்பந்து ரசிகர்களுக்கு இரட்டைக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

திட்டம் போட்ட டோமினோஸ்!

இந்த அறிவிப்பு திடீரென வந்தது அல்ல. 2026 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே, டோமினோஸ் நிறுவனம் ஒரு வித்தியாசமான விளம்பர சலுகையை அறிவித்திருந்தது.

அதாவது, "அமெரிக்க தேசிய அணியின் வீரர் யாராவது போட்டியில் ரெட் கார்டு பெற்றால், ரசிகர்களின் சோகத்தைப் போக்க '$1 மில்லியன் மதிப்புள்ள எமர்ஜென்சி பீட்சாக்கள்' இலவசமாக வழங்கப்படும்" என மே மாதமே உறுதியளித்திருந்தது.

தற்போது போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவுக்கு எதிரான போட்டியில் பலோகன் ரெட் கார்டு பெற்றதால், அந்த வாக்குறுதி நிறைவேறும் தருணம் வந்துவிட்டது.

டோமினோஸ்

ரெட் கார்டும், சரித்திர வெற்றியும்!

பொதுவாக, ஒரு முக்கிய வீரர் ரெட் கார்டு பெற்று வெளியேறினால், அது அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், புதன்கிழமை நடந்த இந்த நாக்-அவுட் போட்டியில் அப்படி நடக்கவில்லை. போட்டியின் இரண்டாம் பாதியில் பலோகன் வெளியேற்றப்பட்ட பிறகும், அமெரிக்க அணி மனம் தளரவில்லை.

82-வது நிமிடத்தில் மாலிக் டில்மேன் அடித்த ஒரு அற்புதமான ஃப்ரீ-கிக் கோலால், அமெரிக்கா வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் அமெரிக்கா தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து, அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 16) முன்னேறியுள்ளது. அணியின் வெற்றியும், இலவச பீட்சா அறிவிப்பும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹீரோவும், வில்லனும்!

இந்த போட்டியில் ரெட் கார்டு வாங்குவதற்கு முன்பு வரை, ஃபோலாரின் பலோகன்தான் அமெரிக்க அணியின் நட்சத்திரமாக ஜொலித்தார். இந்த தொடரில் தனது மூன்றாவது கோலை இந்தப் போட்டியில்தான் அவர் அடித்திருந்தார். இருப்பினும், அவர் செய்த ஃபவுலின் தீவிரத்தைப் பொறுத்து, அடுத்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அணிக்கு ஒரு பின்னடைவாக இருக்கலாம்.

இலவச பீட்சாவை பெறுவது எப்படி?

இந்த சலுகையைப் பெற விரும்பும் ரசிகர்கள், டோமினோஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் ஜூன் 10-ம் தேதி இரவு 11:59 மணிக்குள் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். மேலும், அவர்கள் டோமினோஸின் ரிவார்ட்ஸ் திட்டத்திலும் உறுப்பினராக இருக்க வேண்டும். இலவச 'எமர்ஜென்சி பீட்சா' பெறத் தேர்ந்தெடுக்கப்படும் ரசிகர்கள், இந்த சலுகையை 2026-ம் ஆண்டு வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.!

மெஸ்ஸியுடன் கோல்கள் சமம், ஆனால் முதலிடத்தில் எம்பாப்பே! கோல்டன் பூட் போட்டியை மாற்றுவது எது?

2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோல்டன் பூட் விருதுக்கான போட்டி நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உச்சக்கட்ட பரபரப்பில் இருக்கிறது. பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்... மேலும் பார்க்க

தவறவிட்ட பெனால்டி, படைத்த புதிய வரலாறு! 30-க்குள் 20 கோல்கள் அடித்த முதல் வீரர் எம்பாப்பே

சாதனை மேல் சாதனை. பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பேவின் பெயர் மீண்டும் ஒருமுறை உலகக் கால்பந்து வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. 2026 FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில், மொராக்கோ அணிக்கு எதிராக இர... மேலும் பார்க்க

FIFA: பழிதீர்க்குமா மொராக்கோ? இங்கிலாந்தை வீழ்த்துவாரா ஹாலண்ட்? - அனல் அடிக்கும் காலிறுதி ஆட்டங்கள்!

கடைசி நிமிட கோல்கள், அதிர்ச்சித் தோல்விகள், நம்பமுடியாத கம்பேக்குகள், ஜாம்பவான்களின் கண்ணீருடன் கூடிய பிரியாவிடை என அத்தனை உணர்ச்சிகளையும் ஒருங்கே கொட்டி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்ற... மேலும் பார்க்க

ARG vs EGY : கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோ; காட்டமான எகிப்து கோச்! - பரபரப்பான நொடிகளின் தொகுப்பு!

அர்ஜென்டினா vs எகிப்து: பரபரப்பான நொடிகளின் தொகுப்பு.!அர்ஜென்டினா vs எகிப்து: பரபரப்பான நொடிகளின் தொகுப்பு.!அர்ஜென்டினா vs எகிப்து: கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோஅர்ஜென்டினா vs எகிப்து: கொண்டாட்டத்தி... மேலும் பார்க்க

`உலகக்கோப்பையில் மெஸ்ஸி நீடிக்க எங்களை ஏமாற்றிவிட்டார்கள்!' - எகிப்து கோச்'சின் நேரடி குற்றச்சாட்டு

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்த எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன், நடுவர்களின் முடிவுகள் ஒருதலைபட்ச... மேலும் பார்க்க

FIFA-வின் செல்லப் பிள்ளையா அர்ஜென்டினா? - எகிப்துக்கு எதிரான தீர்ப்புகளால் கொந்தளிக்கும் ரசிகர்கள்!

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி, எகிப்துக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி நிமிடங்களில் அரங்கேறிய இந்த அசாத்... மேலும் பார்க்க