செய்திகள் :

"ஒவ்வொருவரின் தலையிலும் கடன் சுமையை ஏற்றியது உங்கள் தலைவர்தான்"- ரகுபதிக்கு மரிய வில்சன் பதிலடி

post image

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ ரகுபதி, "அப்பாவைக் காணோம் எனப் பேசுகிறீர்களே... மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், நான் முதல்வன் என திட்டங்களில் பலனடைந்த மக்களின் மனங்களில் எங்களின் தலைவர் வாழ்கிறார்.

ரகுபதி
ரகுபதி

அண்ணன் சீர் திட்டத்துக்கு 812 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறீர்கள். மூவலூர் ராமாமிர்தம் அம்மையர் திட்டத்தின் கீழ் மட்டுமே ஆண்டுக்கு 1 லட்சம் பெண்கள் எங்கள் ஆட்சியில் பயனடைந்தார்கள்.

இப்போது எல்லா திருமணமாகும் பெண்களுக்கும் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை என்றால் தலைக்கு 1 லட்சம் ரூபாய் செலவாகும். ஆக, ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் இல்லாமல் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது" என்று கூறினார்.

அதற்கு பதில் கொடுத்த நிதியமைச்சர் மரிய வில்சன், "மகளிர் உரிமைத் தொகையில் உங்கள் தலைவர் இருக்கிறார் என்கிறீர்கள். அதுமட்டுமல்ல, தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் 1,28,000 ரூபாய் கடன் சுமையை ஏற்றியதும் உங்கள் தலைவர்தான்" என்று கூற, தவெக எம்எல்ஏக்கள் கைதட்டி ஆதரவு தெரிவித்தனர்.

மரிய வில்சன்
மரிய வில்சன்

தவிர சட்டமன்றத்தில் பேசிய கே.என்.நேரு, "நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு நிதித்துறை செயலாளர் பேசினார். 50 ஆண்டுகள் ஆனாலும் கடன் வாங்குவதை நிறுத்த முடியாது என்கிறார். நீங்கள்கூட ஆட்சிக்கு வந்த 60 நாள்களில் 20,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறீர்கள்.

நாங்கள் இதைக் குற்றமாகச் சொல்லவில்லை. ஒரு அரசு கடன் வாங்கிதான் செயல்பட முடியும். ரிசர்வ் வங்கி அனுமதித்தால் மட்டுமே கடன் வாங்க முடியும். உரிய வருவாய் இருந்தால் மட்டுமே ரிசர்வ் வங்கி கடன் வாங்க அனுமதி கொடுக்கும். ஆக, எவ்வளவு கடன் வாங்கினோம் என்று பார்க்கக் கூடாது. எவ்வளவு திட்டங்களை அமல்படுத்தினோம் என்றே பார்க்க வேண்டும்" என்றார்.

சிப் தயாரிக்க உதவும் Polysilicon-க்கு வரி விதிக்கும் அமெரிக்கா; சீனாவிற்கு நெருக்கடி?

உலக அளவில் பாலிசிலிகான் சந்தையில் சீனாவிற்கு என்று தனி இடம் உண்டு. செமி கண்டக்டர்கள் மற்றும் சோலார் பேனல்கள் தயாரிப்பில் பாலிசிலிகான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு செக் வைப்பது போல, அமெரிக்கா பு... மேலும் பார்க்க

"அதை உங்க அப்பாவிடம்தான் கேட்கணும், அவரை இங்க காணோம்..!"- ஆதவ் அர்ஜுனா Vs உதயநிதி

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ்மாக் தொடர்பான விவாதத்தின்போது, ``717 கடைகளை முழுமையாக மூடிவிட்டோம். எந்தெந்த கடைகளை மூடினோம் என்பதை கடை எண்களோடு தெரியப்பட... மேலும் பார்க்க

மயிலாடுதுறை சந்திப்பு: புது கழிவறைக்கு பூட்டு; பழைய கழிப்பறையால் போக்குவரத்து நெரிசல்; மக்கள் சிரமம்

மயிலாடுதுறை ரயில் சந்திப்பானது மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் நெடுந்தூரப் போக்குவரத்திற்கு முக்கிய ஆதரமாக விளங்குகிறது. மயிலாடுதுறை ரயில் சந்திப்பினை அதிநவீன வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ரயில... மேலும் பார்க்க

``என் அனுமதியின்றியே பாஜக தலைவர்கள் என் புகைப்படத்தை வெளியிட்டார்கள்" - சோனம் வான்சுக்

மத்திய அரசைக் கண்டித்து சிஜேபி முன்னெடுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்து, உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக். அமைச்சரின் ராஜினாமாவைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு... மேலும் பார்க்க

அமெரிக்கவிடம் குறைந்த ஆயுதங்கள்! பீட் ஹெக்செத்தை சாடிய ட்ரம்ப்? ட்ரம்ப் ஏன் பின்வாங்குகிறார்?

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 5 மாதங்கள் முடிந்துவிட்டது. ஈரானும் சரி... அமெரிக்காவும் சரி... இப்போது வரை சளைத்ததாகத் தெரியவில்லை. இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கிக் கொண்டே தான் இருக்கின்றன. ஈரான் ... மேலும் பார்க்க

2021 - 2026: பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்கள்! எவ்வளவு செலவு தெரியுமா?

2021 முதல் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரசு கருவூலத்திலிருந்து குறைந்தது ரூ.557.51 கோடி செலவிடப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மாநிலங்களவை உறுப்பினர்களா... மேலும் பார்க்க