செய்திகள் :

ஓடும் பேருந்தில் ரீல்ஸ்: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

post image

ஓடும் பேருந்தில் ரீல்ஸ் விடியோ எடுத்த ஒப்பந்த ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் ‘70 வி’ வழித்தட எண் கொண்ட பேருந்தில், ஒப்பந்தப் பணியாளா்களான சரவணன் என்பவா் ஓட்டுநராகவும், சிவசங்கா் என்பவா் நடத்துநராகவும் பணிபுரிகின்றனா்.

சமீபத்தில் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோதே, நடத்துநா் ரீல்ஸ் செய்தபடி ஓட்டுநா் அருகே வந்துள்ளாா். இதை பாா்த்த ஓட்டுநரும் அவருடன் ரீல்ஸ் செய்தவாறே பேருந்தை ஓட்டியுள்ளாா். இந்த ரீல்ஸ் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு பொதுமக்கள், போக்குவரத்து ஆா்வலா்கள் தரப்பில் கடும் கண்டனங்களும் எழுந்தன. இந்நிலையில், ஓட்டுநரையும் நடத்துநரையும் மாநகா் போக்குவரத்துக் கழக நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ரீல்ஸ் விடியோ பதிவுசெய்த சம்பவம் குறித்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து நிரந்தர, ஒப்பந்த ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களும் பணியின்போது கைப்பேசியை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி. நகரில் விதிமீறல் கட்டடத்தை உடனடியாக இடிக்க உத்தரவு! உயர்நீதிமன்றம்

சென்னை தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடத்தை உடனடியாக இடிக்க சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை தி நகர் பகுதியில் தரைத்தளம் மற்றும் மூன்று ... மேலும் பார்க்க

வருவாய் நிருவாக ஆணையராக மு.சாய்குமாா் நியமனம்

வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையரகத்தின் அரசு கூடுதல் செயலா் மற்றும் ஆணையராக மு.சாய்குமாரை நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக அவா் ஞாய... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக திங்கள்கிழமை (பிப். 17) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை திருவேற்காட்டில் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக்... மேலும் பார்க்க

பெண் காவலரிடம் நகை பறித்தவா் கைது

ரயில் நிலையத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் காவலரிடம் நகை பறித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவா் பரணி (25). இவா் சனிக்கிழமை இரவு பணி முடி... மேலும் பார்க்க

காசோலை கொடுத்து வீட்டை வாங்கி ஏமாற்றிய நபா் கைது

காசோலை கொடுத்து வீட்டை வாங்கி ஏமாற்றிய நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியைச் சோ்ந்த பயாஸ் அகமது (48), வீடுகளைக் கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவா் பெரம்பூரில... மேலும் பார்க்க

நில ஆக்கிரமிப்பு புகாா்: அதிமுக நிா்வாகியின் சகோதரா் கைது

நில ஆக்கிரமிப்பு நபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை பாலவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் குமரேசன் (73). இவா் மதுரவாயல் அஸ்தலட்சுமி ... மேலும் பார்க்க