செய்திகள் :

ஓபிஎஸ்: `ஆதரவாளர்கள் கொடுத்த ட்விஸ்ட்!' - தேனியை விட்டுவிட்டு மதுரையில் இணைப்பு விழா! பின்னணி என்ன?

post image

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அதிமுகவின் விசுவாசி, ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவர், மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் என்றெல்லாம் புகழப்பட்ட  ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் நேர் எதிரியான திமுகவில் ஐக்கியமானது பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியது.  

மேலும் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய செல்வாக்கை காட்டுவதற்காக மதுரையில் உள்ள திருமங்கலத்தில் வரும் 7-ஆம்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன் ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கும் விழாவையும் நடத்த உள்ளார்.

இந்நிலையில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அவருடைய ஆதரவாளர்கள் பலரும் கடந்த ஒரு வாரமாக படிப்படியாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

குறிப்பாக கடமலை தெற்கு ஒன்றியத்தில் உள்ள மண்ணூத்து, சென்றாயபுரம், தேவேந்திரபுரம், கோம்பைத்தொழு, முத்துலாபுரம், வலம்புரி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த ஓ,பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர். மதுரையில் இணைப்பு விழா நடைபெறும் நிலையில் ஆதரவாளர்கள் கூட்டாக அதிமுகவில் சேரத் தொடங்கியுள்ளது ஓ.பி.எஸ் தரப்பில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

ஆனால் ஓ.பன்னீர்செல்வமோ இணைப்பு விழாவிற்கான வேலைகளில் மும்மரம் காட்டி வருகிறார். காரணம் தான் திமுகவில் இணைந்துள்ளது குறித்து தன்னுடைய ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய சொந்த மாவட்டத்தில் இணைப்பு விழாவை நடத்தாமல் மதுரையில் நடத்துவதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.  

இது குறித்து நம்மிடயே பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் முன்னாள் ஆதரவாளர்கள் சிலர், “திரும்பவும் அதிமுகவுடன் இணையும் வாய்ப்பு அமையும் என்று தான் காத்திருந்தோம். ஆனால் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கவில்லை.

கட்சியில் சேர்ந்ததோடு ஒவ்வொரு அமைச்சரையும் இவரே நேரில் சென்று சந்திக்கிறார். அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவரை அவர்கள் தானே வந்து சந்திக்க வேண்டும். இது அவரோடு சேர்ந்து எங்களையும் மரியாதை குறைவாக நடத்துவது போல உள்ளது,  மரியாதை இல்லாமல் இருக்க முடியாது என அதிமுகவில் சேர்ந்து விட்டோம்.

மதுரையில் நடைபெறும் இணைப்பு விழா பூமி பூஜை

நாங்கள் அதிமுகவில் சேர்வதை முன் கூட்டியே தெரிந்து கொண்டே மதுரையில் கூட்டத்தை நடத்துகிறார். ஏனெனில் தற்போது அவருடைய ஆதரவாளர்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர். இதனால் தன்னுடைய சொந்த மாவட்டமான தேனியில் இணைப்பு விழா நடத்தினால் கூட்டத்தை கூட்ட முடியாது என மதுரைக்கு மாற்றியிருக்கிறார். அங்கு இணைப்பு விழாவை நடத்தினால் அமைச்சர்கள் மூர்த்தி, பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன், மற்றும் கோ.தளபதி ஆகியோரே கூட்டத்தை கூட்டி விடுவார்கள் இதனால் தனக்கு பிரச்சனை வராது என நினைத்தே மதுரையில் இணைப்பு விழாவை நடத்துகிறார்” என்றனர்.

"பெட்ரோல் விலை உயர்வைப் பற்றிக் கவலையில்லை; ஈரானை வீழ்த்துவதே இலக்கு!" - அதிபர் ட்ரம்ப் உறுதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க ஆட்டோமொபைல் சங்கத்தின் (AAA) தரவு... மேலும் பார்க்க

இந்தியாவின் பிரதமரும் ட்ரம்ப் தானோ? - எல்லை மீறும் அமெரிக்கா... மௌனம் காக்கும் மோடி!

'உலகச் சந்தைகளில் எண்ணெய் இருப்பு தொடர்ந்து இருக்க வேண்டும்' என்பதற்காக இந்திய ரீஃபைனர்கள் தற்காலிகமாக 30 நாள்களுக்கு ரஷ்யா எண்ணெயை வாங்க அமெரிக்க கருவூலத் துறை அனுமதிக்கிறது'. இது அமெரிக்கக் கருவூல ச... மேலும் பார்க்க

திமுக-வுக்கு நாகூர் ஹனீபா; எம்.ஜி.ஆருக்கு? - அரசியல் வரலாற்றைப் பேசிய கட்சிப் பாடல்கள்! | சுவடுகள் 8

அரசியல் வரலாற்றைப் பேசிய கட்சிப் பாடல்கள்!நினைவுச் சுவடுகள் 08தேர்தல்கள் என்றாலே சத்தமும் இரைச்சலும்தான். தேர்தலை ஒரு திருவிழாவாக பார்க்கும் தமிழ்நாட்டில், தேர்தல் என்பது ஆட்டமும் பாட்டமும் நிறைந்ததாக... மேலும் பார்க்க

கச்சா எண்ணெய் விவகாரம்: `இன்னும் எவ்வளவு காலம் அமெரிக்காவின் மிரட்டல் தொடரும்?' - காங்கிரஸ் கேள்வி

அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்திருந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ர... மேலும் பார்க்க

`அடுத்து கியூபாதான்' - ஈரான் போரை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என கூறும் டொனால்டு ட்ரம்ப்

ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஈரானும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆரம்பத்தில் 5 வாரங்க... மேலும் பார்க்க