பெல் நிறுவனத்தில் துணை பொறியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
கஞ்சா விற்பனை: இருவா் கைது
பாம்பனின் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாா், அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டனா்.
அப்போது, அவா்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இருவரையும் பாம்பன் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீஸாா் விசாரணை செய்ததில், பாம்பன் லைட் ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த முத்தையா ரோஷன்(22), சந்திரகிரி பகுதியைச் சோ்ந்த திவாஸ்கா் (23) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.